எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

901. இருட்டில் ஐஸ்க்ரீம் சாப்பிடும் கிழவர்கள்.

#ஒரு மிட்நைட்டில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஆச்சர்யப்படுத்திய விஷயம்.

902. சுண்ணாம்பை எதுக்கு எடுத்து உடம்புல அடிச்சிக்கிறே

உடம்புல சுண்ணாம்புச் சத்து கொறைஞ்சிருக்காம்.

“ஙே”


903. S1 லதானே உங்க டிக்கெட் S9 க்கு ஏன் வந்தீங்க.

எனக்கு அலாட் ஆன சீட்டை ஒரு சீனியன் சிட்டிசன் கேட்டாங்க.ன்னு S 2 க்கு அவங்க சீட்டுக்கு வந்தேன். அங்கே ஒரு கர்ப்பிணி S 3 ல தன்னோட இடத்துக்குப் போ சொன்னாங்க. S 3 ல ஒரு கைப்புள்ளக்காரம்மா வீட்டுக்காரரோட இருக்கணும்னு S 4 க்கு தன் சீட்டுக்குப் போ முடியுமான்னு கேட்டாங்க.  இப்பிடியே ஒரு மாற்றுத் திறனாளி, அப்பா அம்மா இல்லாம தனியா ஃப்ரெண்ட்ஸோட வந்த குட்டிப் பொண்ணு இதுபோல் ஒவ்வொருத்தரும் கேக்க நான் S 9 க்கு வந்திருக்கேன்.

சார் எனக்கொரு ஃபேவர்.

என் வைஃப் கூட இங்கே இருக்கேன். நீங்க S 10 க்கு என் சீட்டுக்குப் போக முடியுமா.

“ஙே”

904. குடிச்சபின்னாடிகாஃபின்னா கசக்கணும்
டீன்னா இனிக்கணும். :)

905. இந்த காக்கா எப்பிடி ஸ்லிம்மா இருக்கு

அது சோறு இட்லி சாப்பிடாது

அதான் கேக்குறேன் அப்பளம், சிப்ஸ், முறுக்கு, பிஸ்கட்டுன்னு நொறுக்குத்தீனியா மொறுக்கியும்
எப்பிடி ஸ்லிம்மா இருக்கு :)

906.திருப்பதி, கேரளா, பெங்களூரு -- எந்த ஊர் சென்றாலும் நாம் எல்லா மக்களுடனும் (ஆட்டோ, ஷாப்பிங், ஹோட்டல், கோயில் ) தமிழில் தொடர்பு கொள்ளலாம். நம்ம ஊருக்கு வரும் மற்ற மாநிலத்தவரும் (பழனிக்கு வரும் கேரளத்தவரும்)  தமிழை அழகாகப் பேசுகிறார்கள். புரிந்து கொள்கிறார்கள். நாம் தமிழை மட்டுமே பேசுகிறோம். ஸ்டைலாக ( என்று நினைத்துக் கொண்டு)  ஆங்கிலம் பேசுகிறோம். பிற மொழி நூல்களின் மொழிபெயர்ப்புக்களைப் படிக்கிறோம். ரசிக்கிறோம். எப்போது இந்திய மொழிகள் அனைத்தும் நம் மொழிதான் என்று ஏற்றுக் கொள்வோம்.. கற்றுக் கொள்வோம்..?

907. GOOD NIGHT MAKKAS.. SUNDAY KUDA VIDAMA SEYALATRURA UNGKA PORUPPUNARCHIYA PARATUREN.. JUS ETTIP PARTHEN.. RIGHT ROMBA SURUSURUPPAA NOTIFICATIONS OODIKITU IRUKKU.. THALAYA SUTHUTHU SAMINGKALA..

 908. RENDU NAALU VARATA ITHELLAAM ROMBA OOVER APPUS.. 185 NOTIFICATIONS.. VITULA ELARUM SAPITU THUNGKURINGKALA ILAIYA..:)))

909. சன்ம்யூசிக்கில் சூர்யாவின் குரலுக்கும் கவிதைக்கும் 11 மணிவரை காத்திருக்கலாம். அருமை சூர்யா..

910.காற்றின் வேகத்தில் கோபுர உயரம் சென்ற ஒற்றைக் குழல் அதன் கும்பகலசத்தில் காற்று சுழலச் சுழலக் கற்றையாய்ச் சுற்றிச் சுற்றிக் கோபுரத்தை மூடியது. எந்த மின்னலும் எந்த இடியும் தன்னை ஒன்றும் செய்யாதெனத் திமிறித் திரிந்தது. பலகாலம் இந்த இம்சை முடிச்சின் சுமையைத் தாங்கி நின்றது கலசம். பொங்கி வந்த சுனாமி கழற்றிக் கொண்டுபோய் சேற்றில் தள்ளப் பவிசழிந்து புதைந்து போனது குழல் . தன் கருக்கு அழியாமல் பொருண்மை குலையாமல் கவ்விய சூது நீக்கிக் கம்பீரமாக நின்றது கோபுரம்.

911.என்ன காலைலேருந்து குடிகாரன் மாதிரியே தடுமாறிட்டிருக்கே

என்னன்னு தெரில மாத்திரை சாப்பிட்டதிலேருந்து தூக்கமா வருது

எங்கே கொண்டா .. என்னென்ன சாப்பிட்டே.

நீங்க சொன்ன மூணைத்தான்

இது பாரசிட்டமால் இது ஆண்டிபயாடிக் ஓகே மூணாவது நான் ரிபோஃப்ளேவின் சொன்னேன் அது எங்க

அப்பிடியா அது தீர்ந்துபோச்சு போல நான் இதத்தான் சாப்பிட்டேன்

இது ராத்திரிக்கு சாப்பிட எழுதித்தந்த தூக்கமாத்திரை. இதப் பகல்ல சாப்பிட்டா தள்ளாம என்னடி செய்யும் கிறுக்கச்சி.

zzzzzzzzzzzzzzzzzzzzzzz

912. அர்பன் விவசாயிகளின் அறுவடை பார்த்து பால்கனி விவசாயிகள் பொறாஆஆஆஆஆஆமை. ( நிர்மலா பெரியசாமி பாணியில் வாசிக்கவும்.

Tulsi Gopal ஆமை நுழைஞ்சால் வீட்டுக்கு நல்லதில்லை :-)

Thenammai Lakshmanan ஹாஹாஹா அப்ப சொந்தக்காரர்களின் பெருமை அண்டை வீட்டுக்காரர்களின் பொறாமையான ஒனிடா சாத்தான் நுழைஞ்சா விதி விலக்கு உண்டா

913. ஐயோ.. எங்க பார்த்தாலும் முருங்கைக்காயா.. இன்னுமா சீஸன் முடியல..

யாரையாவது சமைச்சுத் தரசொன்னா ஏன் கொல்றாங்க. இவங்கல்லாம் பாண்டியராஜன் பரம்பரையா இருக்குமோ.

914. யார் இந்த எடிட்டர் பாப்... ? எனக்கேன் டெய்லி ந்யூஸ்லெட்டர் அனுப்பிட்டே இருக்காரு :)

915. ஃபார்வேர்ட் அனுப்பியே ஒரு ஆள் ப்ராபல்யமாயிடுவார் போல.. !!!!!!!!!!!

தெனத்துக்கும் நூறு டார்கெட். செத்தோண்டா நாம.

916. ஹெல்மேட் போட்டா மட்டும் பத்தாது மக்களே. அதோட பெல்டையும் சரியா மாட்டுங்க.. ( நீயா நானாவில் பார்த்து வருந்தினேன்

917. செயற்கை மணல் யாராவது வீடுகட்ட உபயோகிக்கிறீங்களா.. எப்பிடி இருக்குன்னு படம் கிடைச்சா போடுங்க. கிரஷர் ஜல்லியை உடைச்சதுன்னு சொல்றாங்க. மணல் கறுப்பா இருக்கா.

918. நெல்லிக்கனிங்கிறாங்களே அது இதுதானா.. சரி இது சுட்ட பழமா, சுடாத பழமா..

919. ட்ரியோ ட்ரியோ ட்ரியோ.ட்ரியோ. சத்தியம் நீயே தர்மத் தாயே..

ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே நில் நில் நில்லுங்கள் காளைகளே..

ஒரு மாட்டு வண்டி சவாரி போலாமா மக்காஸ் தோட்டத்துல தெங்கிளநீர் குடிக்க..

920. யே அப்பா அரசாங்கத்த வளைச்சு வளைச்சு விருது வாங்கிருவாங்க போலிருக்கே. நம்ம ஒல்லிபிச்சா கவுஜ புக்குக்கெல்லாம் விருது கிடைக்கும்னு இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கே லூசுப் புள்ள. ஹிஹி


‪#‎விருதுகள்_பலவிதம்‬
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.4 கருத்துகள்:

 1. ஒவ்வொரு செய்தியையும் ரசித்தேன் சகோதரியாரே
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...