புதன், 10 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் உள்ள நந்தினி சிறுகதை .

தென்றலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் அனுப்பி அதன் பின் மறந்துவிட்டு என் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்ட கதை ஒன்றை தென்றலுக்காக ஒலிவடிவமாக்கி இருக்கின்றார்கள்.


வேறு நூலில் வந்ததை வெளியிடமுடியாது என்றாலும் ஒலி வடிவில் முன்பே ஏற்றியதை பெருமதிப்பிற்குரிய என் முகநூல் தோழி திருமதி சரஸ்வதி தியாகராஜன் அனுப்பி இருக்கின்றார்கள்.

அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர்கள் குரலில் என் கதையைக் கேட்கும்போது அற்புதமாய் இருக்கிறது. படிக்கும்போதே நெகிழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன்.

என் சிறிய மகன் சபாரெத்தினத்தினம் இதை சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்துள்ளான்.

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.  கேட்டுட்டு சொல்லுங்க :)


5 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மனதைக் கலங்க வைத்த ’நந்தினி’ கதை கேட்டேன்.

கதை எழுதிய தங்களுக்கும், தனது இனிமையான குரலில் அழகாகக் கதை சொன்னவருக்கும், சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்து உதவியுள்ள தங்களின் இளைய மகனுக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்.

மனிதாபிமானம் மிக்க மிக அருமையான கதாபாத்திரமான ’டாக்டர் நந்தினி’ வாழ்க !

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றியும் மகிழ்வும் விஜிகே சார் !!!!!!!!!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.//

அதிலும் படித்து விட்டேன். சமீபத்தில் எங்கேயோ கேட்ட கதையாக உள்ளதே எனவும் நினைத்துக்கொண்டேன். :)

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா விஜிகே சார் உடனுக்குடன் கமெண்ட். !!! நன்றி சார் :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...