எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜூலை, 2016

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாதே.


மதிப்பிற்குரிய வேதா மேடம் & சுபா அவர்கட்கு,

தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிக் கொண்டது.

இத்துடன் ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற தலைப்புக்காக எழுதிஅனுப்பி இருக்கிறேன்.

அன்பும் வாழ்த்தும்

தேனம்மைலெக்ஷ்மணன்.

*************************************

தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக.

ஏமாற்றாதே ஏமாறாதே.

ஏ எஸ் டி எஃப் ஜி எஃப். செமிகோலன் எல் கே ஜே ஹெச் ஜே.. இதைத் திரும்பத் திரும்ப அடித்தபடி இருந்தாள் வள்ளி அக்கா. டைப்ரைட்டிங் வகுப்புக்கு ஆனா ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் இதுதான். அவள் தினமும் குன்றக்குடியில் இருந்து ஒரு வாரமாக வந்து கொண்டிருக்கின்றாள். நான் பக்கத்து சேரில் அமர்ந்து லெட்டர் டைப் செய்துகொண்டிருந்தேன். க்ர்ரிக் க்ர்ரிக் என நகர்த்தி நகர்த்தி அடிக்க ஆரம்பித்தேன்.

புதன், 20 ஜூலை, 2016

இளம்பிரிவும் இதயத்தின் பாடல்களும்.

என்னை எப்பொழுதும் மயக்கும் பாடல்கள்.

அழகே வா அருகே வா. 



நானே வருவேன்.



வா அருகில் வா.



நான் கவிஞனும் இல்லை

செவ்வாய், 19 ஜூலை, 2016

நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.

821. பூக்குடலைத் தூரப் போடு
பாமாலைகளைக் கிழித்தெறி
சரிக்குச்சரி சமராடு
ருத்ரம் உன் திருக்கோலம்
ரத்தம்தான் நிவேதனம்
நீ சரபமல்ல. மஹா ப்ரத்யங்கிரா.

822. தப்பிதமான கற்பிதங்கள் காவு வாங்கி விடுகின்றன, சில சமயம் சரிவரக் காணாத உண்மையை  ,. சில சமயம் தறிகெட்டலையும் மனதை.

823. நான் ஃபேஸ்புக்/ப்லாக்/ஜி மெயில்/ யாஹூ எதுலயும் ஆன்லைன்/ஆஃப்லைன்லயும் வந்தாலும் வராட்டியும் என் ப்லாக் போஸ்ட் எல்லாம் ப்ரீ போஸ்ட் பண்ணி வச்சிருக்கதால தினம் திங்கள் - வெள்ளி என் ப்லாகிலயும் நெட்வொர்க்ஸ் ப்லாக்ஸ் மூலம் என் ஃபேஸ்புக் பேஜ்லயும் பப்ளிஷ் ஆகும்.

நான் ஆன்லைன் வந்துட்டு அப்போ மெயில் பண்றவங்களுக்கு அல்லது என் பேஜ்ல கமெண்ட் பண்ணவங்களுக்கு ரிப்ளை பண்ணாம போயிட்டேன்னு நிறைய பேர் தப்பா நினைக்கிறாங்க..

ப்ளீஸ் மக்காஸ்.. நான் ஆன்லைன் வந்தா நிச்சயம் ரிப்ளை செய்யாம போ மாட்டேன். உங்களுக்கு மட்டும் ரிப்ளை பண்ணலைன்னு கோச்சுக்க வேண்டாம். அல்லது ப்ளாக் பண்ண வேண்டாம்.

824.  சில பேர் பேரு திடீர்னு கருப்பா தெரியுது.. டீஆக்டிவேட் செய்தாங்களா. , ப்ளாக் செய்தாங்களான்னு புரில.. அப்புறம் திடீர்னு ப்ளூவுக்கு மாறிடுறாங்க.. ஹ்ம்ம்.. ரொம்பக் கொழப்பம்பா மார்க்கு.

825.முகநூல் பக்கங்களில் ஒவ்வொருவரும் (AUTOBIOGRAPHY ) அறிந்தும் அறியாமலும் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறோம்.

826. கண்ணிலே அன்பிருந்தால் மனசுக்குப் பிடிச்சதெல்லாம் அழகா தெரியும்.. ஹிஹி --- பொன்மொழி பை தேனம்மானந்தமயி.

திங்கள், 18 ஜூலை, 2016

செவ்வாய், 12 ஜூலை, 2016

சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.


சிவப்பு ஓலைக் கொட்டான்கள்.

சிவப்புஓலைக் கொட்டான்கள் அலங்காரக் கொட்டான்கள்.  மற்ற அலங்காரக் கொட்டான்களிலும்  வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களுக்கு பூ, பிஸ்கட், மிட்டாய் போன்றவற்றை வைத்துக் கொடுப்பார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...