இராவண காவியம்
1.பாயிரம்
தமிழ்த்தாய், தமிழகம்,
தமிழர், தமிழ்மொழிக்குத் தொண்டு செய்த புலவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறது இராவண காவியம்.
இக்காவியத்தின் முதற்பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தில் இராமாயணத்தில் ”உலகம் யாவையும்
என்று ஆரம்பித்திருப்பது போல உலக மூமையா “என்று ஆரம்பித்துள்ளார். இதுவே காப்பிய மரபும்
கூட.
உலகெங்கிலுமுள்ள
மக்கள் பேச்சு மொழி அறியாமல் சைகை மொழி காட்டி வாழ்ந்திருந்த ஆதி காலத்திலேயே பல்வேறு
கலைச் செல்வங்களோடு இலங்கி இன்றைக்குத் தானும் ஒரு மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிக்கெல்லாம்
தலைமையாய் விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.
தமிழ் மொழியிலிருந்து பிறந்து செருக்குடன் உலகினர் முன் உலா வந்த பல மொழிகள் வீழ்ந்து படவும் இன்றும் இளமையுடன் தனக்குவமை இல்லாத அழகோடு சிறந்து விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.