172.
1981.பெண் சொல்லிக் கொள்வது – பெண் தன் தாய் வீட்டினர்,
தாயாதி பங்காளிகளிடம் சொல்லிக் கொள்ள வேண்டும். விரித்திருக்கும் பாயில் பெண்
கிழக்கு முகமாக வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நின்று ஒவ்வொரு உறவினரிடமும்
அதைக் கொடுத்துக் கும்பிட்டு விழுந்து வாங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டும்.
1982.குடிஅழைப்பு – பெண் சொல்லிக் கொண்டதும் மணமகளை மாப்பிள்ளையின் வலது பக்கம் நடுவீட்டுப் பத்தியில் நிற்கவைத்து விளக்கேற்றி அப்பத்தாள் அழகு ஆலாத்தி எடுத்து விபூதி பூசி அனுப்பி வைக்க வேண்டும். இது சமயம் பெண்ணின் தாயார் பால் பானை கையில் கொண்டு வர வேண்டும்.
1983.அரசாணிக்கால் அவிழ்த்தல் – பெண்ணின் அம்மான்
பெண்டிர் அரசாணிக்காலுக்குப் பொங்கல் இட்டு இறக்கியதும் பெண் வீட்டுப் பங்காளிகள்
அல்லது பெண்ணின் சகோதரர்கள் சரவிளக்கை மலை ஏற்றி உள்ளே வைத்துவிட்டு
அரசாணிக்காலில் உள்ள அரசிலை, மாவிலை, கிளுவை பாலை இலைகளை குச்சிகளை எல்லாம்
அவிழ்த்து எடுத்து விட வேண்டும். முளைப்பாரியை சிவப்புத்துணியால் மூடி ஊரில் உள்ள
ஊரணி அல்லது பொதுக்கிணற்றில் சேர்க்கச் சொல்ல வேண்டும். அப்போது சங்கு ஊதி
எடுத்துச் செல்ல வேண்டும். கிளுவை பாலைக் கம்புகளை வீட்டுத் தோட்டத்தில் ஊன்றி
வைக்கலாம்.
1984.பெண் அழைப்பு – மேளதாளத்துடன் மாப்பிள்ளை பெண்ணை
அழைத்து வலது காலை எடுத்து வைத்து
வரும்படிச் சொல்ல வேண்டும். அப்பத்தா அல்லது அத்தை விளக்கு வைத்து மணமக்களுக்கு
அழகு ஆலாத்தியும் பிள்ளையார் ஆரத்தியும் எடுத்து விபூதி பூசி உள்ளே அழைத்து வர
வேண்டும். மூன்றுஇலையில் சாதம் படைத்து நான்கு வாழைப்பழம், பருப்பு நெய் ஊற்றிப்
படையல் இட்டு அதன் முன் மூன்று தவலைகளில் தண்ணீர் வைத்து ஒன்றில் குலம் வாழும்
பிள்ளையையும் இன்னொன்றில் எழுத்தாணியையும் போட வேண்டும். மாப்பிள்ளை உடன்நிற்க
பெண்ணுக்குப் பெண் அழைத்த சடங்கு செய்ய வேண்டும். அதன் பின் இருவரும் இணைந்து
மூன்று தவலைக்குள்ளும் கைவிட்டு குலம் வாழும் பிள்ளையை மாப்பிள்ளை எடுத்துப் பெண்
கையில் கொடுக்க வேண்டும். எழுத்தாணியை எடுத்துத் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண் குலம் வாழும் பிள்ளையை எடுத்து இடுப்பில் பத்திரமாகச் செருகிக்கொள்ள
வேண்டும். இருவரும் சாமி வீட்டிற்குள் சென்று வணங்கி அமர்ந்து பால் பழம்
சாப்பிட்டு வர வேண்டும்.
1985.பச்சரிசி வேவு – வேவுக்கடகத்தில் பச்சரிசி பெ
படி 1, தேங்காய் 2, கத்திரிக்காய் 2 போட்டு இருக்கவேண்டும். பெண் வீட்டைச் சேர்ந்த
ஆண்கள் தலைப்பா கட்டித் தலையில் இந்த வேவை வைத்து மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த
பெண்கள் இறக்குதல் வேண்டும். முதலில் பெண்ணின் தகப்பனாரும் பெண்ணும் வேவு
இறக்குதல் வேண்டும்.
1986.நீர்ச்சோறிடுதல் – திருமணம் முடிந்த இரவு அல்லது
மறுநாள் பெண் வீட்டார் மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் கஞ்சி பணியாரம்,
வள்ளிக்கிழங்கு பொரித்து உள் வீட்டில் பெண் மாப்பிள்ளைக்குப் பரிமாறித் தயிர் ஊற்ற
வேண்டும். அன்றே பெண்ணின் அத்தை பெண்ணின் கழுத்தில் குச்சி தும்பு துவாலையைக் கட்ட
வேண்டும்.
1987.ஸ்ரீதன உண்டியல் – ஸ்ரீதனம், தலைச்சீலையில்
முடிந்தது, பாக்குச் சுருளில் வைத்தது, ஈடுபொன் தந்தது ஆகிய நான்கு தொகைகளையும்
குறிப்பிட்டு உண்டியல் எழுதி அதற்கு உண்டான தொகையுடன், புஷ்பம், வெற்றிலை பாக்கு,
எலுமிச்சம்பழத்தை ஒரு தாம்பாளத்தில் வைத்து மணமக்களின் தந்தையார், பெரியவர்கள்
மாமக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டியது. அதன்பின் ஒரு சிறு பையன்
மாப்பிள்ளையுடன் சேர்ந்து அந்தத் தொகையைத் தாம்பாளத்துடன் நடுவீட்டில் வைத்து
வணங்கி வர வேண்டும்.
1988.மூன்று வேவு/வழிகள் – திருமணம் முடிந்ததும் பெண்
வீட்டார் மூன்று முறை மாப்பிள்ளை,பெண்ணைத் தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல
வேண்டும். அதில் நீர்ச்சோறு இடுதல் முதல் வழியாகவும், மற்ற இரண்டு வழிகளுக்கும்
ஒரே வழியாகவும் வந்து வரலாம். இந்த முறைகளுடன் செட்டிநாட்டுத் திருமணம் பூர்த்தி
அடைகிறது.
1989.கல்யாணப் படைப்பு – படைக்கும் பழக்கம்
உள்ளவர்கள் அவரவர் வழக்கப்படித் திருமணம் முடிந்ததும் அல்லது திருமணத்துக்கு முன்பு
படைத்து வழிபட வேண்டும். புது வேட்டி, துண்டு, புடவைகள் எடுத்து அலசிக்
காயவைத்துப் பாற்சோறிட்டு மரக்கறிக்காய் வடை அப்பளம் பொரித்து பால்பழம்,
வள்ளிக்கிழங்கு, வாழைக்கய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் சமைத்து, வெள்ளைச்சோறு வாழைப்பழம் வைத்துப் பூமாலை
போட்டு நகைகள், தாலி, மிஞ்சி மோதிரம்போன்றவை வைத்துப் பள்ளயம்படைக்க
வேண்டும்.
1990.பால் பழம் வைத்துக் கும்பிடுதல். முன்னோர்கள்
துணை வேண்டிப் பால் பழம் வைத்து வணங்க வேண்டும். வெள்ளைப்பணியாரம், பச்சைத்
தேன்குழல், பால் போன்றவையும் புதுத்துணிமணிகள் வைத்தும் படைக்கலாம்.
.////கழுத்துரு ஓர் உறுதிமொழிச்சின்னம் .....
கழுத்துரு என்ற கோர்வை ஒரு குடும்பம் போன்றது.
நம்வழக்கில் ஒரு புள்ளி போன்றது. இதில் உள்ள21 பாக நூல் 21 தலை முறை பாரம்பரியத்தை
குறிக்கிறது. கழுத்துருவின் கீழ்ப்பகுதி மணமகனையும் மேல் பகுதி மனமகளையும்
குறிக்கிறது.
இதில் உள்ள 31+3 பாகங்களை உற்றுப் பாருங்கள்.
பொருள் தன்னாலே தெரியும். மேல்பகுதியில் உள்ள
திருமாங்கல்யம் மணமகளையும், கீழ்ப்பகுதியில் உள்ள லட்சுமி ஏத்தனம் நாலு சுவர்களால் கட்டப்பெற்ற வீட்டையும் வீட்டின் தலைவனான மண மகனையும்
குறிக்கிறது. மேலே உள்ள 2 கடை மணிகளும் கிழே உள்ள
2கடைமணிகளும் ஆக 4ம் 4திசை களையும் குறிக்கிறது.கீழே உள்ள 2ஏத்தனம் மணமகனின்
2கைகளையும் மேலே உள்ள2 ஏத்தனம் மணமகளின் 2 கைகளையும் குறிக்கிறது. 2சரிமணிகளும்
ஆண் பெண் குழந்தைகளைக் குறிக்கிறது. உரு 19ம் மணமகனின் 21தலைமுறை முன்னோர்களில் மணமகனின் தந்தை வழி ஐய்யா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் பெயரில்
முதலில் பணத்திருப்பேட்டில் வரவு வைக்கப்பட்டு அவர் இருப்பதாகப் பாவித்து அவரையும் நீக்கி மணமகனின் தந்தை திருமணத்தை நடத்தி முன்னிலை வகிப்பதால்
அவரையும் நீக்கி மீதி உள்ள 19முன்னோர் களையும் குறிக்கிறது. 31 பாகங்களுக்குமான
மேற்சொன்ன எல்லாவற்றையும் சேர்த்து சொன்னால் , மணமகள் மண வரை மேல் நின்று மணமகனை நோக்கி, 'தங்கள் 21தலைமுறை பாரம்பரியத்துடன் 21 முன்னோர்களில் 19 பேர் ஆசீர்வாதத் துடன் 2 பேர் உடன்
இருக்க திருமகளே உருவான நான் தங்களுடன் தாங்கள்
நாற்புறமும் சென்று அறவழியில் ஈட்டி வரும் பொருளை வைத்து மணியான ஆண் பெண்
குழந்தைகளைப்பெற்று, தங்களுக்கும் மேலாக நின்று இல்லறம்
நடத்த நான் உறுதி கூறுகிறேன். நீங்களும் உறுதி
அளிக்கிறீர்கள் என்று சொல்லி மங்கல அணிகலனை ஏற்கிறாள் என்பதாகும்.
திருமணம் முடிந்தபிறகு கோர்க் கப்படும் குச்சி தும்பு துவாளை ஆகியவை,கணவன் மனைவி
ஆகி உறுதி மொழி ஏற்பது போன்றது.குச்சி ஊன்று கோலைப்போன்றது. தும்பு
பிடியைப்போன்றது. துவாளை தடியைப்போன்றது. அதாவது, கணவனும் மனைவியும்
சேர்ந்து,'இல்லறத்தை ஊன்றுகோலாக்
கொண்டு ஒருவரை விட்டு ஒருவர் பிரியாது எதிர் வரும் தடைகளை நீக்கி வாழ்வில் வெற்றி
பெறுவோம்.' என்பதாகும்.////
டிஸ்கி
:- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.
98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.
107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.
108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்
109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.
110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.
111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.
112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.
113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.
114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.
115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.
116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.
117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.
118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.
119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.
120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.
121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.
122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.
123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.
124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.
125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.
126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்
127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.
128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.
129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.
130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.
131.காரைக்குடி முனியையா கோயில்.
132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.
133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.
134. வட்டாரப் பழமொழிகள் - 1.
135. வட்டாரப் பழமொழிகள் - 2.
136. வட்டாரப் பழமொழிகள் - 3.
137. வட்டாரப் பழமொழிகள் - 4.
138. வட்டாரப் பழமொழிகள் - 5.
139. வட்டாரப் பழமொழிகள் - 6.
140. வட்டாரப் பழமொழிகள் - 7.
141. வட்டாரப் பழமொழிகள் - 8.
142. வட்டாரப் பழமொழிகள் - 9.
143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.
144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.
145. மாத்தூர் - சில சிறப்புகள்.
146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.
147. பேர் பெற்ற வீடு.
148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.
149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.
150. பூசைச் சாப்பாடு.
151. அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.
152. பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்
153. மணவறைச்சடங்கும் மாமவேவும்.
154. பணத்திருப்பேடும் குடிவழியும்.
155. ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்
156. பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.
157. குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.
158. நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.
159. படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.
160. முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.
161.ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்
162.காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்
163.பொங்கல் - சில குறிப்புகள்
164.போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்
165. கொஞ்சம்
ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச்
சீப்பும்
166. மடக்கு
இரட்டைக் கத்தியும் ஜெர்மன் கத்திரிக்கோலும்
167. மைசூர்ச் சட்டியும் தூக்குச்சட்டியும் தெக்களூர்த் தவலையும்
168. ராமேஸ்வரம் சோகியும், மருந்துரைக்கும் கல்லும், சீசாக்களும்
169.
சங்கும் சீப்பாம்பட்டைக் கரண்டியும்
அடுக்குச் சட்டிகளும்
170.
சுவாமிக்குப் பணம் முடிதலும் பகவத்யானமும்
171.
சீராட்டுக் கொடுத்தலும் நாணாளைச் சடங்கும்
172.
குடி அழைப்பும் கல்யாணப் படைப்பும்
டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!