காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
1.கருப்பட்டியார்
வீடு
2. சுவரொட்டியார்
வீடு - செவரக் கோட்டை என்ற ஊரில் இருந்து (கல்லுப்பட்டிக்கு அருகில் உள்ளது ) வலசை
வந்தவர்களை செவரக் கோட்டையார் வீடு என்று சொல்வார்கள். பேச்சு வழக்கில் மருவி சுவரொட்டியார்
வீடு என்று ஆகி விட்டது.
3. ஆற்காட்டார்
வீடு- குன்றக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்காடு என்ற ஊரிலிருந்து வலசை வந்தவர்கள்.
4. நெய் வாசலார்
வீடு – நெய்வாசல் என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்
5. வேகுப்பட்டியார்
வீடு – வேகுப்பட்டி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்.
6. ஆத்தங்குடியார்
வீடு – ஆத்தங்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர்கள்
7. ஆவுடையான்
செட்டியார் வீடு – திருவாலங்காட்டில் பசுமடம் வைத்து பால் கட்டளை நிறைவேற்றி வருபவர்கள்
வீடு. ஆ என்றால் பசு. திரு என்றும் அர்த்தம்.