எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

பெங் குவின்களும் வால்ரஸ்களும்.

961. சொல்பேச்சு கேட்பதில்லை
கடுக்கிறாள் அக்கா
கத்திக் கத்தி வயிறு புண்ணாப் போச்சு
கோபிக்கிறாள் அம்மா
எதையும் காதில் போட்டுக் கொள்வதில்லை
சலிக்கிறாள் மனைவி
கேளுப்பா கன்னம் பிடித்துக்
குழைகிறாள் மகள்.
இடையறாது கூவிக் கொண்டிருக்கிறது
யாரையும் நோகாது குயில்

962. பர்சனல் பழிவாங்கலுக்காக கைதிகளைத் தப்ப விட்டுக் கொண்டிருந்தால் மக்களின் கதி என்ன.

963. சொல்ல எவ்வளவோ இருந்தும், சின்ன இடத்திலிருந்து உற்பத்தியாகி எல்லா அழுக்குகளையும் கரை நிறையச் சுமந்தும் தனக்குத்தானே பேசிக்கொண்டு மௌனமாய்ச் சங்கமமாகிறது பெருநதி.

964. ஹலுவா.. ஆரஞ்ச், பிஸ்தா டேஸ்டுல.



965. பனிப்பாறைகள் சூழ்ந்த தீவிலும்
தனியே வாழும் பெங்குவின்கள்.
தனித்தலையும் வால்ரஸ்கள்.
புது யுக வாழ்வு..
தனித்துவம் தான் தத்துவம்
இறுகிக்கிடக்கிறது
தாம்பத்யக் குகை..
வெளியேற வழியற்று
உறைந்து கிடக்கின்றன மீன்கள்
சூரிய வெப்பம் சாட்டவிடாமல்
இருண்டு கிடக்கிறது
தென் துருவமும் வடதுருவமும்

கவனிப்பும் அவதானிப்பும்.

941. சில்வியா ப்ளாத், ஆத்மாநாம், ஸ்டெல்லா புரூஸ்... தனிமையை வெல்ல இயலாதவர்கள். ஆனாலும் கவர்ந்து கொண்டே இருக்கிறார்கள். <3 br="">
<3 br="">
942. sometimes the problem making child is
.
.
.hubby or wife.. hehehe


943. சென்ற வாரம் பார்த்த மூன்று படங்களிலும் ஒரு ஒற்றுமை. அண்ணா என்ற பெயர் உள்ள கதாபாத்திரம் இடம் பெற்றிருந்தது. எதிர்ப்பாளர்கள் யாருமில்லையா...

944. Idi idichathula eb yee kanama poiduchu pola. Inverter epo theerapogutho therila.

945. பிரமாதமான எழுத்தாளர்கள் எல்லாம் பத்ரிக்கை ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள்.

#ப்ரம்மாக்களின்_சுதந்திரம்_அச்சின்_வசம்.

946. பேட்டி எடுத்து அச்சுக்குப் போகும் தருணத்தில் ‘நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்துங்க ‘ என்றால் என்ன கிறுக்குத்தனம் இது. முன்பே சொல்லி இருந்தால் எல்லாருடைய நேரமும் மிச்சம்.

#புத்திக்_கொள்முதல்.

947. ஒரு லேடிய ஊர் விட்டு ஊர் போய் பேட்டி ஃபோட்டோ எல்லாம் எடுத்து பத்ரிக்கைக்கு அனுப்பிய பின்னாடி நிறுத்த சொல்லி ஃபோன் பண்ணாங்க எல் கே . அந்தக் கடுப்புலதான் போட்டேன்.

948. ஊரார் கண்ணுக்கு அட்டு ஃபிகரா தெரியணும்., ஊட்டுக்காரர் கண்ணுக்கு அழகு ஃபிகரா தெரியணும்.

ஊரார் பார்வையில புத்திசாலிப் புள்ள ஊட்டுக்காரர் முன்னாடி கூமாச்சிப் புள்ள

ட்ராவல் & லிவிங், ஸ்பெல் பீ பார்த்து சவடாலா இருக்கக் கூடாது. டிவி சீரியல் பார்த்து பேக்காச்சி மாறி அழுவணும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

921. அம்மா தல சுத்துறது எப்பிடி இருக்கு.

இப்ப ரொம்ப பரவாயில்லைடா சூப்பரா இருக்கு.

என்னது சுத்துதா இல்லையா

முழுவட்டமா சுத்துனது இப்ப கால் வட்டம் அரை வட்டமா சுத்துடா..

ஏம்மா இப்பிடி..

ஹிஹி நீ மட்டும் என்னவாம் உடம்பு எப்பிடிடா இருக்குன்னா நடந்தா கூடவே வருதும்பியே.. (கிகிகி. பழிக்குப் பழி.. புளிக்குப் புளி )

922. 100 வருஷம் சேவைக்குப் பாராட்டு. இதையாவது நல்லா சேவை செய்ய விடுங்கப்பா.. ஒரிஜினல் பாங்க் ஆஃப் மதுரா மாதிரி ஒரு அன்யோன்யம் உண்டு இந்த வங்கியின்மேல்.

தலைவர் இருக்குமிடம்.

923. பாடலின் அற்புதம் காட்சியில் சர்வநாசம்
https://www.youtube.com/watch?v=tIcmHXd7YAE

924. விஷத்தையும் அமிர்தத்தையும் ஒரே நேரத்தில் கொடுப்பது சிலரது பழக்கம்.

‪#‎வாய்ப்பூ‬

925. பொண்ணு செமயா ரொம்ப அழகா இருக்காளே.

ஆமா. அவ அம்மா மாதிரி ப்ரிட்டி. அழகி, :)

-- இத சொல்ல ஒவ்வொரு கணவனுக்கும் 50 வயசுக்கு மேல ஆகவேண்டி இருக்கு. :)

‪#‎தங்கமகள்_திருமணம்‬

சனி, 3 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். மீரா செல்வகுமார் பிடிச்ச பிள்ளையாரப்புச்சி


என் முகநூல் நண்பர் செல்வகுமார். இவர் ஒரு ப்லாகரும் கூட. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளார். புதுக்கோட்டைக்காரர்.மழை பற்றியும் மழலைகள் பற்றியும் இன்னும் பலவும் கொண்ட இவரது கவிதைகள் பல படித்திருக்கிறேன். ஈஷா பற்றிய இவரது பதிவு கவனத்துக்குரிய ஒன்று. நல்ல விளாசல்.

இவரிடம் நேற்று ”செல்வா என் ப்லாகுல சாட்டர்டே போஸ்ட் நு ஒன்னு போடுறேன்
அதுக்கு ஏதும் எழுதித் தாங்க ஒரு 4 பாராலேருந்து ஒரு கட்டுரையே இருக்கலாம்.எந்த டாபிக்வேணாலுமெழுதுங்க.சாட்டர்டே போஸ்ட் & சாட்டர்டேஜாலி கார்னர் அப்பிடின்னு ரெண்டு போஸ்ட் போடுறேன். இதுல எது எழுதினாலும் சரி. சீரியஸாவோ சிரியஸாவோ இன்னிக்கு நைட்டுக்குள்ள அனுப்பிடுங்க ப்ளீஸ். ( எனக்கே சாட்டர்டே ஜாலி கார்னர் மறந்திடும் போலிருக்கு. ) புகைப்படம் ஒண்ணும் அனுப்புங்க. ஷேர்ஸ் பத்தி இல்லாட்டி நீங்க ஷேர் பண்ணிக்க விரும்புற எந்த விஷயம் சம்பவம் பத்தியும் அனுப்பலாம். ” என்று கேட்டேன். ( அப்பாடா ஒரு ப்லாகர்கிட்ட கேட்டுட்டோம். உடனே அனுப்பிருவாங்க என்று சந்தோஷம் ) ஒரு மணி நேரத்துலேயே அனுப்பிட்டாரு ! பதிவர்கள் எப்போதுமே பெஸ்ட் & ஃபாஸ்ட் ! :) .

அவர் தந்த பதிலை எடிட் பண்ணாம ( சாபம் போடப் போறாரு . இருந்தாலும் பரவாயில்லை ) அப்பிடியே போடுறேன். :) 


 

////இப்டி திடீர்னு கேட்டா என்னத்த எழுத? குருட்டுப்பூனை விட்டத்துல பாஞ்ச மாதிரி முழிக்கிறேன்.. நாமால்லாம் நல்ல நாள்லயே தில்லநாயகம்..


சரி...இறங்கியாச்சு...சாண் போனா என்ன முழம் போனா என்னன்னு ஒரு பிள்ளையார்சுழியப்போடலாம்னா.. அட... பிள்ளையாரையே எழுதிடலாம்னு சட்டுன்னு ஒரு யோசன..


வியாழன், 1 செப்டம்பர், 2016

பொசலுத் தாயி.

பொசல்

மிகத் தைரியமாக தான் நினைத்ததைக் கதைகளின் வாயிலாகச் சொல்லும் கம்பீரம் கவிதா சொர்ணவல்லிக்கு வாய்த்திருக்கிறது குறித்துப் பெருமையும் அதே சமயம் பொறாமையும் ஏற்படுகிறது. நேசிக்கும் ஒன்றைத்தானே வெறுக்கவும் பின் விரும்பவும் முடியும். பொசலை விரும்பவும் அதில் சென்று ஆடவும் பாடவும் ஒருத்தியினாலேயே முடியும் என்றால் அவள் கவிதாவாகத்தான் இருக்க முடியும். ஒன்பதே கதைகள் கொண்ட தொகுப்பை இரு வருடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளாள். அதைப்படிக்க இப்போதுதான் சமயம் வாய்த்தது. ( சென்னைக்குச் சென்றால்தான் அதுவும் டிஸ்கவரிக்குச் சென்றால்தான் வாங்க முடியும் என்ற நிலையிலேயே இன்றைய எனது வாசிப்பு இருக்கிறது )

Related Posts Plugin for WordPress, Blogger...