புதன், 2 மார்ச், 2011

மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்






400 வருடங்களுக்கு முன்பு பர்மா ரெங்கோனில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது சைவ வழிபாட்டிற்காக சிவத்தலங்களைத் தேடி அலைந்து கோயில் திருப்பணி செய்த நகரத்தார் காசி., அலஹாபாத்., நாசிக்., கல்கட்டா மற்றும் தாரகேசுவரம் ஸ்தலங்களுக்கும் சன்னதிகளுக்கும் சென்று வணங்கினார்கள். 200 வருடங்களுக்கு முன்பு காசிக்கும் காசிராஜாவுக்கும் சொந்தமான 4 பூஜைகளிலும்., 3 சம்போ பூஜையை ராஜாவிடம் பெற்று அது முதற்கொண்டு இன்றைய காலகட்டம் வரை தமிழ் மரபுடன் சாஸ்த்திர சம்பிரதாயப்படி அபிஷேக பூஜையும் நடத்தி வருகிறார்கள். மற்றோரு பூஜை நேபாள ராஜாவுக்கு உரியது.

”ஆரூரில் பிறந்தால் முக்தி..
அண்ணாமலை நினைத்தால் முக்தி
சிதம்பரம் தரிசனம் முக்தி
காசி இறந்தால் முக்தி.”

”சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை..”
இதன்படி காசி விஸ்வேஸ்வரருக்கு பூஜை காலங்கள்., பூஜா முறைகள்., முறைப்படி செய்து 200 வருடங்கள் முடிந்து முன்றாம் நூற்றாண்டின் ஆரம்பம். இந்த வருடம் நகர சத்திரத்தில் இருக்கும் 3 1/2 கிலோ ( சுமார் 440 பவுன்) எடையுள்ள சொர்ண காசி விசாலாக்ஷி உடனிருக்க இப்போது 76 ஊர் நகரத்தார் ( முன்பு 96 ஊர்கள் இருந்தன.. ) மற்ற 9 கோயில்கள் அனைவரும் சேர்ந்து சொர்ண லிங்கேசுவரர் செய்து வருகின்ற மாசி சிவராத்திரியில் காசி பாதாளேசுவரர் அருகில் இருக்கும் நகரச் சத்திரத்தில் சொர்ணலிங்கம் பிரதிஷ்டை பண்ண ஏற்பாடு செய்து மேற்படி சொர்ணலிங்கம் மேற்படி ஊர்களுக்கு சென்று ஜாதி ., மத பேதமின்றி அனைத்து மக்களையும் ரக்ஷித்துப் பலனளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாளில் அனைவரும் இந்தப் படத்தில் உள்ள ஆண்டவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம். இந்த ஏற்பாட்டை காசி சத்திர மேலாண்மை கழக நிர்வாகம் சிரமேற்று நடத்திக் கொண்டிருக்கிறது..
“ ஓம் நம சிவாய..!!!”

இதன் தலைவர் கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த திரு சி. டி. எஸ். சிதம்பரம் செட்டியார். செயலாளர் விராச்சிலையைச் சேர்ந்த திரு ஏ.ஆர்.எஸ். ராஜகோபால் செட்டியார். பொருளாளர் பாகனேரியைச் சேர்ந்த திரு ஆர். எம் வைரவன் செட்டியார்..

குறிப்பு :- பிஃப்ரவரி மாதம் மானகிரியில் சொர்ணலிங்கேசுவரர் வந்த போது தரிசிக்க சென்றோம். அப்போது திரு சி.டி.எஸ். சிதம்பரம் செட்டியார் சொன்ன தகவல் இது. மானகிரி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிவன் விசாலாக்ஷி சன்னதியும்., ஜோடியாய் அமர்ந்து இருக்கும் நவக்கிரகங்களும் விஷேஷம்.. வேறு எந்தக் கோயிலிலும் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய் காண முடிகிறதா தெரியவில்லை..

மானகிரி காரைக்குடி காட்டன் , மற்றும் தறி சேலைகளுக்கு பெயர் பெற்றது..

14 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

படங்கள் அருமையா இருக்கு மேடம்....

Chitra சொன்னது…

அக்கா, இப்போதான் Facebook ல அம்மா போட்டு இருந்த படங்களை பார்த்தேன்... உங்கள் பதிவில் விளக்கங்களுடன் நல்லா இருக்குது, அக்கா. அம்மாவும், உங்கள் பக்கத்தில் இருக்கும் படம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.

hari சொன்னது…

அருமையான பதிவு தேனம்மை .....
தொடரட்டும் இதுபோன்ற முயற்சிகள் ...

தமிழ் உதயம் சொன்னது…

ஒவ்வொரு விஷயத்திலும், மிக விருப்பத்தோடு தங்களை ஈடுபடுத்தி கொள்வது ஆச்சர்யமானது.

அமைதிச்சாரல் சொன்னது…

ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ரொம்ப பிடிச்சுப்போயிட்டார்..

middleclassmadhavi சொன்னது…

சிவராத்திரி பதிவு சூப்பர்!

சே.குமார் சொன்னது…

படங்கள் அருமையா இருக்கு.

dr suneel krishnan சொன்னது…

நீங்க காரைக்குடியா ? நான் காரைக்குடி !!
அந்த லிங்கம் -நானூறு பவுன் ,சுமார் மூனரை கிலோ என்று சொன்னார்கள் ..நானும் பார்த்தேன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நான் கூட்டத்தில் திரு எஸ்டிஎஸ் சொன்னதை அப்படியே பகிர்ந்துள்ளேன்.. திரும்ப என் அம்மாவிடம் கேட்டு திருத்திவிட்டேன் சுனீல்.. நான் செட்டிநாடு.. அம்மா வீடு காரைக்குடி..:)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மனோ

நன்றி சித்து

நன்றி ஹரி

நன்றி ரமேஷ்

நன்றி சாரல்

நன்றி மாதவி

நன்றி குமார்

திருத்தியமைக்கு நன்றி சுனில்..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிவராத்திரி பதிவு சூப்பர்!
Please come my blog for Siva ....

சிவராத்திரி!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜி..:)

athi arvind சொன்னது…

அப்படியா!!! மகிழ்ச்சி

கருத்துரையிடுக