எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 12 மார்ச், 2021

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

அழகப்பா பல்கலையில் நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் 36 தமிழ்க் கவிதாயினிகள் கலந்து கொண்டோம். அதில் நாச்சியாளும் ஒருவர். பத்ரிக்கை நிருபர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் வாய்ந்தவர். 

இவர் என்னுடைய நூலைப் படித்து விட்டு விமர்சித்ததை இங்கே நான் கூறினால் நல்ல தட்டு எனக் கூறுவீர்கள். 

இவர் கூறியதையே வழிமொழிந்த கவிதாவும் என்ன தேன்ஸ். இப்பிடி ஆயிடுச்சே என மேடையிலேயே வினவினாள். 
மணிமேகலைகள் சிரித்திருக்க நாச்சியாளோ சிந்தனையில். 

வெளியீட்டாளர் வேடியப்பனின் அறிமுக உரை. 


நாச்சியாள் அப்படி என்னதான் சொன்னாள்..

”தேனு இப்படி ஒரு கதையை ( நான் எவ்வளவு வொர்க் அவுட் செய்தேன்னு எப்பிடிச் சொல்வேன் ) எழுதி இருப்பேன்னு நினைக்கலை. அனுராதா ரமணன், மாலைமதி, ராணிமுத்து போல ஒரு கமர்ஷியல் நாவல். இனி அடுத்தடுத்து வெகுஜனப் பத்ரிக்கையில் தொடர் எழுதலாம். “

இதைக் கேட்டதுமே பூரிப்பாய் இருந்த நான் புஸ்ஸென ஆகிவிட்டேன்.

இன்னும் கேளுங்க...

”இதை எழுத நீங்க தேவையா யார் வேணாலும் எழுதலாம். அப்புறம் நாவல் முழுக்க கணவனும் மனைவியும் ஒண்ணு ரேடியோ கேக்குறாங்க. இல்ல பாட்டுக் கேக்குறாங்க. இல்லாட்டி ஒண்ணா உட்காந்து டிவி பார்க்குறாங்க. “ இப்பிடி சில பல டோஸ்கள் விட்டுட்டு அடுத்து நல்லதா ஒரு இலக்கியம் படைங்க. அது பத்தி பேச வரேன். இப்பக் கூப்பிட்டீங்களேன்னு வந்தேன். என நெளிய வைத்தார். :) இப்பிடி என்னை - நியாயமாக - விளாசிய அவருக்கு அம்பேத்கார் படத்தைக் கொடுத்து மகிழ்ந்தோம். நான் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருளுக்காக மணி மேடம் அனைவருக்கும் அம்பேத்கார் அவர்களின் படத்தைக் கொடுத்தார். நன்றி சுகந்தி. சீக்கிரம் க்ளாஸிக் நாவல் ஒன்றுடனும், இரு சிறுகதைத் தொகுப்புக்களுடனும் பொறுப்போடு வருகிறேன். தயாராய் இரு . உன் வரவுக்காகக் காத்திருப்பேன் :) 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...