எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மண்சட்டிகளும் ஆடுகளும்...

இக்கரையில் நான் மண்சட்டிகளுடனும்..
அக்கரையில் நீ உன் ஆடுகளோடும்..
அவரவர் சந்தைக்கு..

என் பின் கொசுவச் சேலை படபடக்க..
தார்பாய்ச்சிய வேட்டி.,
துரட்டியுடன் நீ..

கெண்டை கெளுத்தி.,
வாவல்., வவ்வா., சிறா
சிணுங்கித் திரிய..


அவரவர் பாரங்களை அப்படியே விட்டு
மெல்ல இறங்கி உன் மேல் துண்டால்
வீசிப் பிடித்தோம்..மீன் தின்னும் ஆசையில்..

சுழல் போல் காட்டாறு கணுக்காலிலிருந்து
முழங்காலேறி., பேய் போல ஆளடித்து
தலை சுழற்றி மூச்சு முட்ட..

அடித்துப் பிடித்து அவரவர் கரை சேர்ந்தோம்..
என் சுருக்குப் பை உன் கையிலும்.,
உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து.

என் சுருக்குப் பை உன் துரட்டியிலும்,
உன் மேல் துண்டு என் சும்மாடாய்.,
திரும்ப அவரவர் சந்தைக்கு..

இருந்தபடி இருந்தன
மண்சட்டிகளும் ஆடுகளும்..
மீன்கள் மட்டும் கையெட்டாமலே..

வெடவெடத்த பாதங்களின் பின்னே
தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
ஈர சாட்சியாய் தண்ணீர். ..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப்ரவரி 20, 2011. திண்ணையில் வெளிவந்துள்ளது.

15 கருத்துகள்:

  1. "மண்சட்டிகளும் ஆடுகளும்..
    மீன்கள் மட்டும் கையெட்டாமலே.."
    இருந்தபோதும் கவிதை மழை பொழிகிதே. அற்புதம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை... அருமையான கவிதை...
    ரொம்ப நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //
    இருந்தபடி இருந்தன
    மண்சட்டிகளும் ஆடுகளும்..
    மீன்கள் மட்டும் கையெட்டாமலே..

    வெடவெடத்த பாதங்களின் பின்னே
    தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
    ஈர சாட்சியாய் தண்ணீர். ..
    //
    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. கிராமத்து அத்தியாயம் ‌வெகு அருமைக்கா!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கவிதை. யதார்த்தங்களை எடுத்துரைப்பதாக. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அழகிய நடை, அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  7. //அடித்துப் பிடித்து அவரவர் கரை சேர்ந்தோம்..
    என் சுருக்குப் பை உன் கையிலும்.,
    உன் மேல்துண்டு என் கையிலும் பிடித்து.//

    arumai...vaalththukkal

    பதிலளிநீக்கு
  8. மருகிவரும் கிராமத்துத் தமிழ்ச் சொற்கள் கலந்த கவிதையாயிருக்கு !

    பதிலளிநீக்கு
  9. வெடவெடத்த பாதங்களின் பின்னே
    தவழ்ந்து வந்து கொண்டிருந்தது..
    ஈர சாட்சியாய் தண்ணீர். ..

    அருமையான வரிகள் அக்கா..

    பதிலளிநீக்கு
  10. நன்றி முருகானந்தம்.

    நன்றி குமார்

    நன்றி ஸாதிகா

    நன்றி ராஜா

    நன்றி கணேஷ்

    நன்றி கோபா சார்

    நன்றி வியபதி

    நன்றி சரவணன்

    நன்றி மதுரை சரவணன்

    நன்றி ஹேமா

    நன்றி சாந்தி

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு
  11. நன்றி நம்பிக்கைப்பாண்டியன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...