எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 டிசம்பர், 2014

வல்லபி , மாதேவி - நம்பிக்கை மனுஷிகள்.



கோவையில் சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருந்த தெருவில் கடைசியில் இருந்த வீட்டில் இரு பெண்கள் இருந்தார்கள். இருவருமே கல்லூரியில் பயில்பவர்கள். ஒரு நவராத்திரி சமயம் சகோதரிகளில் மூத்தவர் எங்கள் தெருவின் முக்கில் கால் தடுக்கி விழுந்துவிட்டதாக என் மாமியார் சொன்னார்கள்.

அந்தப் பெண் மிகவும் மெலிவாக இருப்பார். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதே போல் சில நாட்களில் அவரின் சகோதரியும் கல்லூரிக்கு  நடந்து செல்லும்போது கீழே விழுந்துவிட்டார். போலியோவுக்கு சின்னப் பிள்ளையில் மருந்து கொடுக்காவிட்டால் அது இப்படி பெரிய பிள்ளையானதும் கூட பாதிக்கும் என்று பேசிக் கொண்டார்கள் மக்கள்.

பழைய பேப்பர்..:-

பழைய பேப்பர்..:-
****************************
வாசித்தவுடன் அனைத்தும்
வீடடைக்கும் குப்பைகளாகி
எடைக்குப் போடத்
தகுதியானவையாகிவிடுகின்றன.

மொழிவாரியாக
பிரிக்க வேண்டும்.,
மானியத்திற்கல்ல..
விலை கூடக்கிடைக்க..

திங்கள், 1 டிசம்பர், 2014

செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES.

அக்கினியாத்தாள் படைப்பு வீடு ( சாமி வீடு.)


செட்டிநாட்டு வீடுகள். சினிமா, சீரியல் எல்லாம் இங்கேதான் எடுக்கப்படுகின்றன. ஆத்தங்குடி, கொத்தமங்கலம், கண்டனூர், புதுவயல், காரைக்குடி ஆகியன சினிமாக்காரர்களின் ஆதர்ஷ ஷூட்டிங் ஸ்பாட்டுகள்.

இவை செட்டிநாடு என்று சொல்லப்படும் 96 - தற்போது 72 ஊர்களில் உள்ள நகரத்தார்களின் எஞ்சிய வீடுகளில் உள்ள பகுதிகள்.



46 . நகரத்தார் - நாட்டில் கோட்டை கட்டி வாழ்ந்ததால் நகரத்தார்.

செவ்வாய், 18 நவம்பர், 2014

வழித்துணையும் சுமைதாங்கியும்.

தலைக்குமேல் ஒரு கூரை
பக்கவாட்டு வெய்யில்
சல்லடைத்துளி மழை
ஒரு முழம் துணி
எப்போதோ ஒரு தீபமும்
பிள்ளைகள் சூழ்ந்து ஆடும் போதில்
சிதறிய தேங்காத்துண்டுகளும்.
இதற்குமேல் ஆசைப்படுவதில்லை
எங்கள் தெருவோரக் கடவுள்..
போகும் திசைக்கெல்லாம்
கைபிடித்துக் கூடவே வருவதும்
ஓய்ந்தமர்ந்த நேரங்களில்
எங்கள் திட்டைப் பெற்றுக்கொள்வதும்
அவர் பொழுதுபோக்கு.

திங்கள், 17 நவம்பர், 2014

கணவன் அமைவதெல்லாம்..

61. சகோ எல்லாரும் பிறந்த வருஷத்த இங்க எழுதுங்க.. யார் அண்ணன், யார் தம்பின்னு தெரியல.. ( நேத்துதான் காலேஜ் படிக்கிற மாதிரி இருந்த ஒரு தம்பிக்கு காலேஜ் போற மக இருக்கான்னு தெரிஞ்சுச்சு.. ! )

*******************************************

62. எது ரொம்பப் பிடிக்குதோ அதே ஒரு சமயம் வெறுக்குது. எது ரொம்ப வெறுக்குதோ அதே ரொம்பப் பிடிக்குது.. ஹாஹா கொழப்பமா இருக்கா எனக்கும்தான் :)

******************************************

63. முன்ன பத்துமணியானா பக்கத்துவீட்டுல கொஞ்சநேரம் அரட்டை அடிப்போம். இப்ப ஃபேஸ்புக்குல.. மனுஷ சுபாவம் மாறவே இல்ல.  :)

******************************************

64. இனிப்பு சீடை விக்குது., பட்சணமெல்லாம் விக்குது., பிரியாணி கூட விக்குது.. கொழுக்கட்டையும் ., சர்க்கரைப் பொங்கலும் கூட வித்தா நல்லா இருக்கும்.. :) :) :)

******************************************

65. மிட்நைட்ல முழிப்பு வந்தாலும் ஃபேஸ்புக்கை எட்டிப் பார்க்கலாமான்னு நெனைக்கிறது எத்தனை பேரு. :)

********************************************

66. வெளியே ஒரே மழை.. ஜன்னலோரம் உக்கார்ந்து கல்கியோட ஒரு புத்தகமும் வேகவைச்ச சோளக்கருதும்.. எது டேஸ்டுன்னு சொல்ல முடியல.. :)

********************************************

67. புயலுக்குப் பின்னே அமைதி என்பது இதுதானா.. நிசப்தம் கூடக் காதை அறைகிறது. பக்கத்துணையாக பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு சின்ன நாய்க்குட்டி பிஞ்சுக்குரலில் கத்திக் கொண்டே இருக்கிறது. எடுத்து வளர்க்கிறாங்களா.. அல்லது அம்மாவைப் பிரிந்த துயரமா தெரியலை.. என்னவோ போல இருக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...