எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 2 மார்ச், 2021

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

2018 ஃபிப்ரவரி 14 ஆம் தேதி அன்று எனது நூலான காதல்வனம் டிஸ்கவரியின் படி வெளியீடாக வெளிவந்தது. அந்நிகழ்வில் உறவினர்களும் முகநூல் வலையுலக நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அன்று வந்த அவர்களில் இன்னும் சிலரை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இவர் பெருமாள் ஆச்சி, கவிஞர். அனைந்திந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் ஒரு அங்கத்தினர். 


அம்மையப்பன் என்ற வலைத்தளத்தின் பிதாமகன். கேபிள் சங்கர் என்ற சங்கர்ஜி.
வலைப்பதிவர் அன்புத்தோழி ஞா. கலையரசி. 
இராமகுருநாதன் சார் & அன்புத்தோழி ஆதிரா முல்லை.நமது செட்டிநாடு இதழில் ஆசிரியர்  ஆவுடையப்பன் சார். 
பின்னே அமர்ந்திருப்பவர் வெளி ரங்கராஜன் சார். 
முகநூல் தோழர் எம் ஏ இராமமூர்த்தி சார். 

வேடியப்பனின் பெட்டர் ஹாஃப் :) 
வெளி ரங்கராஜன் சார்.


எங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் புத்தகத்தை வெளியிட்டு மகிழ்வித்த மணிமேகலை மேம்.

காரைக்குடி வாசகசாலை கற்பகவல்லி.

எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் இராகவன் நைஜீரியா அவர்கள். 

பின்னே கவிதா சொர்ணவல்லி. மணிமேடத்துடன் உரையாடல். 
வேடியப்பனுடன் விகடன் பொன் காசிராஜன். 

நண்பர் விகடன் பொன் காசிராஜனுடன். அயல்சினிமா டிஸ்கஷனில் இருந்த அரு ராமனாதன், தீபா ஜானகிராமன் ஆகியோருடனும். :)


 காதல்வனத்தில் அபூர்வப் பூக்களாய்ப் பூத்துச் சிறப்பித்த அன்பு ஆளுமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும். 

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும். மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுகளும் புத்தக வெளியீடுகளும்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றியும் அன்பும் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...