எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 ஏப்ரல், 2011

வங்கி டெப்பாசிட்., பாண்டுகள்., ஹவுசிங் லோன்., மார்ட்கேஜிங்., சிட்ஃபண்ட்ஸ்.. முதலீடுகள். (5).

கே. 1. ஒரு வங்கியில் நான் பணம் டெப்பாஸிட் செய்யச் சென்றிருந்தேன். ரூ 10,000 செலுத்தினால் 10 வருடங்களில் 24, 345 ரூபாயாக ( 9 %) வட்டியில் முதிர்வடைகிறது . இது போன்ற திட்டங்கள் வேறெந்த வங்கியிலும் உண்டா..?

பதில் ;- எல்லா வங்கிகளிலும் ஃபிக்ஸட் டெப்பாஸிட் இருக்கு.. நார்மலா எல்லா வங்கியிலும் இரண்டரை மடங்கு பெருக வேண்டும். இதுதான் ரீஸனபிள் இன்வெஸ்ட்மெண்ட்..ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு பேரில் இருக்கும்..

கே. 2 . வங்கி பாண்டுகள் என்றால் என்ன அதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்.. ? அதிகபட்சம் எவ்வளவு..? குறைந்த பட்சம் எவ்வளவு.. ? அதில் முதலீடு செய்வதால் என்ன பயன்..?


பதில் ;- வங்கி பாண்டுகள் என்றால் வங்கிப் பத்திரங்கள்.. அதில்முதலீடு செய்வது.. குறைந்த பட்சம் ரூபாய் 30,000 இல் இருந்து அதிகபட்சம் ரூபாய் ஒரு லட்சம் வரை முதலீடு செய்யலாம் பாண்டுகளில்.. வருமானவரி விலக்கு தேவைப்பட்டால் பாண்டுகளில் முதலீடு செய்யலாம்.. வருமான வரி விலக்குக்கு வங்கிகளில் வைப்புத்தொகை வைப்பதைவிட பத்திரங்களில் ( INFRA STRUCTURE BOND ) ஆகப் போடுவது நல்லது.

கே. 3. ஹவுசிங் லோன் நிறைய வங்கிகளில் தருகிறார்கள்..வட்டி விகிதம் மாறுமா..? ஒரே வட்டியா.?. எப்படித்தேர்ந்தெடுப்பது..?

பதில் :- வட்டி விகிதம் மாறும். சின்ன வித்யாசம் இருக்கத்தான் செய்யும். FLOATING ., FIXED ஆக தேர்ந்தெடுக்கலாம்.. 8 % .,10 % ., இருக்கும். ஃபிக்ஸட் வட்டிவிகிதம் என்றால் நாம் செலுத்தும் காலம் முழுமைக்கும் மாறாது.. ஆனால் ஃப்ளோட்டிங்க்கில் ரிசர்வ் பாங்க் இல் மாறுவதைப் பொறுத்து மாறுபடும்.. கூடவும் செய்யும் .. குறையவும் செய்யும்.. அது நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது.

கே . 4 . தனி நபர் நடத்தும் சீட்டுக்களில் பணம் போடுவது பாதுகாப்பானதல்ல எனத் தெரியும். அனால் அரசு சாரா பெரிய தனி நிறுவனங்களில் சீட்டு நடத்துகிறார்கள்.. அதில் போடலாமா..??

பதில் ;- சிலது அதிலும் பணம் போய்விடுகிறது. ”சிட்” நல்ல ஸ்கீம்தான் பர்சனல் தேவைகளைப் பொறுத்து விருப்பதைப் பொறுத்து ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம்.. நாம் ரெக்கமண்ட் பண்ண முடியாது..ஒரு பகுதி பணத்தை சேமிக்க அதை ஒரு வழியாக வைத்துக் கொள்ளலாம்.. வங்கியில் போட ரெகமண்ட் பண்ணலாம் .. ஆனால் “சிட்” களில் போட ரெகமண்ட் செய்ய முடியாது.. ஓடிப்போய் விட்டால் கஷ்டம்.

கே. 5 . ரிவர்ஸ் மார்ட்கேஜ் பாதுகாப்பானதா..? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்..?

பதில்;- ரிடையர்மெண்ட்டுக்குப் பிறகு.. பணம் தேவைப்படும் போது வீட்டை வங்கியில் மார்ட்கேஜ் செய்து பணம் பெற்றுக் கொள்வது.. உதாரணமாக ஒருவருடைய வீடு 40 லட்சம் பெறு்மானதாக இருந்தால் அதற்கு ரூபாய் 20 லட்சம் கொடுப்பார்கள்...மொத்தமாக அல்லது மாதாமாதம் கிடத்தட்ட 15 ., 20 வருடங்கள் ( நாம் குறிப்பிட்டு சொல்லலாம்) போல வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் காலத்துக்குப் பிறகு அவர்கள் குழந்தைகள் ., அல்லது அவர்கள் இருக்கும் போதே வீடு வேண்டும் என்றால் வாங்கிய பணத்தை வட்டியுடன் செலுத்தி விட்டால் வங்கியில் வீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது வீட்டை வங்கியே எடுத்துக்கொண்டு மிச்ச பணத்தை தருவார்கள் ... இந்த ப்ராப்பர்டியில் பணம் ஏறும் . இறங்காது.. எனவே பாதுகாப்பானதுதான்..

டிஸ்கி:- திருமதி சித்ரா நாகப்பன் நமது லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக அளித்த முதலீட்டு ஆலோசனைகள் செப்டம்பர் 2010 இதழில் வெளிவந்து இருக்கு.

4 கருத்துகள்:

 1. வளைகுடாவில் பணிபுரிபவர்களுக்கு வருடமொருமுறை 25 அல்லது 30 நாட்கள் மட்டுமே விடுமுறை. உள்ளூரில் உள்ளோரின் உதவியின்றி, நிலத்தினிலோ அல்லது வீடு மனையினிலோ முதலீடு செய்ய இயலாத சூழ்நிலை. அனைவருக்கும் உற்றார் உறவினர்களினுடைய நல்லெண்ணத்துடன் ஆன ஆதரவு கிடைக்கும் எனக் கூற இயலாது. இது போன்ற சூழலில் சிக்கியுள்ளவர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்க விரும்பும் முதலீடு என்ன என்றுக் குறிப்பிட்டால் நலமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. வளைகுடா நாட்டில் வேலை செய்பவர்களுக்கு ஹவுசிங் லோன் தர ஏகப்பட்ட டீடெயில் கேட்டு தராமல் இழுத்டிப்பதாக [[இஷ்டம் இல்லாமல்]] நிறைய பேர்கள் சொன்னார்கள்.நானும் இந்தியா வந்த போது இந்தியன் ஓவர்சீஸ் பேங்கில் போயி கேட்டேன். சரியான விளக்கம் சொல்ல மறுக்கிறார்கள். ஆகவே நான் கூட இன்னும் ஊரில் வீடு கட்டவில்லை. எங்கு முறைஇடலாம்னு சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் இருவருக்காகவும் இதைக் கேட்டு எழுதி இருக்கிறேன்., மூர்த்தி., மனோ.

  http://honeylaksh.blogspot.com/2011/07/7.html

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...