எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஏப்ரல், 2011

ஏப்ரல் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் காசி சொர்ணலிங்கேஸ்வரர்., டாக்டர் சாந்தா (கான்சர் இன்ஸ்டிடியூட்)., அனுராதா.

ஏப்ரல் மாத லேடீஸ் ஸ்பெஷல் பெண் தொழில் முனைவோருக்கு மிக உபயோகமுள்ளதா இருக்கு.. வெளியே 30 கை வேலைப் பொருட்கள்.தனி இணைப்பு. , உள்ளே 30 ரெசிப்பிக்கள்னு அசத்தலா இருக்கு.. இந்த மாத ப்லாகர் அடுத்த மாதம் வருவார்..:)

காசி சொர்ணலிங்கேஸ்வரர் இந்த இதழில் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.. கடவுள் தனக்கான இடத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறார் என்பது உண்மை.. இது பற்றி நான் இந்த இடுகையில் எழுதி இருக்கேன்..


லேடீஸ் ஸ்பெஷலின் ஆசிரியை கிரிஜாம்மாவின் பெற்றோரின் சதாபிஷேஹம் பற்றி., அவர்களின் எண்பதின் அழகு பற்றி அவர் வாய்மொழியா படிச்சாலே கண்கள் பனிக்கும்.. மிக நெகிழ்வான பகிர்வு அது..


சென்னை அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர்மன் டாக்டர் சாந்தா அவர்களிடம் புற்று நோய் விழிப்புணர்வு பற்றி எடுக்கப்பட்ட என்னுடைய பேட்டி வெளிவந்து இருக்கு..


போராடி ஜெயித்த பெண்களைப் பற்றித்தான் நாம் இதுவரை படித்திருக்கிறோம். இதில் போராடி இறந்து அதன் பின்னும் தன் கண்ணை சங்கர நேத்திராலயாவுக்கு தானமா வழங்கி., உடலையும் (மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் சதைசெயல்பாடு இழப்பு நோய் மூலம் இறந்து ) ராமசந்திரா ஆஸ்பத்ரிக்கு உடலையும் தானமா கொடு்த்த அனுராதா பற்றி எழுதி இருக்கேன்.. அவங்களைப் பற்றி அறிய உதவி தகவல்களும் தந்துதவிய ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்ஸைட்டையும் கவுன்சிலிங் கிளினிக்கையும் நடத்திவரும் டாக்டர் வசந்தி பாபு (அக்காவுக்கு) நன்றிகள்..:))

9 கருத்துகள்:

  1. தேனு, ஏப்ரல் 2011 இல்ல? சிறப்பான மனிதர்களை சநதிக்கும் சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி தேனக்கா.. உடலை தானமா கொடுக்கறதுக்கு நிச்சயமா பெரிய மனசு வேணும்..

    பதிலளிநீக்கு
  3. UNGAL பிளாக் முழுக்க மற்றவர்களுக்கு வாழ்த்து செய்தியே அதிகமிருக்கும் பாராட்டுக்கள் இந்த உயரிய மனதிற்கு

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரூஃபினா

    நன்றி சித்து

    நன்றி மேனகா

    நன்றீ ராமலெக்ஷ்மி

    நன்றீ சாந்தி

    நன்றி முனியப்பன் சார்

    நன்றி சசி

    நன்றீ கீதா..

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...