எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

முகமாத்து..


முகமாத்து...

*******************

முகம் காட்டியும்

காட்டாமலும்

ஒரு முகமாத்து

பொதுவெளியில்...


எதெதெல்லாமோ

அன்பளிப்பு ...

அம்மா அப்பா கூட

கிடைக்கலாம்..


படுத்துக் கொண்டும்

அமர்ந்து கொண்டும்

ஜெயிக்கலாம்

எங்கு நின்றாலும்..


நிற்பவர்களை

அமர விடாமலும்

யோசிக்க விடாமலும்

செய்யலாம் இலவசத்தால்..


உபயப் பட்டயம்

எழுதாமல்

தொலைக்காட்சியும்

கணினியும்

சிந்திக்கும் திறனழித்து..


நெற்றிக்குப் பதிலாய்

ஆள்காட்டிவிரலில்

கறுப்பு நாமம்...

யார் யார் நாமத்தாலோ

வாழ்கவென்று சொல்லி


அடுத்த நாற்காலி

நமக்குத்தான்

அதுவரை ஆற அமர

செலவு செய்து விட்டு

ஓய்வெடுப்போம் சுழற்சிக்காய்..
15 கருத்துகள்:

 1. நல்ல கவிதை.

  //நெற்றிக்குப் பதிலாய்

  ஆள்காட்டிவிரலில்

  கறுப்பு நாமம்...

  யார் யார் நாமத்தாலோ

  வாழ்கவென்று சொல்லி//

  ஆம்:(!

  பதிலளிநீக்கு
 2. அப்பா, அம்மா என்ன... தாத்தா கூட கிடைத்து விட்டாரே.

  பதிலளிநீக்கு
 3. //நிற்பவர்களை

  அமர விடாமலும்

  யோசிக்க விடாமலும்

  செய்யலாம் இலவசத்தால்..//

  சொடுக் சொடுக் சாட்டையடி.....

  பதிலளிநீக்கு
 4. அடுத்த நாற்காலி

  நமக்குத்தான்//
  கனவுகள்,கற்பனைக்ள்.

  பதிலளிநீக்கு
 5. முதல் முறை உங்கள் மின்தளம் வருகிறேன்.நல்ல கருத்து .எளிய நடை வாழ்த்துக்கள்!
  யதார்த்தம் மறைத்து அதீதம் முன்னிருத்தியே பழக்கப்பட்ட தலைவர்கள்...அரசியலில் திரையுலகின் ஆளுமை எனும் சாபக்கேடு .....
  மறந்தும் மக்கள் யோசித்துவிடக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாய் இருக்கிறார்கள் ...இதோ இப்போது இலவசங்கள் ஊர்வலம் ...வெல்வது யாரோ தெரியாது ...ஆனால் தோற்பது மனிதம்.... அதுதான் வருத்தம்.

  பதிலளிநீக்கு
 6. நெற்றிக்குப் பதிலாய்

  ஆள்காட்டிவிரலில்

  கறுப்பு நாமம்...


  ...... வித்தியாசமாக யோசித்து இருப்பது தெரிகிறது.... சூப்பர் அக்கா!

  பதிலளிநீக்கு
 7. ///////நெற்றிக்குப் பதிலாய்
  ஆள்காட்டிவிரலில்
  கறுப்பு நாமம்... ///////////


  அக்கா இந்த வரிகளை வாசிக்கும்பொழுது சிரிப்பு வருகிறது . உண்மை நிலையை அழகாய் சொல்லி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி ரமேஷ்

  நன்றி மனோ

  நன்றி சினேகிதி

  நன்றி ராஜி

  நன்றி ராம்

  நன்றி யாரோ

  நன்றி சித்து

  நன்றி சங்கர்

  நன்றி மேனகா

  நன்றீ ஆர் ஆர் ஆர்

  நன்றி ரவிக்குமார்

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...