எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.செட்டிநாடு என அழைக்கப்படும் கானாடுகாத்தானில் செட்டிநாட்டு அரசரின் அரண்மனை இருக்கிறது. எங்கள் சொந்த ஊரான செட்டிநாட்டில் ஒவ்வொரு விஷேஷத்துக்கும் ( அனுவலுக்கும்) வரும் உறவினர்கள், நண்பர்களின் கட்டாய விசிட்டிங் ஸ்பாட் அது. ஹெரிட்டேஜ் வீடுகள் அருகி வரும் இந்தக் காலத்தில் செட்டிநாட்டுப் பகுதியில் அந்தக் காலப் பாரம்பரியத்தோடு இன்னும் பாதுகாக்கப்பட்டு விசிட்டர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் அரண்மனை இது.


செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இந்தியன் வங்கி., அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். ராஜா சர் முத்தையா செட்டியாரின் மகன் ராஜா டாக்டர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவர்கள் . மதுரையில் தமிழிசைச் சங்கம் ராஜாசர் முத்தையா செட்டியார் அவர்களின் பெரு முயற்சியால் நிறுவப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. மிகப் பெரிய ஆன்மீகத் தலங்கள் அனைத்திலும் நகரத்தாரின் ஆன்மீகப் பணிகள் இருக்கும். காசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் மரியாதை( சம்போவுடன் ) நகரத்தாருக்குத்தான். ஆன்மீகத் தலங்களிலும்., மற்றுமுள்ள ஊர்களிலும் சத்திரங்கள் மிகக் குறைந்த மகமையில் கிடைக்கவும் நகரத்தார் வழிகோலியுள்ளார்கள். வங்கி., கல்வி ., ஆன்மீகம் சமுதாயத்துக்குத் தொண்டு செய்தது என சமூக சமூதாயப் பணிக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்ட செட்டிநாட்டு அரசரின் பாரம்பர்யத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலும்., சிதம்பரத்திலும் பக்தர்களின் வசதிக்காக இரு ஐயப்பன் கோயில்களை நிறுவி இருக்கிறார்கள். பாரம்பரியமிக்க செட்டிநாட்டின் அரசர்களில் ராஜா டாக்டர் எம் ஏ எம் அவர்கள் சென்ற தலைமுறைகளின் பாரம்பர்யத்தையும் இன்றைய தலைமுறைகளின் நவீனத்தையும் அங்கீகரிப்பவர். ராஜ்யசபாவின் எம்பியாகவும் இருந்திருக்கும் இவர் செட்டிநாட்டின் இன்றைய வாழும் சகாப்தம்.


அன்னை வழிச் சொந்தத்தில் அம்மான் மகளான சிகப்பி ஆச்சியை மணந்து 42 ஆண்டுகள் மிகுந்த அன்யோன்னியத்தோடும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தார்கள். மகன்., மருமகள் பேரப்பிள்ளைகள்., உறவினர்களோடு இன்று ஆயிரம் பிறை கண்ட விழாவைக் கொண்டாடுகிறார்கள். ராஜா வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் கானாடு காத்தானின் மொத்த வீடுகளுக்கும் ஸ்பெஷலாக அழைப்பு இருக்கும். விருந்தோம்பலும் மிகப் பிரமாதமாக இருக்கும். ஊர்ப்புள்ளிகள் சிலர் வெளி ஊர்களில் இருப்பதால் வந்து ராஜா வீட்டு விஷேஷங்களில் கலந்து கொள்ள முடிகிறதோ இல்லையோ., அவர்களுக்காக ராஜா வீட்டில் இருந்து ஊர் முறை ( தட்டு., பை., பலகாரங்கள்., தாம்பூலம்) அனைத்தும் அழைப்பிதழ் கொடுக்கும் அன்றே வழங்கப்பட்டு விடும்.


சென்னையில் தங்கள் இல்லத்தில் சுற்றமும் நட்பும் புடை சூழ ஆயிரம் பிறை கண்ட திருவிழாவை( 80 பிறந்த நாள் சதாபிஷேகம்) கொண்டாடும் எங்கள் செட்டிநாட்டரசர் திரு எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் கனகாபிஷேகமும் (100 வயது)செய்து கொள்ள சிதம்பரம் ஆடல் வல்லானையும்., ஸ்ரீ ஐயப்பனையும் வணங்குகிறோம்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

7 கருத்துகள்:

 1. நகரத்தார் மீது எனக்கு மிகவும் அன்பு உண்டு. அவர்கள் வீடுகள் எல்லாம் மிகப்பெரிய அரண்மனை போல இருக்கும்.

  காரைக்குடிக்கும் குன்னக்குடிக்கும் இடையில் அமைந்துள்ள கோவிலூரில் தான் நான் பிறந்தேன். சமீபத்தில் கூட சும்மாவே ஒரு முறை அங்கு போய் வந்தேன்.

  1945-1950 ஒரு 6 ஆண்டுகள் மட்டும் என் பெற்றோர் செட்டி நாட்டுப் பகுதிகளான கீழச்செவல்பட்டி, கண்டனூர், கானாடுகாத்தான், வேட்டனூர், வேலங்குடி, கோட்டையூர், கோவிலூர் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளனர்.

  வங்கி, கல்வி,ஆன்மீகம் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வது என சமூக சமூதாயப் பணிக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

  //செட்டிநாட்டரசர் திரு எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் கனகாபிஷேகமும் (100 வயது)செய்து கொள்ள சிதம்பரம் ஆடல் வல்லானையும் ஸ்ரீ ஐயப்பனையும் வணங்குகிறோம்//

  நல்லதொரு செய்தியை அழகாகப் பகிர்ந்து கொண்டதற்கு என் அன்பான நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு.
  படித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பகிர்வு,படித்ததும் நிரைவாக இருக்கு...அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 4. செட்டிநாட்டு அரசரை பற்றிய பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நன்றி கோபால் சார்

  நன்றி ரத்னவேல் ஐயா.,

  நன்றி மேனகா

  நன்றி குமார்

  நன்றி சாந்தி

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...