எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 டிசம்பர், 2015

போ நீ போ. போடீ போ.

போ நீ போ போ நீ போ

தண்ணியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் மழையே போ
திவலையாகத் தவிக்கின்றேன் அழ வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் மூழ்குகிறது அன்பே போ
நான் போகும் வழியெங்கும் தடைகள்தான் தூரம்  போ

இது வேண்டாம் அன்பே போ தனைத்தேடும் அன்பே போ.
உயிரோடு விளையாட ஆசாரம் செய்தாய் அன்பே போ

ஓ ஓ ஓ உன்னாலே உயிர் வாழ்ந்தேன் ஒரு காலம் நான் மழையே.
உயிர்ப் பிச்சை நீ போட்டால் உயிர் வாழ்வேன் மாமழையே

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

மழை

குளிரும் மழையும் பொருத மாலை,
முணுமுணு தூறலில் சுவரின் ஓரம்,
சொட்டுச்சொட்டாய் தண்ணீர்க்க்ரீடம்....!

மலைமுகடில் முகமறைத்த
இளஞ்சிறு சூரியன் எதிர்ப்பட..
என் மகனின் வண்ணக்கிறுக்கலாய்
எதிர்சுவர் வானில் வானவில்...!

திரைத்துணியின் மஞ்சள் ஆரஞ்ச் கொடிகளாய்
மலைமுகடெங்கும் தங்கம் தழுவிய
தடம் கதகதப்பாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...