எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 அக்டோபர், 2023

10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

 10. இடுப்பு அழற்சி மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்


கர்ப்பப்பையில் பெண்களுக்கு ஏற்படும் நார்த்திசுக்கட்டிகள் பற்றி முன் இதழில் பார்த்தோம். அடுத்து நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம்.இடுப்பு வலி, இடுப்பு அழற்சி இருந்தால் அது கர்ப்பப் பையில் நீர்க்கட்டிகள் இருப்பதாலும் ஏற்படலாம். பல பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் கருப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்படுகின்றனர். இவை சிறிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுப் பெரும்பாலும் சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடும். ஆனால் கருப்பை நீர்க்கட்டி சிதைந்தால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


இதனால் பெண்களில் ஆண்தன்மை, முகத்தில் மீசை போன்ற முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு, இடுப்புக்களில் வலி, மலட்டுத்தன்மை, இதயநோய், சீரற்ற மனநிலை போன்றவையும் ஏற்படும். உடலில் பல நீர்க்கட்டிகள் நாளங்களின் அடைப்பின் விளைவாக அல்லது வினை சார் வெளியீடுகளாக, தீங்கற்றதாக இருக்கின்றன. இருப்பினும் சில புற்றுக்கட்டிகளாக மாறுகின்றன. அல்லது புற்றுக் கட்டிகளால் உருவாகின்ற்ன. அவை நிலையானதாகவும் வீரியமிக்கதாகவும் இருக்கும்போது அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...