எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 மே, 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். - ஸ்கூல்பையனின் தொட்டால் தொடரும் குறும்பட அனுபவங்கள்.


கார்த்திக் சரவணன் சென்னையில் வசித்து வருகிறார். ஸ்கூல் பையன் என்றவுடன் ஸ்கூல் போறவர்கிட்ட பேட்டி எடுத்துட்டேன்னு நினைக்காதீங்க. இவர் திருமணமானவர். அன்புக்கும் ஆசைக்குமா ரெண்டு சுட்டி குட்டீஸும் இருக்காங்க. இவர் முகநூல் நண்பர் மட்டுமல்ல. வலைப்பதிவ சகோதரரும்கூட.

அவர் முதன் முதலில் சென்றவருடம் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டிருந்தார். தொட்டால் தொடரும் குடிப்பழக்கம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருந்த படம் அது. அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அந்தக் குறும்படம் எடுத்த அனுபவங்களை எழுதித்தரச் சொன்னேன்.

 மனுஷன் உடனேயே எழுதித்தந்துட்டாரு. ஒரு ப்லாகரோட கஷ்டம் இன்னொரு ப்லாகருக்குத்தான் தெரியும்கிறது எவ்ளோ உண்மை  ( அதுதாங்க புதுசு புதுசா போஸ்ட் போட்டு ப்லாகை உயிர்ப்போட ஓடியாட விடுறது :) ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ். இத ஃபேஸ்புக்குல எல்லாம் போடாம சுட சுட ப்லாகுல சுட்டுப் போட்டுக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ் சரவணன். சரி ஸ்கூல் பையன்னு ப்லாக் பேர் வைச்சிக்கிட்டதுக்காக இன்னும் ஸ்கூல்பேகை முதுகைவிட்டு இறக்காம இருக்கது கஷ்டமாயில்ல :) :) :)

////கார்த்திக் உங்க குறும்பட அனுபவங்களை என் ப்லாகுக்காக எழுதி அனுப்ப முடியுமா
சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன். அதுக்காக

இதுல ஒவ்வொரு ஃபோட்டோவையும் க்ளிக் பண்ணீங்கன்னா அதுக்கு பக்கத்துல இருக்க லிங்க் ல அவங்க எழுதியதைப் படிக்கலாம்.  :) https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.859819344032079.1073741842.100000120633183&type=3

ஜாலிகார்னர் & சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன் அதுக்கு நீங்க ஒரு கட்டுரை வடிவில் உங்க குறும்பட அனுபவங்களை எழுதி இங்கே போடுங்க எடுத்துகுறேன் சனிக்கிழமை அதாவது நாளை போடணும். இப்ப ஃப்ரீயா இருந்தா எழுதி அனுப்ப வேண்டுகிறேன் உங்க புகைப்படமும், ஆர்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வேணும்.
முடிந்தால் மாலைக்குள் அனுப்புங்க

அடடா, இப்போ முடியாதே... எட்டு மணிக்குள் அனுப்பினால் போதுமா? அப்பிடின்னு கேட்டவர் நைட்டு டாண்ணு எட்டுமணிக்கு அனுப்பிட்டாரு. 
 
பதில் :- அதிகப்படியான சொந்த அனுபவங்கள் மற்றும் சில சிறுகதைகளையே வலையேற்றியிருக்கும் எனக்கு குறும்படம் பற்றிய அனுபவங்களைப் பகிரக் கேட்டிருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மற்றொரு பக்கம் வியப்பாக இருக்கிறது. எடுத்திருப்பது ஒரே ஒரு குறும்படம். அதை குறும்படம் என்று சொல்வதைவிட ஒரு சின்ன கான்செப்ட் என்று சொல்வதே தகும். இயக்குநர் கேபிள் சங்கர் தனது “தொட்டால் தொடரும்” படத்துக்கான வெளியீட்டுக்கு முன்னர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, “தொட்டால் தொடரும்” என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் இருக்கவேண்டும் என்பதே.


தொட்டால் தொடரும் என்றால் பளிச்சென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது குடி. மதுவைத் தொட்டவர்கள் யாரும் விட்டதில்லை, மாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கேபிள் சங்கர் பேட்டி அளித்தபோது கூட இதைக் குறிப்பிட்டிருந்தார். இதையே ஒரு நிமிடத்தில் ஓடக்கூடிய குறும்படமாக எடுத்துவிடலாம் என்று தீர்மானித்திருந்தேன். ஆனால் என் மனதில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த காட்சிகளுக்கு ஒரு அலுவலகமும் ஒரு டாஸ்மாக் கடையும் தேவைப்பட்டது. மிக முக்கியமாக படம் எடுப்பதற்கான கேமரா. கேமரா வைத்திருக்கும் நண்பர் ஒருவரைக் கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொடுத்து உதவினார். புரொபஷனல் கேமராவை முன்பின் பார்த்திராத எனக்கு எவ்வாறு இயக்கவேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்தார். இதைவிட முக்கியமான விஷயம் – படத்துக்கு வேண்டிய டாஸ்மாக் பார் மற்றும் ஒரு அலுவலகம் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் இரண்டே பேர். ஒன்று நான்மற்றொருவர் பதிவர் ரூபக் ராம். முதலில் இதில் நடிப்பதற்காக நான் அணுகியது  மெட்ராஸ்பவன் சிவக்குமார்   தான்.  அவர்தான்  பொருத்தமாக  இருப்பார்  என்று  நினைத்திருந்த  எனக்கு இந்தப்   பாத்திரத்தில் நடிப்பதற்கு ரூபக் தான் சரியான ஆளாக இருப்பார் என்று அடையாளம் காட்டினார். நான் ரூபக்கிடம் விஷயத்தை சொல்லஅவரும்  சம்மதித்தார்.

ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. ரூபக் வேலை செய்வது ஒரு ஐ.டி. நிறுவனத்தில். அவருக்கு வார நாளில் தான் விடுமுறை கிடைக்கும். ஆனால் எனக்கோ ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை. வேறு வழியின்றி ஒரு நாள் மட்டும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டேன். 


படத்துக்கென்று எந்த செலவும் செய்யவில்லை. எல்லாமே உதவியாகவே கிடைத்துவிட, ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். ஆனால் நிறைய பிரச்சனைகள். எடுத்த காட்சிகளை மடிக்கணினியில் ஓடவிட்டுப் பார்க்கும்போது நிறைய தவறுகள் செய்திருக்கிறோம் என்பது தெரிந்தது. மீண்டும் மீண்டும் எடுத்து கற்றுக்கொண்டோம். இருந்தாலும் எளிதாகக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு தவறு படத்தில் இருக்கிறது.

ரூபக் மட்டும் நடிக்கும் காட்சிகளில் நானும் நான் மட்டும் நடிக்கும் காட்சிகளில் ரூபக்கும் கேமராவைக் கையாண்டோம். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் கேமராவுக்கான ஸ்டாண்ட் வைத்து எடுத்தோம். ஓரிரு இடங்களில் மட்டும் அங்கிருக்கும் நண்பர்களின் உதவியை நாடினோம்.

படம் எடுத்து முடித்தாயிற்று. ஆனாலும் எனக்கு திருப்தியில்லை. எடுத்த காட்சிகளை கணினியில் சேமித்துவைத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்த கோவை ஆவி நான் எடுத்திருந்த காட்சிகளைக் காட்டச்சொன்னார். காட்டினேன். அவருக்கோ பரம திருப்தி. கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும். இதை எடிட் செய்து வெளியிடு என்றார். அன்றைக்கு அவர் பேசியது  எனக்கு நம்பிக்கையும் ஊக்கமும் தந்தது.

எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் தெரியாது. இதற்கான மென்பொருட்களை இணையத்தில் தேடி கணினியில் நிறுவிக்கொண்டேன். ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து கற்றுக்கொண்டு எடிட் செய்தேன். வசனம் இல்லாததால் ஒலிக்கோப்புகளை இணையத்தில் எடுத்து சேர்த்துவிட்டேன். இதற்கும் நிறைய மெனக்கெடல் இருந்தது.

படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் ரூபக் மட்டும் டாஸ்மாக் கடைக்குள் நுழையும் ஒரு காட்சியை மட்டும் போட்டோவாக எடுத்து வெளியிட்டேன். நிறைய பேருக்கு ஆர்வம் வந்திருந்தது அவர்களுடைய பின்னூட்டத்தில் தெரிந்தது. நண்பர் தண்ணீர்மலையிடம் படத்தைக் காண்பித்தேன். யூடியூபில் மட்டுமல்லாது முகநூலிலும் காணொளியை தரவேற்றுமாறு சொன்னார். அப்படியே செய்தேன். யூடியூபில் இதுவரை முன்னூற்று சொச்சம் பார்வைகளும் முகநூலில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பகிர்வுகளும் கிடைத்தது. இது நான் சற்றும் எதிர்பாராதது. இயக்குநருக்கும் இது பிடித்துப்போனது.

இது தவிர்த்து கோவை ஆவியின் “காதல் போயின் காதல்” மற்றும் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்களின் “அகம் புறம்” ஆகியவற்றில் நடித்திருக்கிறேன். நடிப்பென்பது ஒரு கலை, அதைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் நிறைய மெனக்கெடல்கள் வேண்டும் என்று தெரிந்துகொண்டிருக்கிறேன். எவ்வளவோ கற்றுக்கொள்வதற்கு இருக்கின்றன.

குறும்படம் எடுப்பதற்கு ஏதுவாக இரண்டு கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். ஒரு நிமிடம் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய வகையில் பத்து பதினைந்து கான்செப்ட்கள் கைவசம் இருக்கின்றன. அலுவலகப் பணிகள், படிப்பு மற்றும் குடும்ப வேலைகள் காரணமாக செயல்படுத்த இயலாத நிலையில் இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக என்னால் முடிந்ததைச் செய்வேன். சாட்டர்டே ஜாலி கார்னரில் என்னை பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் உகந்தவன் என்பதில் மகிழ்ச்சி. இதை ஒரு காரணமாகக் கொண்டு நிச்சயம் செய்கிறேன்.

நன்றி...



உங்க அனுமதி இல்லாம உங்க புள்ள வீடியோ எடுக்குற ஃபோட்டோவையும் சுட்டுப் போட்டுக்கிட்டேன் மன்னிச்சூ. :) 

https://www.facebook.com/rakshith.sk.31/videos/vb.100004201204483/425766984240005/?type=2&theater

டிஸ்கி :- அடடா ஒரு குறும்படம் எடுக்குறதுல இவ்ளோ இடியாப்ப சிக்கல் இருக்கா.. நான் என்னவோ காமிராவை எடுத்து சுட்டுப் போடவேண்டியதுதான்னு நினைச்சிட்டு இருந்தேன். :) ஆடியோ மிக்ஸிங் , எடிட்டிங்க் அப்பிடின்னு  இதுக்கும் இவ்ளோ மேட்டர் இருக்கத இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

கல்கில கூட குறும்படப் போட்டி அறிவிச்சு இருந்தாங்களே அதுக்கு ஏதும் அனுப்பி இருக்கீங்களா.. அனுப்பி இருந்தா வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிக்கிறேன். குடிப்பழக்கத்தோட தீமையை நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. சிறப்பான முயற்சி. அதுக்கப்புறம் நிறைய எடுத்திருப்பீங்கன்னும் நினைச்சிருந்தேன். அதனால் என்ன.. தொடர்ந்தும் குறும்படங்களை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். .:) 


9 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் கார்த்திக் சரவணன்....

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சரவணன்.
    மேலும் உங்கள் குறுபடங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் சரவணன். உங்கள் குறும்படங்கள் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஜம்புலிங்கம் சார்

    நன்றி கோமதி மேம்

    நன்றி செந்தில் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...