ஆ.. காரைக்குடியிலா முதியோர் இல்லமா. அதுவும் நகரத்தார்
குடும்பங்களிலா என்று திகைக்க வேண்டாம். இன்று பல்வேறு காரணங்களை ஒப்பு நோக்கும்போது
முதியவர்கள் தங்க இவை பாதுகாப்பானவையாகவே எனக்குத் தோன்றுகிறது. இங்கே தங்குபவர்கள்
மாதாந்திரக் கட்டணம் கட்டி மிகுந்த வசதியோடேயே தங்குகிறார்கள்.. ஹோம் அவே ஃப்ரம் ஹோம்.
பட் இட்ஸ் அ ஹோம்..
பெரிய வீடுகளில்
தனித்தனியாகத் தங்கி வந்த பெரியவர்கள் பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தனிமை கருதி
இங்கே தங்கி இருக்கிறார்கள். வசதியானவர்கள். ஒரு மகன், ஒரு மகள் உள்ள பெற்றோர், அல்லது
பிள்ளை இல்லாதவர்கள், கணவன் அல்லது மனைவி இழந்தவர்கள் இவர்களுக்கு கிட்டத்தட்ட 60 வயதில்
இருந்தே உடல்நலக் கோளாறுகள் ஆரம்பித்து விடுவதால் எல்லா வேலைகளையும் முன்போல் தனக்குச்
செய்து கொள்ள முடிவதில்லை. முக்கியமாக மூன்று வேளையும் சுடச் சுட சமையல்.