எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜூலை, 2011

காஃபி...

விஷ்..விஷ் என வடிவேலு போல சப்தமெழுப்பினார் என் கணவர்.. அட அவர் விஷ் மட்டும் தான் வடிவேலு போல .. ஆனா ஆள் அந்தக்கால பாலாஜி., அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..

அது ஒரு ஞாயிறு மாலை நேரம்.. தொலைக்காட்சியில் மொத்தக் குடும்பமும் மூழ்கி இருந்தது.. என்ன விஷ் விஷ் என்றேன் நானும் சங்கேதமாய்.. என் சின்ன மகன் இடுப்பில் அமர்ந்து எங்கள் விஷ் விஷைப் பார்த்து சிரித்தான்.. அவனுக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாய்..

கொஞ்சம் காப்பி என்றார் என் கணவர்.. ஐயையோ இப்பவா என்றேன் நான்,, அட இது புதுமைப் பெண் படக் காப்பி இல்லைங்க.. சாதா காப்பிதான்.. ரொம்ப குடிச்சா முடி கொட்டிப் போயிரும் காஃபின்னால என்றேன்..


ஆத்தா சைன்ஸ் பாட்டி .. இப்போ கொடு பின்னாடி பார்த்துக்கலாம் என்றார்.. பின்னாடி எங்கே சூரிய பிறை மாதிரி இப்பவே ஆரம்பிச்சுகிட்டு வருது வழுக்கை .. எல்லாம் போதும் என்றேன்..

என் மாமியாரும் மாமனாரும் தொலைக்காட்சியில் அண்ணாமலை தீப தரிசனத்தை பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள்.. சினிமா பார்க்க முடியாமல் கொழுந்தனாரும் நாத்தனாரும் எங்கள் பெட்ரூமில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..


இவர்கள் இருக்கும் போது காபியாவது ஒண்ணாவது ..திடீரென்று அடுத்த ரூமுக்கு இருவரும் ஓடினார்கள். பையனும் இறங்கணும் என்று ஒரே ஆட்டம்..குழந்தை அவர்கள் செல்லும் திசை நோக்கி பார்த்தபடி கை வீசிக் கொண்டிருந்தான்..

ராத்திரிக்கு சப்பாத்தி மாவு பிசையணும் . இவனைப் பிடிங்க என்றேன் நான்.. உடனே என் கணவர் குழந்தையை வாங்கும் சாக்கில் முகத்தோடு முகம் உரசி குழந்தையை வாங்கினார். அடப்பாவி மனுஷா.. குழந்தைக்கும் தெரியாமல் சந்தடி சாக்கில் ஒரு காபியா.. திகுதிகுவென்று உதடு எரிந்தது..

என் மாமியார்.. சீக்கிரம் வாம்மா டி வி யில் தீப தரிசனம் தெரியுது என்றார்.. குழந்தையை வாங்கிய இவர் ஹாலுக்கு சென்று விட்டார். புன்னகைத்தபடி..

தலை கலைந்தது போல இருந்தது .. கண்ணாடியில் பார்த்து சரி செய்யும் போது பொட்டைக் காணவில்லை.. அடடா எங்கே கழுத்தில் கன்னத்தில் இருக்குமோ என தேடிப்பார்த்தேன். தரையில் கூட இல்ல.. தலை முடியில் இருக்குமோ.. தலையைத் தடவினேன்.. தலை சுற்றி., தரையை சுற்றி., சரி போகுது போ என அட்டையைப் பிரித்து முகம் கழுவி ஒன்றை ஒட்ட வைத்து டக்கென்று ஹாலுக்கு சென்றேன்..

யாருக்கும் தெரியுமோ என்ற பதைப்பு இருந்தது. ஊர்வசி மாதிரி ஒரு புன்னகையை வழிய விட்டு நானும் சென்று ஜோதியில் ஐக்கியமானேன்,

தீப தரிசனம் முடியும் போது என் மாமியார் என் பையனை என் கணவரிடமிருந்து வாங்கினார்.. இது என்ன என்று சிரித்தபடி தன் மகனின் கண்ணாடிக்குக் கீழே கண்ணோரத்திலிருந்து அவர் எடுத்து என்னிடம் கொடுத்தது சில்வர் ஃபிஷ் போல் ஒட்டிக் கொண்டிருந்த என்னுடைய பொட்டை..

தன்னை அறியாமல் வாயை உட்புறமாக மடித்துக் கொண்டேன்.. என் கணவர் அசட்டு சிரிப்பை உதிர்த்தார்.

காப்பியடித்து கையோடு பிடிபட்ட மாணவர்களாய் மாட்டிக் கொண்டு விழித்தோம் நாங்கள் இருவரும்..

டிஸ்கி :- இந்தக்கட்டுரை ரொமான்ஸ் என்ற தலைப்பில் கோதை என்ற புனைபெயரில் ஜூலை இவள் புதியவளில் வெளிவந்துள்ளது. :)

17 கருத்துகள்:

  1. உண்மையில் “காப்பின்னா” என்ன? ஏதாவது code word போல இருக்கு.நல்லா இருக்கு உங்க ரொமான்ஸ்.

    பதிலளிநீக்கு
  2. நெற்றிப்பொட்டு போன்ற ஒரு சிறிய அழகான யதார்த்தமான அந்தரங்க விஷயத்தை எவ்வளவு அழகாக நாசூக்காக எழுதி எங்கள் எல்லோரையுமே மூட் அவுட் ஆகச் செய்துள்ளீர்கள். மனம் திறந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. எப்போவானும் காப்பி குடிச்சா பரவால்லை ;-)

    பதிலளிநீக்கு
  4. காப்பியடித்து கையோடு பிடிபட்ட மாணவர்களாய் மாட்டிக் கொண்டு விழித்தோம் நாங்கள் இருவரும்..
    நல்ல முழி. ராஜ முழி.

    பதிலளிநீக்கு
  5. ஓ...இப்பிடியும் காஃபி குடிக்கலாமோ.தெரிஞ்சுகிட்டேன் தேனக்கா !

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராஜா., விஜயன்., கோபால் சார்., சௌந்தர்., மேனகா., சாந்தி., சமுத்ரா., ராஜி., பிரியா., ஹேமா., கீதா.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. காஃபின்னா என்ன சங்கேதம்னு உங்க கதையாலத்தான் தெரிஞ்சுகிட்டேன் தேனக்கா!! ;-))))))

    பதிலளிநீக்கு
  9. ஃபில்டர் காபிய கேள்விபட்ருக்கேன்.
    சுக்கு காப்பிய கேள்விபட்ருக்கேன்... இஞ்சி காப்பிய கேள்விபட்ருக்கேன்.. ஏன் ஏலக்கா காப்பியக்கூட கேள்விபட்ருக்கேன்... ஆனா இப்பத்தான் ரொமாண்டிக் காபிய கேள்விபடுறேன்.... வாழ்த்துக்கள்க்கா

    பதிலளிநீக்கு
  10. அப்புறம் வந்த பாக்கியராஜ். இப்போ இருக்கும் பிருத்விராஜ்., இன்னும் இருக்கும் மம்முட்டி போல அழகன்..

    கமலஹாசன இந்த இடத்துல விட்டுட்டீங்களேக்கா ... ஏன்னா இந்த பதிவுல கமலஹாசனா தான் தெரியுறாரு.....

    கலக்கீட்டீங்களே காப்பி - கவிதை நல்லாருக்கே

    பதிலளிநீக்கு
  11. ஹுசைனம்மா..:))

    நன்றி ரத்னவேல் ஐயா.,


    மாய உலகம்..:))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...