எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

அழைப்பிதழைத் தேடி:

அழைப்பிதழைத் தேடி:-
******************
ஒரு அழைப்பிதழ் வருகிறது.
உங்களை வரும்படி அழைக்கிறது.
உங்கள் மனைவியுடன் கூட
பிள்ளைகுட்டிகளுடனும்
சிலசமயம் இஷ்டமித்ர பந்துக்களுடனும்.
கலந்துகொள்ள வேண்டிய அன்று
தேடத்துவங்குகிறீர்கள்
அந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழை
எங்கே வைத்தோம் என்று.

எப்போதும் வைக்கும் மேசையில்
ட்ராயரில் , செல்ஃபில்
தேடுகிறீர்கள்.
மனைவி ஞாபகமாய்
எடுத்து வைத்திருக்கலாமென
அவள் கைப்பையை சோதனையிட்டு
அதிருப்திக்கு ஆளாகிறீர்கள்.
அடுக்களையில் நுழைந்து
ஏலமோ பெருங்காயமோ
தட்டிய பேப்பர்களை எல்லாம்
விரித்துப் பார்க்கிறீர்கள்.
டீப்பாயின் கீழ்
புத்தகக் குவியல்களில்
துணி அலமாரியில்
சந்தனப் பாக்கெட்டுகளின் கீழ்
துழாவிப் பார்க்கிறீர்கள்.
எடைக்குப் போடும் பேப்பர்களையும்
குப்பைகளையும் கடிதங்களையும்
கிளறிய பின்னர்
தொலைபேசியில்
நிகழ்வின் இடத்தை
உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
போகும் வழியெல்லாம்
மாப்பிள்ளை, பெண்,
உறவினர் பெயரை
ஏதோ அடையாளத்தோடு
ஞாபகப்படுத்தியபடியே...
சிரித்து மழுப்பியபடி
அரைகுறையாய்
விருந்துண்டு வந்தபின்
யதேச்சையாய் தேடாமலே
தட்டுப்படுகிறது
உங்கள் டைரிக்குள்
குறிப்பிட்ட தேதியில்
பத்திரமாய் இருக்கும்
அந்த அழைப்பிதழ்.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 1-15, 2013 அதீதத்தில் வெளிவந்தது. 

6 கருத்துகள்:

  1. வணக்கம் உறவே

    மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...

    http://www.thiratti.meenakam.com/

    பதிலளிநீக்கு
  2. அடடா... மறந்து போச்சே... (டைரி எழுதி பல நாளாச்சே...)

    பதிலளிநீக்கு
  3. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே... ;)

    இப்படித்தான் பலமுறை தேடல்கள் தோல்வியிலேயே முடிந்துவிடுகின்றன. இன்னும் வேடிக்கை என்னவெனில் எப்போதோ தேடியவை யாவும் அப்போது கண்முன் வரிசையாய் வெளிப்படும்.

    பதிலளிநீக்கு
  4. தினம் தினம் தேடல் தொடரும் வாழ்க்கையின் எதார்த்தம் இந்த கவிதை வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  5. தினம் தினம் தேடல் தொடரும் வாழ்க்கையின் எதார்த்தம் இந்த கவிதை வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  6. நன்றி மீனகம்

    நன்றி தனபால்

    நன்ரி கீதமஞ்சரி

    நன்றி பாலா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...