செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..

உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..



மலை வீட்டின் கணப்பாய் உனது முத்தம்.. குளிர் கட்டைகளை எரித்து அருகேயே அமர்ந்திருக்கிறேன் .. அதிக கதகதப்புக்காய்..

புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..

முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?

33 கருத்துகள் :

கலாநேசன் சொன்னது…

//புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் ..//

சூப்பரோ சூப்பர்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

அருமையான வரிகள் தேனக்கா

ரோகிணிசிவா சொன்னது…

//தேனற்ற பூக்கள் உண்டா,,?//

vow !!!!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice, thanks for sharing

நசரேயன் சொன்னது…

//தேனற்ற பூக்கள் உண்டா,,?//

இருக்கு, "தேனக்கா"

rk guru சொன்னது…

நல்ல பதிவு .........வாழ்த்துகள்

சங்கவி சொன்னது…

அழகான வரிகள்..

பெயரில்லா சொன்னது…

சகோதரிக்கு வணக்கம் ..கவிதை அருமை..//சமயத்தில் மௌனமாய் இருக்கும் இதழ்களில் மலர் வளையமாயும்// உங்கள் கவிதைகளை படிக்கும் போது அதிகமாக படிக்கத் தோன்றுகிறது...தமிழை ..:-)

Ananthi சொன்னது…

///புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க.///

அட அட... அக்கா ரொம்ப அழகா இருக்கு.. ரசித்து படித்தேன்... ;-))

நட்புடன் ஜமால் சொன்னது…

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..]]

உரைநடை வடிவில் கவிதை காதலாக கொஞ்ச(ம்) கா--மாகவும்

ஜெய்லானி சொன்னது…

தேனக்கா சூப்பர் கவிதை..!!

இளம் தூயவன் சொன்னது…

முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?


நல்ல வரிகள் அருமை.

Kavianban KALAM, Adirampattinam சொன்னது…

நேச மேகம் நெருங்கும் பொழுது
பாசம் மழை பொழியும் பொழுது
முத்தம் என்னும் முதலாம் தூது
சத்தம் இன்றி சங்கமிக்கும் மின்னல்
தேனுவின் வரிகள் தேனாய் இனிக்க
நானும் படித்தேன்; ரசித்தேன்; குடித்தேன்
ஒருபடித்தேன் ஒருசில வரிகள்
ஒருசில நிமிடம் ஒன்றிக்க வைத்தன:

//புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க//

செ.சரவணக்குமார் சொன்னது…

நன்று தேனக்கா.

சீமான்கனி சொன்னது…

//சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..//

ரசித்த வரிகள்...கவிதாயினியின் ரசிகனுக்கு பரிசாய் வந்த கவிதை நன்றி தேனக்கா...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக அருமை.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

//உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..///

வாவ்.. அருமையான வரிகளில் காதல் ததும்புகிறது.. கவிதை ரொம்ப நல்லாருக்கு தேனக்கா..

Chitra சொன்னது…

புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..


........... மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகு வரிகள்! கலக்கிட்டீங்க, அக்கா!

balakavithaigal சொன்னது…

அழகான சொல்லாடல் மனதுக்குள் மந்தகாசத்தை ஏற்படுத்தியது.வாழ்த்துகள் தேனம்மை

Balaji saravana சொன்னது…

அருமை அக்கா!
//தேனற்ற பூக்கள் உண்டா? //
நிறைய யோசிக்க வைக்கும் வரிகள். நைஸ்!

அ.வெற்றிவேல் சொன்னது…

///புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் ///

உங்கள் படிமங்கள் எப்போதும் புதுசாகவே இருக்கின்றன..

வாழ்த்துகள் தேனம்மை

அன்புடன் வெற்றி

ஈரோடு கதிர் சொன்னது…

ஏனுங்க அமுதா..

இந்த அநியாயத்த என்னனு கேக்க மாட்டீங்களா?

பதிவுலகில் பாபு சொன்னது…

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..

Murugeswari Rajavel சொன்னது…

அருமையான பதிவு.இதழ்க் கூடு,நல்ல உவமை.

r.selvakkumar சொன்னது…

//
புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..
//
அசத்தறீங்க தேனம்மை..

ஹுஸைனம்மா சொன்னது…

/சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. //

புதுமையான கற்பனை!! ரசித்தேன்.

sakthi சொன்னது…

என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க.

அழகு

ஸாதிகா சொன்னது…

//புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் // என்னே வரிகள்.....!

Riyas சொன்னது…

//முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?//

WOW SUPERB POEM...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

அட... சூப்பரா இருக்கே....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கலாநேசன்., அஹமத்., ரோஹிணி., ராம்ஜி., நசர்., குரு., சங்கவி.,பெயரில்லா., ஆனந்தி., ஜமால்., ஜெய்., தூயவன்., கலாம்.,சரவணா., கனி, அக்பர்.,ஸ்டார்ஜன்., சித்து.,பாலா., பாலாஜி., வெற்றி., கதிர்., பாபு., முருகேஸ்வரி., செல்வா., ஹுஸைனம்மா.,சக்தி., ஸாதிகா., ரியாஸ் ., ப்ரகாஷ்.,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

செந்தில்குமார் சொன்னது…

புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..

முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?

இதமான வரிகள் அக்கா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...