எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 டிசம்பர், 2009

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

புத்தகங்களைப் படித்துவிட்டு அலமாரிகளிலோ,
ட்ரங்குப் பெட்டிகளிலோ ,எடைக்கோ போடுவது
அறிந்ததுதான்... ஆனால் படுக்கையிலும் இரண்டு
அடிக்கு புத்தகங்களுடன் வாழ்பவர் சாரு.. இதில்
எனக்கு அவர் மீது ஏற்பட்ட வியப்பைவிட அவர்
மனைவி அவந்திகாவின் மேல்தான் வியப்பு
அதிகம்.. "மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்".. "சாருவுக்கு மகனும் கூட"..

சாருவின் சில பல கதைகள் கட்டுரைகள் படித்து
இருந்தாலும் ... நன்கு பழகிய ஒருவரை நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து
கையசைத்துப்பிரியும் வலியை ....அவர்
வார்த்தைகளில் படித்தபோது இன்னும் அதிகமாக
உணர முடிந்தது ...


அகநாழிகை வெளியீட்டு விழாவில் சாரு வந்த
போது தன்மனைவி உடல் நலமில்லாமல்
ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோதும் (தற்போது
நலமாக வீட்டில் இருப்பதாக குறிப்பிட்டார்) தான்
புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார்
அஜயன் பாலா கூறும்போது நிறைய பேர் சாருவின்
வெறித்தனமான ரசிகர்களாக இருப்பதைக்
குறிப்பிட்டார் .ஆனால் சாருவின் எழுத்து பற்றி
கேட்டால் ஒன்றும் தெரியாது என்றும் ஆனாலும்
சாருவைப் பிடிக்கும் என்றும் சொல்பவர்கள்
அதிகம் என்றும் தெரிவித்தார்..

சுஜாதா, ஜெயகாந்தன் நிறையப் படித்து
இருக்கிறோம், சாருவும் கூட ஆனால் தற்போது
கேட்டால் அவர்கள் நம்மிடம் உருவாக்கிய
கருத்துக்கள். எண்ணப் பகிர்வுகள் தாக்கங்கள்
இவற்றைப்பகிரலாமே தவிர ஒவ்வொரு கட்டுரை,
கதை பெயர் ,கதாபாத்திரம் என விளக்கிவிட
முடியாது ..நம் எண்ணங்கள் நிறைய எண்ணங்களின்
தொகுப்பாக தற்போது வலைத்தளம் மூலம்
இன்னும் விரிவுபட்டதாக இருக்கிறது ... சாருவின்
கோணல் பக்கங்கள் மற்றும் நளினி ஜமீலா பற்றிய
பதிவு அருமை எனலாம்.. இன்னும் தன் சுய விருப்பு
வெறுப்புகளையும் எந்தவித தயக்கமுமில்லாமல்
பகிர்ந்துகொள்ளக்கூடியவர் சாரு.. தன்னையே
சாத்தான் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய
தைரியம் மிக்கவர். எழுத்தில் எந்தப் பாசாங்கும்
இருக்காது .

தற்போது தன்னுடைய புத்தக வெளியீட்டு
விழாவில் கல்கியை ஒரு புத்தகம் வெளியிடச்
செய்து ஒரு சின்ன அட போட வைத்து விட்டார்..
பத்து புத்தகங்களை ஒரே நேரத்தில் வெளியிட்டு
என் மதிப்பில் இன்னும் உயர்ந்து விட்டார் சாரு..

புத்தக வெளியீட்டின் போது பூங்கொத்தைப் பெற்றுக்
கொண்டதும் பூக்களைப் போன்றதொரு புன்னகை
செய்தார் சாரு.. இருவரும் சமவயது காலத்தவர்கள்
தானென்றாலும் ஞாநி பெரிய சகோதரர் போலவும்
சாரு சின்ன சகோதரர் போலவும் இருந்தார்கள்..
தமிழில் பேசுவது .,எழுதுவது .,மற்றைய கருத்துக்
கள் மற்றும் முழு நேர எழுத்துப் பணியில்
இருப்பது ., சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட
படைப்புகள் எல்லாவற்றிலும் இருவரும் ஒரே
மாதிரி இருந்தார்கள் ..

நமக்கு முன்னோடிகளான சு.ரா. போன்றவர்களின்
எழுத்துக்களுக்கு பதில் குறிப்பு எழுதுவதும்
ஞாநியின் "ஓ பக்கங்களுக்கு" பதிலடியாக
"ஒளவ் பக்கங்கள்" எழுத நினைத்ததாக குறிப்
பிட்டதும் , சாதீய மனோ பாவத்தோடு இருப்பவர்
களாக மற்றவர்களைச் சித்தரிப்பதும் சிறிது
நெருடலாக இருக்கிறது..

நொச்சிக்குப்பம் சென்று தன் கணவருக்காக மீன்
வாங்கி வந்து கருவாடு செய்துதரும் அவந்திகாவின்
கணவராக இருக்கும் சாரு( இந்தப் பகிர்விற்குப்
பிறகு தான் -- அதாவது அவந்திகா தனக்கு மட்டு
மல்ல -- தன்னைச் சுற்றி இருக்கும் அனைவருக்குமே
பரிந்து உவக்கக் கூடியவள் என்ற -- சாருவின்
வார்த்தைகள்தான் பிடித்ததாய் இருக்கிறது) வெறுப்
புணர்வு அற்று எழுத வேண்டும் என்பதே என்
போன்ற வாசகியரின் விருப்பம்..

அவந்திகாவின் சாருவிற்கு --புத்தகங்களின்
பிரியருக்கு -- இது ஏற்புடையதாக இருக்கு
மென நினைக்கிறேன் ..

17 கருத்துகள்:

  1. எல்லாம் சரிதான் அகநாழிகை நிகழ்ச்சிக்கு பிறகு அங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களை விடுத்து ஞானியை விமர்சனம் செய்த ஒரு சிறுபிள்ளை தனமான மனிதன் உங்கள் சாரு..

    பதிலளிநீக்கு
  2. ஞானியை விமர்சனம் செய்த ஒரு சிறுபிள்ளை தனமான மனிதன் உங்கள் சாரு..' '''''''''''''ஒரு மனிதரை அதிகமாக புகழவும் வேண்டாம். ஒரு மனிதரை அதிகமாக இகழவும் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    மிக அழகான இடுகை என்றேச் சொல்லத் தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பகிர்வு நன்றாக உள்ளது. புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. ஞானியை விமர்சனம் செய்த ஒரு சிறுபிள்ளை தனமான மனிதன் உங்கள் சாரு..' '''''''''''''ஒரு மனிதரை அதிகமாக புகழவும் வேண்டாம். ஒரு மனிதரை அதிகமாக இகழவும் வேண்டாம்.


    தன்னை ஒருவர் விமர்சிக்கும் போது அவருக்கு ஏற்ப்படும் உணர்வுகள்
    அவர் ஒருவரை விமர்சிக்கும்போது சம்மந்த பட்டவர்க்கும் இருக்கும் என்பதை அந்த "பெ"ரிய எழுத்தாளருக்கு ஏன் தெரியவில்லை??

    பதிலளிநீக்கு
  6. எல்லாரும் சில சமயங்களில் அப்படித்தான் புலவரே

    ஒருவருக்கு கல்வி வழங்குதல் நல்ல முயற்சி உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் புலிகேசி

    புத்தாண்டு வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி அண்ணாமலையான் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி தமிழுதயம் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நன்றி நவாஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நன்றி ராகவன் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நன்றி மலர் என் வலைத்தளத்துக்கு உங்களோட முதல் வருகைக்கு

    மலர் அருமை சிரிச்சு முடியல

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. நன்றி மக்கா

    //ஒரு மனுஷன்தானே கொண்டு சேர்க்கிறான் ஒரு மனுஷியிடம்//

    பாரா என்ன இது என்னைப் பற்றித்தானா நான் உங்க காந்தி பெரியம்மா போல அன்பாலான மனுஷிதான் ஆனா உங்க அன்பிற்கு முன்னாலே அழுகைதான் வருது நேற்றிலிருந்து புரை ஏறிக்கொண்டே இருந்தது வெளியூரில் படிக்கும் பிள்ளைக்கும் வெளியூர் சென்று இருக்கும் ரங்கமணிக்கும் அவ்வப்போது போன் செய்து கொண்டே இருந்தேன் என் அன்பு சகோதரர் நீங்க நினைத்துக் கொண்டது என இப்பத்தான் தெரியுது வாழ்வில் ஒருவரையாவது அன்பால் நிறைத்து விடுதல் மிகப் பெறும் பேறு அது உங்களுக்கு அதிகமாகவே வாய்த்து இருக்கு மனுஷர்களுக்காய் ஏங்கும் உங்களைப் போன்ற ஒருவர் எல்லோருக்கும் கிடைத்தது பெருமைதான்
    புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்கா

    பதிலளிநீக்கு
  13. //காந்தி பெரியம்மா என்கிற மனுஷிதான் எங்கள் எல்லோருக்கும் ரோல் மாடல். அன்பை எப்படி கொடுப்பது எப்படி வாங்குவது என எந்த திட்டமிடலும் அற்று, எந்த பிரதி பலன்களும் கருதாது தன்னிடமுள்ள பூ கொண்டு தேன் தயாரித்தார்கள் பெரியம்மா. தேனை, தேனீக்கு தந்தார்கள். தேனீ கூடு கட்டியது. தேன் சொரிந்தது. எட்டும்,அஞ்சும்,மூன்றும் பதினாறு குழைந்தைகள் நாங்கள். பெரியப்பா,அப்பா,சித்தப்பா என மூன்று அப்பாக்கள். வேறு வேறு அம்மாக்களின் கருவறை.

    தீப்பெட்டிக்குள் அடைபட்ட குச்சி போல ஒரே மாதிரியாக உரசலில் பற்றி எறியும் அன்பிற்கு அந்த தேனம்மைதான் காரணம்.//

    நன்றி மக்கா நன்றி வேறொரு வார்த்தை சொல்லத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  14. நன்றி பிரியமுடன் பிரபு
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...