திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து..


ஓடு ஓடு போடு போடு

ஓட்டு போட்டு நாட்ட மாத்து

இல்ல வெலைக்கு போட்டு

ஒன் நிலைமையாவது மாத்து..


ஓட்டு வீடு காரை வீடாய்

ஒழுகினாலும் தார்சு வீடு..

பிள்ளை பெத்தா பேறு பணம்

வயசானா முதியோர் பணம்


ஒரு ரூவாய் அரிசியோடு

ரேஷன் மளிகை குழம்போடு

தொலைக்காட்சி பசப்போடு

தொலையாத கசப்போடு


இப்படித்தான் வாழப்போறே

உனக்கெதுக்கு வெட்டி கோவம்

செல்லா ஒட்டாய் செல்லாம ஆக்கி

கள்ளஓட்டுக்கு வழி செய்யாதே..


எல்லாரும் சம்பாதிக்கிறான்

எங்கேயும் லஞ்சம்தான்

அன்னா என்ன அண்ணா என்ன

யார் வந்தாலும் மாறாதிது


எலவசமும் லஞ்சமும் கௌரதையும்

கார்சவாரியும் உனக்கும் கிடைக்கும்

ஆனா போனா ஐந்து வருடத்துக்கு

ஒரு முறையாவது ராஜா நீயும்


ஓடு ஓடு போடுபோடு

ஓட்டு போட்டு நாட்ட மாத்து

இல்ல வெலைக்கு போட்டு

உன் நிலைமையாவது மாத்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 10., 2011., திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை..))

..

18 கருத்துகள் :

கீற்று சொன்னது…

இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற குரல் கொடுக்கும் நபர்கள் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு தமிழனுக்கு எதிரா செயல்படும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் என்ன பன்றது? ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரா எந்த ஓட்டுகட்சி குரல் கொடுத்துச்சி(அறிக்கை விடுரது அல்ல). இங்க தமிழ்நாட்டுல காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு, ஓகேனகல் இப்படி தமிழனோட எந்த பிரச்சனையாவது இந்த ஓட்டுபொருக்கிங்களால தீர்க்க முடிந்ததா? அமெரிக்க தேர்தல்ல வேணா நாம ஓட்டுபோடலாம்(ஏன்னா அவங்க தானே ந்ம்மை ஆள்வது).

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

இன்றைக்கு தேவையான பதிவு..
வாழ்த்துக்கள்..

காவேரிகணேஷ் சொன்னது…

இந்தாரு,

சும்மா கவிதய எழுதி கடுப்பேத்தாதேக்கா,

முதல்ல காச கொடு,
அப்புறம் தான் கவிதய படிப்போம்.

எங்க அண்ணெ, இரநூறு கொடுத்துச்சு,
விரசா போய் ஓட்டு போடனூம்.

வரட்டாக்கா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>அன்னா என்ன அண்ணா என்ன

யார் வந்தாலும் மாறாதிது

டைமிங்க் ரைமிங்க் லைன்ஸ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சரியான பதிவுக்கு மிகச்சரியான டைட்டில்

எல் கே சொன்னது…

ஓட்டு போட்டாச்சு, கருத்தும் சொல்லியாச்சு வர்டா

Raja=Theking சொன்னது…

India will grow only When we put 100% vote . .

Raja=Theking சொன்னது…

Vote against congress and DMK

Chitra சொன்னது…

அக்கா, குங்குமத்தில் உங்கள் பதில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

விஜய் சொன்னது…

இனமழித்த கை
குலமழித்த கை
தொப்புள்கொடி உறவழித்த கை
மறவாதீர்

நிரூபன் சொன்னது…

விழிப்புணர்வுக் கவிதையினைச் சந்த நடையில் சொல்லியிருக்கிறீர்கள்..

அமைதிச்சாரல் சொன்னது…

அக்குவேறு ஆணி வேறா அலசிட்டீங்க தேனக்கா..

ராமலக்ஷ்மி சொன்னது…

தேவையான கவிதை.

சசிகுமார் சொன்னது…

அக்கா நீங்க எந்த ஓட்டு போடா சொன்னிங்க திரட்டிகளில் தானே நான் போட்டு விட்டேன்.

சகாதேவன் சொன்னது…

//அன்னா என்ன அண்ணா என்ன
யார் வந்தாலும் மாறாதிது//
சொன்னா நீ கேட்கவா போறே
கண்ணா நீ பாத்து போடு.
எப்படி?
சகாதேவன்

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஹ்ம்ம்ம்.பெருமூச்சு விடத்தான் முடிகிறது.
எப்பொழுது சக்தி கிடைக்கும். இன்னோரு பாரதி வரவேண்டுமோ...
தேவையான வரிகள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றீ கீற்று

நன்றி சௌந்தர்

நன்றீ கணேஷ்

நன்றி செந்தில்

நன்றி கார்த்திக்

நன்றி ராஜா

நன்றீ சித்து

நன்றீ விஜய்

நன்றி நிரூபன்

நன்றி சாந்தி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி சசி

நன்றி சகாதேவன்

நன்றீ வல்லிசிம்ஹன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...