எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 டிசம்பர், 2009

அந்தி மந்தாரை

நந்தினியோ குந்தவையோ
வானதியோ வஞ்சியரை
எதிர்பார்த்து நான்...

அட்ட வீரட்டானத் தலங்களில்
அர்ச்சனைத் தாம்பாளங்களில்
அருள்மொழிவர்மன் அள்ளித் தூவ ...

வானதியும் கூட...
புன்னகை தேவதை...
பூக்களின் அரசி...


பழுவேட்டரையர் பத்தினி
ஆதித்த கரிகாலனின்
உள்ளங்கவர் கள்ளி என்
ஆதர்ஷ நாயகி நந்தினி....

உப்பரிகை நிலா
உதானசீனப் படுத்திச் சென்றாள்
ஒப்பிலா இளமையோடும்
ஒவ்வாத கோபத்தோடும்...

வந்ததோ குந்தவை
எனைப் பறித்தாள் செண்டாக்கி
வல்லவரையன் வந்தியத்தேவனை
அடித்தாள் அவள்
குடி கொண்ட நெஞ்சில்...

வாடாமல்லி வெள்ளை
மஞ்சள் என என் நிறங்களுக்கேற்ப
அவள் சிரித்தும் அடித்தும்
அவனை பைத்தியமாக அடித்துக்கொண்டு....

சம்புவரையர்களும் பழுவேட்டரையர்களும்
சோழர்களும் சேரர்களும்
பாண்டியர்களும் பல்லவர்களும்
சென்றபின்னும் நான்
பூத்துக் கொண்டிருக்கிறேன்...

உந்தியாவனங்களில் வானதியும்
நந்தினியும் குந்தவையும்
எதிர்பார்த்து...

ஒளியை உண்டு உண்டு
ஒளியைச் சிந்தும் புன்னகையோடு
நகரத்துப் பூங்காக்களில்...

நிஜமாக நேசிப்பவர்களை
நானும் நேசித்துக்கொண்டு
மாலையில் மட்டும் வாழும்
என் மாலைப் புன்னகையோடு...


பி.கு. மக்களே....!! திரும்ப ஒரு பூ பற்றிய கவிதை..
பழக்க தோஷம்... தவிர்க்க முடியல...
நல்லா இருக்கா....

21 கருத்துகள்:

  1. பட்டய கிளப்பிட்டீங்க தேனம்மை

    பொன்னியின் செல்வனை நான் நேசித்த பார்வையில் நீஙகளும் சொல்லி இருப்பது ....

    பயனுற்று இருக்கும் மொழி ....

    சான்சே இல்ல ..

    அருமை !!!!

    பதிலளிநீக்கு
  2. SCIENCE,HISTROY,RELIGION,TAMIL AND WHAT ELSE YOU LEFT FOR US

    TREMENDOUS EFFORT

    HEARTFELT WISHES

    VIJAY

    பதிலளிநீக்கு
  3. நூற்றாண்டுகளை இணைக்கின்ற கவிப் பூ!
    அருமை தேனம்மை!

    பதிலளிநீக்கு
  4. மணிபல்லவப்பூதம் தான் வரணும் நேசன்

    உங்களையும் ஒளிச்சு வைக்க..

    எப்பா..

    என்ன எழுத்து இது..

    அதிருது..!!

    எங்களுக்கெல்லாம் சான்ஸ் இருக்கா

    பதிலளிநீக்கு
  5. நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

    என்னையும் கவிதைப் போட்டியில் எழுதச் சொல்லி உற்சாகப் படுத்துவதற்கு நன்றி விஜய்

    பதிலளிநீக்கு
  6. ஆர் செல்வகுமார் சார்

    ஒரே நேரத்துல 5 6 வலைத்தளமா

    எம்மாடி ...

    கலக்குறீங்க...

    பதிலளிநீக்கு
  7. பூங்குழலியை மறந்துடீன்களே அக்கா ஏன் அவ
    அரச குடும்பத்துல பிறக்காத காரணமோ?
    (சும்மா தமாசுக்கு )

    பதிலளிநீக்கு
  8. கவிதைப்போட்டிக்கு எப்போ எழுதப்போறீங்க.

    பதிலளிநீக்கு
  9. //நிஜமாக நேசிப்பவர்களை
    நானும் நேசித்துக்கொண்டு
    மாலையில் மட்டும் வாழும்
    என் மாலைப் புன்னகையோடு...//

    மிகவும் ரசித்த வரிகள் மேடம்.
    நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. அருமையா எழுதுறிங்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. நீங்க எதை எழுதினாலும் நல்லாத்தானே இருக்கு தேனு.

    பதிலளிநீக்கு
  12. பூக்களின் புன்னகை அருமை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. நன்றி நேசன் பொன்னியின் செல்வனை மறக்க முடியுமா ?
    1955 இல் வெளி வந்தது ...
    ஆனால் இன்னும் அதன் பாதிப்பு அகலவில்லை.. நான் படித்து 20 வருடங்கள் இருக்கும் ..

    பதிலளிநீக்கு
  14. " திமிங்கிலங்கலுக்குள் அயிரை மீன்கள்" இது அருமையோ அருமை விஜய்

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா

    பதிலளிநீக்கு
  15. நிஜமாகவே பூங்குழலியை மறந்துதான் விட்டேன் பாலா

    நந்தவனத்தில் மிக அதிகமாக உலவியவளும் தொடர்பு உடையவளும் அவள் தான்

    நன்றி நினைவூட்டியதற்கு

    பதிலளிநீக்கு
  16. திரும்பவும் வந்து ரசித்தேன் நவாஸுத்தீன்

    நேசமும் நேசக் கோபமும் என்ற வார்த்தை என்னை இங்கு இழுத்து வந்தது நவாஸ்

    பதிலளிநீக்கு
  17. எழுத வேண்டும் நவாஸ்
    நன்றி நவாஸ்

    பதிலளிநீக்கு
  18. //நம்பிக்கைதான் விளக்கு என்ற பாடல் ஞாபகம் வருது பூங்குன்றன் அருமை நம் எல்லாருக்குமான வார்த்தை //

    வாங்க பூங்குன்றன் முதல் முறையா வந்து இருகீங்க நன்றி உங்க பாராட்டுக்கு

    thanks for ur comments PUUNGUNDRAN

    பதிலளிநீக்கு
  19. அம்மாவிலிருந்து அம்மம்மா வரை அனைத்துமே அருமை தியா

    நன்றி உங்க பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  20. கிளிஞ்சல்களாய் நினைவுகள் கலக்குறீங்க ஹேமா
    அருமை உங்கள் பறக்கும் முத்தம் என்ற சொல்லும்

    அண்ணன் குடும்பத்தார் நலமா ஹேமா

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப நல்ல இருக்கே இது முந்தானை பறந்து செல்வது அருமை பாலா


    உங்க பாராட்டுக்கு நன்றி பாலா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...