எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
MAHABALIPURAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MAHABALIPURAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2018

மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள்.


மாமல்லபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை இருக்கிறது. அங்கே பல்வேறு வகையான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் அன்று அங்கு செல்ல அனுமதி இல்லை. கிடைத்தவற்றை சுட்டிருக்கிறேன். அதோடு முன்பே எடுத்தவையும் வருகின்றன. 

சுவரில் செதுக்கப்பட்ட எல்லா சிற்பங்களின் மேலும் சித்திரக்குள்ளர்கள் காட்சி அளிப்பது அழகு. பல்லவப் பேரரசன் மாமல்லன் நரசிம்மனின் சிற்பம் மட்டும் கறுப்பு நிறத்தில் காட்சி அளிக்க மற்றவை எல்லாம் சுண்ணாம்பு/வண்ணம் அடிக்கப்பட்ட மாதிரி இருக்கின்றன. சிம்ம யாளிகளும் தூண் நாகங்களும் ( காரைக்குடித் தூண்கள் போல ) காட்சி அளிப்பது சிறப்பு. 

இனி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் குறிப்புகள் தொடர்கின்றன. 

வியாழன், 24 மே, 2018

மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.


மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். 

பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. 

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் ( கி. பி. 630 – 638 ) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போல காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும்.

திங்கள், 10 ஜூலை, 2017

மஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்களும்.



மஹாபலிபுரம் ஒரு பார்வை என்ற பாலகணேஷ் சகோவின் ( தங்கத்தாமரை பதிப்பகம் ) நூலில் படித்தபின் தோன்றியது, மலைகளும் கூட ஒருநாள் கரையக்கூடும் என. மலையே கரையும்போது மனுஷன் எல்லாம் மண்ணுடா எனவும் தோன்றியது. 
 
அலை அடித்து அலை அடித்து அந்த ஐந்துரதக் கோயில்களும் உள்ளே இன்னொரு கோயிலில் அனந்தசயனப் பெருமாள் தோற்றத்தில் ஒரு சிலையும் சிதையுண்டு கிடக்கிறது.

மகேந்திர பல்லவரும் , மாமல்லர் நரசிம்மரும், பார்த்துப் பார்த்து உருவாக்கிய சிற்பங்களில் சிலவற்றையே ரசிக்க முடிகிறது. அவற்றைக் காணும்தோறும் நமக்கு ஆயனச் சிற்பியும் சிவகாமியம்மையும் மனக்கண்முன் தோன்றுவது தவிர்க்க இயலாதது. 

இரண்டு முறை மல்லைக்குச் சென்றிருந்தாலும் முதல் முறை எடுத்த புகைப்படங்களை இப்போது பகிர்ந்துள்ளேன்.




மாபெரும் வணிகத்தலமாக விளங்கிய மல்லை கடல் கொண்டபின் இன்று புராதனச் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், கடற்கரைக் கோயில்கள், பஞ்சபாண்டவர் இரதங்கள் , குகைச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியன இங்கே சிறப்பு.


Related Posts Plugin for WordPress, Blogger...