வியாழன், 29 செப்டம்பர், 2011

செந்தீ..

செந்தீ..:-
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..


நீதியோ நியாயமோ
சொல்லத் துணிவில்லை.
நேர்மையோ ஊழலோ
கண்ணில் படவில்லை.
சுவாசத்துக்கு சுவாசம்
பலிதான் பொருத்தமென
கண்கட்டிய நீதிதேவதையின்
கட்டவிழ்க்க இயல்வதில்லை.

இருந்தும் சாதிக்க
இன்னும் உன் உரம் இருக்க
நெருப்புதான் உரமென
நினைத்தாயோ அம்மா.
இறந்து போராடும் நீ
இருந்து போராடியிருக்கலாம்.
இருந்தும் இருக்கின்றோம்
இருப்பவற்றோடு இருப்பற்றவர்களாய்.

டிஸ்கி:- இந்தக் கவிதை சனிக்கிழமை 17., செப்டம்பர் 2011 பூவரசியில் வெளிவந்துள்ளது.

15 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையாய் சுட்டது, உங்கள் செந்தீ.

சசிகுமார் சொன்னது…

சூப்பர்...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super Kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super Kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Template super

NIZAMUDEEN சொன்னது…

செந்தீ... - ரொம்ப சூடு.
நன்...றீ

தமிழ்விழி வானலை யாழகிலன். சொன்னது…

எமது கொள்கைகளை எங்காவது என் தாயும் வாழ்த்துவாள் என்று இதயத்தில் நம்பிக்கை போகவில்லை.
இருந்தும் சில இடத்தில் கண்ணீர்
பல இடத்தில் அம்மாவின் மௌனங்கள்.
ஆனால் இந்த இடத்தில் நான் தலை நிமர்ந்து நிற்க உர மிடுகின்றது.
காரணம் நான் அறிவேன்.
நன்றிகள் அம்மா..

சுவாசத்துக்கு சுவாசம்
பலிதான் பொருத்தமென
கண்கட்டிய நீதிதேவதையின்
கட்டவிழ்க்க இயல்வதில்லை.

மரணத்திற்கு மரணம் தான்
பருசுகள் என்ற அறிவீன முட்டாள் தனத்தை உணர்த்தி அம்மாவுக்கு
மிக்க நன்றிகள்.
............................

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செந்தீ பிரளயம்....!!!

சே.குமார் சொன்னது…

கவிதை அருமையா இருக்கு அக்கா.

கணேஷ் சொன்னது…

மனதில் தைத்த கவிதை தேனக்கா... இருந்தும் இருக்கின்றோம்
இருப்பவற்றோடு இருப்பற்றவர்களாய்... என்ற முத்தாய்ப்பு வரிகள் மிக அருமை!

தமிழ் உதயம் சொன்னது…

உயிரின் அருமை பெண்மைக்கு தானே அதிகமாய் தெரிந்திருக்கும்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான கவிதை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இறந்து போராடும் நீ
இருந்து போராடியிருக்கலாம்.
சுட்டது,செந்தீ.......

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி சசி

நன்றி ராஜா

நன்றி நிஜாம்

நன்றி அகிலா

நன்றி மனோ

நன்றி குமார்

நன்றி கணேஷ்

நன்றி ரமேஷ்

நன்றி தமிழ்த்தோட்டம்

நன்றி ராஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...