13.கருமுட்டைகளும் கருத்தரிப்பும்
இனப்பெருக்க வயதில் ஆரம்பித்து மெனோபாஸ் காலம் வரைக்கும் பெண்ணின்
கருப்பையில் முட்டைகள் மாதாமாதம் உருவாகின்றன. இவை ஓவா எனப்படுகின்றன. கடைசி மாதவிடாய்
நாளிலிருந்து பதினான்காவது நாள் வரை இம்முட்டை வளர்கிறது. சொல்லப் போனால் பத்தாம் நாளில்
இருந்து இருபதாம் நாள் வரை கூட வளர்வதாகக் கணிக்கிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில்
உருவாகும் இவ்வாறான கருவுறத் தகுதியான முட்டை ஓவோசைட் எனப்படுகிறது. அச்சமயம் அது விந்தணு
மூலம் கருவுறாவிட்டால் முதிர்ந்து மாதவிடாயுடன் வெளியேறுகிறது.
ஒவ்வொரு மாதமும் கருவகத்தில் முட்டை கருவுறத் தயாரான நிலையில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். வெள்ளைப்படுதல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் பாலியல் இச்சை அதிகரித்தல், மார்பகங்கள் கனப்பது அதே சமயம் கருப்பை வாய் மென்மையாவது போன்றவை ஏற்படும். வெள்ளைப்படுதல் மூலம் வெளியேறும் ம்யூக்கஸ் என்னும் திரவம் விந்தணு முட்டையை அடைவதை எளிதாக்குகிறது.
