எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் இல்லம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 நவம்பர், 2019

மீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.

காரைக்குடியில் வனா யினா வீதியில் ( ஆலங்குடியார் வீதிக்குப் பாரலல், சந்தைப்பேட்டைக்குச் செல்லும் வழி/சந்தைப்பேட்டைக்கு அருகில் ) இருக்கிறது. மீனாக்ஷி முதியோர் இல்லம். இதை காந்திமதி அறக்கட்டளையைச் சேர்ந்த திரு கணேசனும் அவரது மனைவி திருமதி தனலெக்ஷ்மியும் நடத்தி வருகிறார்கள்.

இங்கே முதியவர்கள் மாதம் ரூபாய் 5,000/- வீதம் பணம் கொடுத்துத் தங்குகிறார்கள். இவர்களை திரு. கணேசன் அவர்களும் அவரது மனைவி திருமதி. தனலெக்ஷ்மி அவர்களும் தொண்டுள்ளத்துடன் கவனித்துப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்துத் தங்கும் வசதியுடன் கூடியது இந்த இல்லம் ( தண்ணீர், மின்சாரம், படுக்கை, கழிவறை வசதிகள் உள்ளன )


நாள் கிழமைகளில் நம்மைப் போன்ற சிலர் உணவளிக்க விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கே கிட்டத்தட்டப் பதினைந்து முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

செவ்வாய், 31 ஜூலை, 2018

சிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.

 ஆ.. காரைக்குடியிலா முதியோர் இல்லமா. அதுவும் நகரத்தார் குடும்பங்களிலா என்று திகைக்க வேண்டாம். இன்று பல்வேறு காரணங்களை ஒப்பு நோக்கும்போது முதியவர்கள் தங்க இவை பாதுகாப்பானவையாகவே எனக்குத் தோன்றுகிறது. இங்கே தங்குபவர்கள் மாதாந்திரக் கட்டணம் கட்டி மிகுந்த வசதியோடேயே தங்குகிறார்கள்.. ஹோம் அவே ஃப்ரம் ஹோம். பட் இட்ஸ் அ ஹோம்.. 

பெரிய வீடுகளில் தனித்தனியாகத் தங்கி வந்த பெரியவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தனிமை கருதி இங்கே தங்கி இருக்கிறார்கள். வசதியானவர்கள். ஒரு மகன், ஒரு மகள் உள்ள பெற்றோர், அல்லது பிள்ளை இல்லாதவர்கள், கணவன் அல்லது மனைவி இழந்தவர்கள் இவர்களுக்கு கிட்டத்தட்ட 60 வயதில் இருந்தே உடல்நலக் கோளாறுகள் ஆரம்பித்து விடுவதால் எல்லா வேலைகளையும் முன்போல் தனக்குச் செய்து கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மூன்று வேளையும் சுடச் சுட சமையல்.

வெள்ளி, 31 மார்ச், 2017

சரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புகழ் அமுதம்.

சென்ற மாதம் ஒருநாள் மதுரை கருப்பாயி ஊரணியில் இருக்கும் சரண்யா முதியோர் இல்லத்துக்குத் திருப்புகழ் பாராயணக்குழுவினருடன்  சென்றிருந்தேன்.

முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களாலும் ரோட்டரியாலும் மிக அருமையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த முதிய பெண்கள் இல்லம். அனைவரும் சீருடை போல மஞ்சள் புடவையும் சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தனர். அங்கே பல மதத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்புரை ஆற்ற வருவார்கள் என்றும் ஃபாதர், போன்றவர்களும் உரையாடுவார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவரும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.  இரண்டு பெண்கள் இங்கே பணி புரிகிறார்கள். இதனை நிர்வகிப்பவர் வீடு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறார். 

முதுமை, உடல் நலக்கோளாறுகள், மூட்டுவலிகள் போன்றவை இருந்தும் அந்தக் காலை நேரத்தில் குளித்துவிட்டு அழகாக அனைவரும் காத்திருந்த காட்சி மறக்க இயலாதது.
வாசலில் விதம் விதமாக வண்ணக் கோலங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...