3001. 2019 இல் எடுத்த ஃபோட்டோதான். 😉 ஜெர்மனியில் புதிய தலைமுறை !!!
3002. இதுக்குப் பேர் ஏடி லேனேவாலா.. அப்பிடின்னா என்னன்னு சொல்லுங்க..
3003. ப. சிங்காரத்தின் நூல்கள் பற்றி அருமையான விமர்சனம் ஒன்றைப் படித்தேன். இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
" மனதை இழக்காத வரை நாம் எதையும் இழப்பதில்லை" என்பதையும், முடிவில் இதை அழகாகக் கொண்டுவந்து அந்த காதல் என்பது ஒருவரை ஒருவர் ஆக்கிரமிப்பது இல்லை என்று முடித்திருப்பார் ப சிங்காரம்.ஆனால் இந்நூல் பற்றி ஜெயமோகனின் கருத்து என்னவென்றால் பத்திரிகையாளராகப் பணி செய்ததால் இது ஒரு ஜர்னலிச ரைட் அப் என்று குறிப்பிட்டிருக்கிறார்
நான் இது பற்றி எழுதிய நூல் விமர்சனம் அமேசானில் நூலாக்கம் பெற்றுள்ளது.
3004.நேற்று நடைபெற்ற இலக்கிய விழாவில் இலக்கியத்தில் பெண்களின் பங்கேற்புப் பற்றிச் சிறப்புரையாற்றுகையில் உங்களின் பங்கு பற்றியும் பேசினார்கள் அகிலா அவர்கள்.
-- நன்றி அகிலா.
3005. ரிடர்ன் கிஃப்ட் கொடுப்பது பற்றி.
முன்பெல்லாம் சில்வர் சட்டி, வாளி இப்படித்தான் கொடுத்துட்டு இருந்தோம். இப்பவெல்லாம் என்னுடைய புத்தகங்கள் ஒன்றிரண்டை சேர்த்துக்கொள்வது பழக்கமா இருக்கு.
எனக்கு பிரண்ட்ஸ் மீட்டிங் போது இந்த மாதிரி கிளாஸ், புக் மார்க், போட்டோ ஸ்டாண்ட் கொடுத்திருக்காங்க.ஹாட் பேக், ஃப்ளாஸ்க், டவல்ஸ், பெட் ஸ்ப்ரெட், ப்ளாங்கெட் நிறைய குடுக்குறாங்க. ஆனா என்கிட்ட நிறைய அந்த மாதிரி சேர்ந்து போயிருச்சு.
வெளிநாட்டிலிருந்து வரும் ஃப்ரெண்ட்ஸ் மீட் பண்ணும்போது நிறைய கிப்ட் கொடுப்பாங்க அதனால கண்ணாடிப் பொருட்கள் , அலங்காரப் பொருட்கள் மாதிரி நிறைய கிடைச்சிருக்கு.
எல்லா மீட்டிலேயும் நானும் கிப்ட் கொடுத்திருக்கேன். ஒடிஸில (ODYSSEY) கிடைக்கும் வித்தியாசமான டால்ஸ், பொம்மைகள் அந்த மாதிரி கொடுத்திருக்கேன்.நிறைய புக்ஸ் கொடுத்திருக்கிறேன். எங்க வீட்டுக்கு வந்தாலும் புக்ஸ் கிடைக்கும்.
3006.இன்றும் டிடி பொதிகையில் நாங்கள் பங்கேற்ற மங்கையர்சோலை நிகழ்ச்சி இரண்டாம் பாகம் இரவு 9 மணிக்கு இடம்பெறுகின்றது. நேரம் கிடைப்பின் பாருங்கள்.
3007. தஸ்தயேவ்ஸ்கி உங்கள் மூலம் கதை சொல்லிச் செல்வதை உணர்ந்தவள் அம்மா நான். அபேத நிலையை வெகுவாய் ரசித்தேன். மொழிபெயர்ப்பு என்பது மறு படைப்புத்தான். எத்தனையோ மொழிபெயர்ப்புகளில் உங்களது மொழிபெயர்ப்பின் சரளம் எங்களை மீண்டும் மீண்டும் வாசிப்புக்குள் நெகிழ்த்தியிருக்கிறதும்மா.
3008. வெண்கலம் கதை முன் குறிப்பு :- நகரத்தார் இல்லங்களில் புழங்கும் பொருட்கள், நடைமுறை, பொருள்மாட்டு அவர்கள் கொண்டுள்ள ப்ரேமை, கொண்டுவிக்கச் சென்று செல்வம் சேர்த்தல், அவர்களின் இல்லங்கள், வீட்டு வேலை செய்பவர்களுடன் அவர்களது உறவு நிலை, தவறு தன்னுடையதாயின் தன்னைத் திருத்திக் கொள்ளும் மனநிலை ஆகியவற்றை விளக்கவே இக்கதையைப் படைத்துள்ளேன்.
புலம் பற்றிய சூழல்:- கதைப்படி இது செட்டிநாடு என்றழைக்கப்படும் கானாடு காத்தான், காரைக்குடி ஈறாய 72 ஊர்களுக்குள் ஒன்றில் நடக்கிறது. என்னுடைய பூர்வீகமும் இதுவே.
3009.ஆச்சி வந்தாச்சு இதழில் பத்து வருடங்களுக்கு முன் திரு சேதுராமன் சாத்தப்பன் சார் நகரத்தார் எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் தினமணி போட்டியில் பரிசு பெற்ற " சிவப்புப் பட்டுக் கயிறு " என்ற எனது சிறுகதை வெளியானது. ஐபிசிஎன்னுக்காக நான் எடுத்த 5 பேட்டிகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.
#நன்றி ஆச்சி வந்தாச்சு இதழுக்கு.
3010.திரு கரு முத்தையா அவர்களும் நகரத்தார் திருமகளில் நகரத்தார் எழுத்தாளர்கள் வரிசையில் அறிமுகம் செய்திருந்தார்கள். அது மணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் நூலாக்கம் பெற்றுள்ளது என நினைக்கிறேன்.
#நன்றி நகரத்தார் திருமகளுக்கு.
3011.நமது செட்டிநாடு இதழில் மதுரை தானம் அறக்கட்டளையின் மூலம் வெளியான பெண்ணின் மரபு என்ற என் நூலுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்கள்.திரு ஆவுடையப்பன் சார் ஏதேனும் பங்களிப்பு செய்யச் சொல்லி இருந்தார். வணிகத்தில் ஈடுபடும்/ பல்வேறு சிறப்புத் தகுதிகள் கொண்ட நகரத்தார் பெண்களை அறிமுகம் செய்து வருகிறேன்
#நன்றி நமது செட்டிநாடு இதழுக்கு.
3012.கொரோனா கூட்டுப் பிரார்த்தனையின் மூலம் தனவணிகன் இதழில் இடம் பெறும் நல்வாய்ப்புக் கிடைத்தது. சினிமா சம்பந்தமாக நான் எழுதிய சில விமர்சனங்களைத் தொடர்ந்து அனுப்பினேன். ”மனத்திரையில் மின்னல்” என்றொரு தொடர் எழுதும் வாய்ப்பை திரு வி என் சிடி வள்ளியப்பன் சார் நல்கினார்கள். ஒவ்வொரு மாதமும் உறவினர்கள் நண்பர்களிடமிருந்து அந்தக் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்கள் வந்துவிடும்.
#நன்றி திரு வள்ளியப்பன் சார் அவர்களுக்கும் தனவணிகன் இதழுக்கும்.
3013.கண் இமைகளுக்குள் வலி. உச்சந்தலையில் வலி. டெம்ப் 102.4. ஹை பிபி, கொதிக்கிற எண்ணெயை வாய் பூரா ஊத்தி உறை போட்டாப்புல ஒரு கடுமை. குடிக்கிறது காப்பின்னு நாக்கு கூட ஒத்துக்கிட்டாலும் மூக்குக்கு அது என்ன திரவம்னே தெரில. தோள்பட்டை, முதுகு, கை கால் வலி. ஆனா இது கொரானாவோ ஒமிக்ரானோ இல்லைன்னு ரிஸல்ட் சொல்லுது. இது எதுவும் இல்லாதவங்களுக்கு ரிஸல்ட் பாஸிட்டிவ்.
#என்ன கொடுமை கொரோனா இது ?
3014.லைட்டா தலைவலி, உடல்வலி,சளி, கதகதப்பு இருமல் தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு. சாப்பிடுறதுதான் ருசி தெரியாம கடுப்பா இருக்கு. மேலும் எதைச் செய்தாலும் பொறுமையின்மையோடு இருக்கு.
3015.எதை முதலில் படிக்கலாம்?
3016.எனது 4 புதிய நூல்கள் - குண்டலகேசி & வளையாபதி மூலமும் உரையும், நீலகேசி - புதினம், நாககுமார காவியம் - புதினம் ஆகியவை . சென்னை புத்தகத் திருவிழாவில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 6, 7 இல் கிடைக்கும். அரங்கிற்கு உங்கள் வருகையையும் கருத்துக்களையும் எதிர்நோக்கி இருக்கிறேன்.
3017.மேற்கூறிய எனது நூல்கள் குறித்து தோழமைகளின் வாழ்த்துகளும் கருத்துக்களும்.
மிக மிக அரிய நூல்கள்! வானம் தொட்டு விடும் தொலைவு தான் என் உயிரே உயிரே பறந்து கொண்டிருக்கும் படைப்புப் பறவைத் தோழிக்கு நேச வாழ்த்துகள்.
#நன்றி சாந்தாதத் மேம்.
3018.என் சிந்தனைக்குச் சற்றும் எட்டாத உயரத்தில் நீங்களும் உங்கள் எழுத்தும். எட்டி நின்று கை தட்டுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே கலை. ஐம்பெரும் காப்பியங்களே அரைகுறையாகப் படித்த என்னிடம் ஐங்குறுங் காப்பியங்கள் குறித்த அறிவு மிகக்குறைவே.
#நன்றி கிருஷ்ணகுமார் சார்.
3019.நீலகேசி புலிகேசியின் அண்ணனா எனக் கேட்டார் உறவினர் ஒருவர்.
இரண்டாம் புலிகேசியின் சகோதரன் பெயர் நீலகேசி. ஆனால் இவள் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசி. பழையனூர் காளிக்கு ஏவங்கேட்டு வந்த நீலிதான் நீலகேசி என்றேன்.
இரண்டாம் புலிகேசியின் அண்ணன் பெயரும் நீலகேசிதானே என்றார் உறவினர் விடாப்பிடியாக.
ஆமாங்க அவன் அதர்மத்துக்குத் துணைபோன நீலகேசி. இவள் அதர்மத்தைக் கைவிட்டு தர்மத்துக்கு மாறின நீலகேசிங்க என்றேன்.
மேலே இக்கேள்விகளைக் கேட்ட உறவினர் 1955 களில் கலைச்செல்வி பட்டம் வாங்கியவர். ஹ்ம்ம் என்னத்தைச் சொல்ல?
புதிய தலைமுறைக்கு நீலகேசியைக் கொண்டு செல்வதெப்படி?!!
3020. மேற்கூறிய நூல்கள் குறித்து இன்னும் இரு அன்புள்ளங்களின் வாழ்த்து.
அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் தேனம்மை. அதீத ஆர்வம்..ஆழமான மொழியாளுமை... அபாரத் திறமை.. கடும் உழைப்பு....
இக் கலவையின் அற்புதமான பரிசு தான் உங்கள் இந்த உயரம்! என் அன்பான பூச்செண்டு வாழ்த்துகள் தோழி
#நன்றி நன்றி தோழமைகளே.!!
டிஸ்கி :-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!