///5
வயதுக் குழந்தை, 80 வயது மூதாட்டி.. நேற்று 13 வயதுக் குழந்தை..மனிதம்
மரித்துக் கொண்டே போகிறது.. எப்படியாவது நீதி நிலைநிறுத்தப்பட்டே
ஆகவேண்டும். இரண்டு நாட்களாக மனதைப் பிழிந்த செய்தி இதுதான். ( அந்த ஆள்
கிடைச்சா அடிச்சே கொன்னுடலாமான்னு கோவமா இருக்கு.. )//
இது என்னுடைய நிலைத்தகவல். ஒரு மாதிரி நிம்மதி இல்லாத மனநிலை நிலவுகிறது. பெண்குழந்தைகளை மற்றும் பொதுவாகக் குழந்தைகளை எல்லாம் மையப்படுத்தி வரும் பாலியல் வன்புணர்வுச் சீரழிவுகள் ஒரு பயங்கரமான சமூக அவலத்தை எடுத்துக்காட்டுகின்றன. பெண்களுக்கான பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கும் சேர்த்துப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் வாழ வழியற்றதாகிக் கொண்டிருக்கிறதா வடநாடு. ?