எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 பிப்ரவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் கடன்பட்டார் நெஞ்சம் !

இந்த வாரம் சாட்டர்டே போஸ்டில் ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி திரு விவிஎஸ் சார் கூறியிருப்பதைப் படியுங்கள். 

கடன் பட்டார் நெஞ்சம் !


”என்னது,  சாவுக்கு ஏற்பாடு செய்யற ஆளா நீங்க ?  இதப் பாருப்பா,  ஒண்ணு ஒங்க ஆபீஸ்லயே கல்யாண புரோக்கர் வேல இருக்குதே அத எடுத்துக்கோ.  இல்லேன்னா எம் பொண்ண மறந்துடு”

திரு Tomiyasu விடம் சொன்னது அவரது காதலியின் அப்பா.   டோமியசு பணியாற்றிய நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது.  அதில் மேரேஜ் புரோக்கிங்கும் உண்டு.  அண்டர்டேக்கர்ன்னு சொல்வாங்களே “அமரர் ஊர்தி” வேலை.  அதையும் செய்வாங்க.

டோமியசு என்ன செய்தார் என்று பிறகு பார்ப்போம்.

எதிர்பாராத நேரத்தில் வந்து நிற்பது விருந்தினர் மட்டுமல்ல.  எமனும்தான்.   இறப்பின் சோகத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.   ஆனால்  இறுதி யாத்திரை தொடங்கி பதினாறாம் நாள் வரையிலான செலவுதான் கிடுக்கிப் பிடி.

பணத் தட்டுப்பாடு இருந்தால் திருமணம் போன்ற விஷயங்களைத் தள்ளிப் போடலாம்.  ஆனால் மரணம் அப்படியல்லவே.   உடனடியாகப் பணத்தைப் புரட்டியே ஆக வேண்டும். 

ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு ஒரு வசதி உண்டு.  ”என் இறுதி யாத்திரை இப்படித்தான் நடக்க வேண்டும்” என்று உயிலே கூட எழுதலாம். 

மரண நிகழ்விற்கு இன்னின்னார் வர வேண்டும்.  அவர்களுக்கு நம் ஞாபகார்த்தமாக இந்த நினைவுப் பரிசு. (இது அந்த ஊர் கலாச்சாரம்) இப்படிப்பட்ட வேலைப்பாடு கொண்ட சவப் பெட்டி.  இத்தனை கூறுகள் கொண்ட அமர்களமான ஊர்வலம்.  இப்படி எதை வேண்டுமானாலும் நாம் உயிலில் குறிப்பிடலாம். 

டோமியசு-வின் TEAR CORPORATION அதைச் செய்து தரும்.  அதற்குண்டான தொகையை இப்போதே செலுத்தி விட வேண்டும்.  ஒப்பந்தக் காபியைப் பெற்றுக் கொள்ளலாம்.



டோமொயசு, காதிலியின் குடும்பத்தார் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.  மாறாக அதையே ஒரு பெரிய நிறுவனமாக உருவாக்கினார்.  தற்போது TEAR CORP ஜப்பான் பங்குச் சந்தையில் ஒரு பிரதானமான கம்பெனி.   

மரணத்தன்று  எல்லா காரியங்களையும் செய்து தருபவர்கள் நம்மூரிலும் உண்டு.  ஆனால் அட்வான்ஸ் காண்ட்ராக்ட் போன்றவை இல்லை.


மாற்றாக ஒரு இன்ஷூரன்ஸ் பாலிஸி இருக்கிறது.  எல் ஐ சி-யின் ”ஜீவன் ஆனந்த்.”

தொடர்ந்து பிரீமியம் கட்ட வேண்டும்.  பாலிஸி காலம் முடிந்ததும் முதிர்வுத் தொகை நம் கைக்கு வந்து விடும்.  அதன் பிறகும் பாலிஸி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்.   நம் மரணம் வரை.  அதன் பின்னர் மற்றொரு முறை பாலிஸி தொகை நாமினீக்குப் போய்ச் சேரும்.

நம் கடைசிச் செலவிற்கு நாமே சேர்த்து வைப்போமே !  கையிருப்பையோ அல்லது கடன் வாங்கியோ அவர்கள் செலவழித்தாலும் கூட சில வாரங்களிலேயே அவர்கள் கைக்குப் பணம் வந்து சேரும்.   

ஜீவன் ஆனந்த் பாலிஸி.  ”இறுதிக்கடன் பட்டார் நெஞ்சம் போல்” நாம் கலங்காமல் இருக்க வழி செய்யும் பாலிஸி !

டிஸ்கி :- டோமெயெசு பற்றியும் டியர் கார்ப்பரேஷன் பற்றியும் தகவல்கள் வித்யாசம்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அத்யாவசியத் தகவல்களைத் தந்து உதவுவதற்கு நன்றி ஸ்ரீனிவாசன் சார் !. 

4 கருத்துகள்:

  1. ஏதோ விளம்பரம் போல ஆரம்பித்து, முக்கியமான செய்தியை உணர்த்திய பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...