எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
79 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
79 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..

1561. இரவல் புத்தகம் திரும்பி வந்ததாகச் சரித்திரமில்லை. 3:)

1562. செம்மாதுளை பீட்ரூட் கலரைப் பார்த்தா பயமா இருக்குதே இது எல்லாம் ரியல் கலர்தானா 

1563. நேத்து காயத்ரியை கேரளா தமிழ்நாடுன்னு கடத்துறாங்க. ராதா காணமப் போயிட்டாங்க.தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு செயல்படுதா இல்லியா.

#ஒண்ணுமில்லிங் ரண்டு நாளா நம் உறவினர்கள் நம்ம வீடு வந்து டிவி சீரில் பார்த்தாங்க :)

1564. தங்கல் போன்ற படத்தை மென்மனம் படைத்தவர்கள் பார்க்காமல் இருப்பது நல்லது. முடிவில் அந்தப் பெண் குஸ்தி போட்டியில் போராடப் படும்பாடு பார்த்து இதயம் ஒரு நெருக்கடிக்கு உள்ளான மாதிரி சிரமமாக இருந்தது. மிக நீண்ட க்ளைமேக்ஸ் வேற. பாடுபட்டு ஜெயிக்கணும்தான் ஆனா பாடே பெரும்பாடாப் படக்கூடாது. விமர்சனம் போட்ட அன்னிக்கே எழுத நினைச்சேன்.

1565. தொடர்ந்து டிவி சீரில் பார்த்தா நாம புத்தியும் கொடூரமாகி யாரையாவது கன்னா பின்னான்னு திட்டனும் போலிருக்கு.

#தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள். தெய்வமகள், குலதெய்வம், வம்சம்.