வியாழன், 7 ஏப்ரல், 2011

காற்றுக்கென்ன வேலி..

”அன்னக்கிளி உன்னத்தேடுதே.”. .. என்று பாடிய சோக சுஜாதாவை மறக்க முடியாது.. அந்தப்படத்துக்கு எதிர் மாறாய் அதிரடி காரெக்டர் ”அவள் ஒரு தொடர்கதை..” தொட்டால் பற்றும் நெருப்பு போல பேச்சு.. மிகத்துணிச்சலாய் அப்போதே அவர் நடித்த படம். உடை மாற்றுவது கூட ஜன்னல் வழியாய் எடுக்கப்பட்டிருக்கும்.
”விதி ., நூல்வேலி.”, என மறக்க முடியாத படங்கள் கொடுத்தவர். கமலுடன் ”கடல் மீன்கள்” படத்தில் ,”தாலாட்டுதே வானம்” என்ற பாடல்., ”அந்தமானைப் பாருங்கள் அழகு” என சிவாஜியுடன்., என பல பரிமாணங்கள்.


”கடவுள் அமைத்து வைத்த மேடை” பாடலில் அவரது பாவனைகள் ., அவரின் கொள்ளை கொள்ளும் அழகுச் சிரிப்பு., அந்த மச்சம்., மென்மையான நளினமான அழகிய பெண் அவர்.


”அவர்களில்” ., காற்றுக்கென்ன வேலி” பாடல் எனக்குப் பிடித்தது.. எப்போது கேட்டாலும் ஒரு இதம்.. ஒரு விடுதலை உணர்வு.. அலையைப் போன்றவள் பெண்., குதிரையைப் போல வேகம்., மன உணர்வுகளை அடுக்கடுக்காகப் பெருக வைக்கும் பாடல்..கட்டுப்பாடுகளற்றுப் பெருகும் ஒரு சுதந்திரம். மனம் பறப்பதுபோல..


அப்புறம் அக்கா ., அண்ணி என நடித்தாலும் அந்த விழிகளும் பார்வையும் சிரிப்பும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கும்.. எல்லோருக்கும் முதுமை வருகிறது., பிணி ., சாக்காடு எல்லாம் . ஆனால் சிலர் இறந்தாலும் இறப்பில்லை.. காற்றுக்கென்ன வேலி பாடல் கேட்கும் போதெல்லாம் அவர்தான் வருவார். ஆம்... காற்றுக்கென்ன வேலி.. காற்றோடு காற்றாய்க் கலந்த பின்னே..

8 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

விதி படத்திற்கு பிறகு சுஜாதா அலை துவங்கியது. எந்த ஒரு நடிகைக்கும் அம்மாதிரியான அலை உரூவானதில்லை.

Chitra சொன்னது…

It is sad....

May her soul rest in peace.

Rathnavel சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.
திருமதி சுஜாதாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது ?? இரட்டைச் சடை, தாவணியில் சுஜாதா அழகோ அழகு. சாந்தமான அழகு .

ஹுஸைனம்மா சொன்னது…

நூல்வேலியில் “நானா.. பாடுவது நானா”வும் நல்லாருக்கும். நல்ல நடிகை. பாந்தமான முகமும், பாவங்களும்.

உங்கள் தோழி சொன்னது…

ஸ்ரீவித்யா போன்றே மிக அற்புதமான நடிகை சுஜாதா.கடைசிவரை விரசமான பாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்தவர்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ரமேஷ்

நன்றி சித்து

நன்றி ரத்னவேல் சார்

நன்றி ரூஃபினா

நன்றி ஹுசைனம்மா

நன்றி தோழி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...