எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 ஜூலை, 2021

மண்ணின் மணமும் உலகின் அன்பும்.

 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில் 

இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.

ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.

என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .

இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.

முடிவு உங்களுடையது.

நன்றி மேடம்.

 ஜீவ சிந்தன்.

#தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் திரு ஜீவசித்தன் அவர்களின் வேண்டுகோள் இது. எழுத்தும் நானும் என்ற தலைப்பில் தமுஎ சங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றியதை யூ ட்யூபில் பதிவு செய்திருந்தேன். அதைப்பற்றிய அவர்களது கருத்து இது. இம்மாதிரி என் எழுத்துக்களின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் இவர்போன்ற பல நலம் விரும்பிகளுக்காகவே அடுத்து சில நூல்கள் செட்டிநாட்டு  மண்ணின் மணத்தோடு வெளியிட விரும்புகிறேன். கடவுள் கருணை கிட்டட்டும். நன்றி ஜீவசிந்தன் சார். 

2902.தன்னை எழுத்துக்களில்

அமிழ்த்தி

என்னை அன்பில் ஆழ்த்திய தோழி

நலமுடன் வாழ்க பல்லாண்டு

#உங்கள் அன்பான வார்த்தைகளை இரண்டு நாளாக அசைபோட்டுக் கொண்டே இருக்கிறேன். பேரன்பும் ப்ரியங்களும்டா உலகு.

2903. செட்டிநாட்டுப் பெண்களின் விருந்தோம்பல் தெரிந்தும் இப்படிக் கூறலாமா. இப்பெண் கணவருக்காக சிரத்தை எடுத்துச் செய்துள்ளார். பாராட்டுகிறோம். இன்னும் பொன்னிறமாகப் பக்குவமாக, சுடச் சுடப் பக்கமிருந்து ஆச்சிகள் செய்து கொடுத்ததை, கொடுப்பதை யாராலும் செய்யவே முடியாது 😊

http://thenammailakshmanan-chumma.blogspot.com/?m=0

இது எனது வலைப்பூக்களில் ஒன்று. வீட்டில் சமைத்தவைகள்தான் அனைத்தும். 200 சொச்சம் குறிப்புகள். ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன். வெளிநாட்டில் வாழும் புதிதாகத் திருமணமான உறவினர்களுக்காகவே இந்த வலைப்பூவை எழுதி வருகிறேன்.

http://thenoos.blogspot.com/?m=0

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான உணவுக் குறிப்புகள் உள்ளன. தமிழில் எழுதப்பட்டது. 

வீட்டில் சமைத்த உணவுகள் பற்றிய குறிப்பும் பத்திரிக்கைகளில் வெளிவந்த குறிப்புகளும் உள்ளன. 

அவள் விகடன், குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், இவள் புதியவள், தேவதை, புதிய தரிசனம், கொளத்தூர் டைம்ஸ், இன் அண்ட் அவுட் சென்னை, சென்னை அவென்யூ, ஷெனாய் நகர் டைம்ஸ், டாக்டர் விகடன் ஆகியவற்றில் வெளியானது.

கோகுலத்தில் குழந்தைகளுக்கான உணவு வகைகள் ஹெல்த் பெனிஃபிட்ஸுடன் ஒரு வருட தொடராக வந்தது.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஏழு ஆண்டுகள் பிரசாதங்கள் வெளியானது.

30 ரெஸிப்பிக்கள் கொண்ட இணைப்புப் புத்தகங்களாக குமுதம் பக்தி ஸ்பெஷலில் நான்கும், மங்கையர் மலரில் இரண்டும், குங்குமம் தோழியில் ஒன்றும் குமுதம் சிநேகிதியில் ஒன்றும் ஆக 8 குட்டி புக்ஸ் வந்துள்ளன. 240 ரெஸிப்பிஸ். 😊. 

2904.மக்கள் கவிஞர் என் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்கள். திருமணத்துக்கு முன் சிறுவயல் பொன்னழகி அம்மன் திருவிழாவில் கவிபாடவும் அழைத்திருக்கிறார்கள். 


என் திருமணத்தில் அவர்கள் பேசியதில் இருந்து ஒரு வார்த்தையாவது தினம் என் கணவர் நினைவு கூர்வார், " நல்லாச் சொன்னாருய்யா அன்னிக்கே அவரு. சரியாத்தான் சொல்லி இருக்காரு " என்று. 

நகைச்சுவையில் சபையைக் கலகலக்க வைப்பதில் அவர்களுக்கு ஈடு இணை யாருமில்லை. கிடைத்தவற்றை யூட்யூபில் ஆவணப்படுத்த வேண்டும். 😊

திருமணத்தில் அவர்கள் பேசியதை மட்டும் கட் செய்து யூட்யூபில் அப்லோட் செய்ய வேண்டும். மருமகளுக்குத்தான் அது தெரியும். அவள் வர காத்துக் கொண்டிருக்கிறேன்

2905.கரும்பு தின்ன கூலியா?

சோகியை படிக்கும் போது பல இடங்களில் பல முறை படிக்க வைத்தது. அத்தகைய ஈர்ப்பு... சில இடங்களில்  மனம் எவ்வளவு வலிக்கவும் செய்தது தெரியுமா.. அபாரம். 

#என் சோகிசிவா நாவல் குறித்து ஒரு முன்னோட்ட வாசிப்பனுபவம். 

2906. முகநூல் வந்து இன்றோடு பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதிமூன்றாவது வருடம் ஆரம்பம். 2009 இல் இருந்து இன்று வரை எனக்கு அடையாளம் கிடைத்துக் கொண்டிருப்பது இங்கேதான். சொல்லில் அடங்கா அன்பு கொண்ட நல்லிதயங்களைப் பெற்றேன். பனிரெண்டு வருடங்களும் என் பிறந்த நாளைச் சிறப்பாக்கினார்கள் தோழமைகள். எட்டாத உயரங்களுக்கு எல்லாம் என்னை எடுத்துச் சென்றார்கள். நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடமுடியாது இந்தப் பேரன்பை. என் அன்பை அனைவருக்குமாய் அளிக்கிறேன். இத்தனை வருடங்களும் என்னை சிறப்பாய் உணரச் செய்த தோழமைகளுக்கும் முகநூலுக்கும் ப்ரியங்கள். ❤ ❤

2907.இவரது ஆபெண் எழுத்து தொடராக வந்ததைப் படித்திருக்கிறேன். அநேகமும் இதிகாச புராண காப்பிய மனவெழுச்சி கலந்த கற்பனைகள்தாம். அருமையான எழுத்து என்றாலும் தன் கருத்துக்களோடே ஆங்காங்கே முரண்படுவார். நமக்கே தர்க்கரீதியான சிந்தனைகள் வரும்போது வளரிளம் பருவத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்களை வளர்த்துக் கொண்டே அத்தோடு முரண்படவும் செய்கிறோம்தானே 😊


2908. தேவகோட்டை 
*கவிஞர் தமிழ்க் குமரப்பன்*
16- ஆம் ஆண்டு நினைவு

மற்றும்

காரைக்குடி *தோழர் சி.முருகன்* முதலாம் ஆண்டு நினைவு

*சிறுகதைப் போட்டி*

*குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் இடை நிற்றல் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், எதிர்பார்ப்புகள்*

*விதிமுறைகள்*

✍️ சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்

✍️ சிறுகதைகள் யாவும் சமூகநோக்கம், நற்சிந்தனை உள்ளதாக இருக்க வேண்டும்.

✍️ சிறுகதைகள் A4 தாளில் பின்பக்கம் எழுதாமல் ஒரு பக்கம் மட்டும் எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு அனுப்ப வேண்டும்.

✍️ அரசியல், தனி நபர் சாடல், ஒரு கட்சி சார்பு அல்லாததாக இருக்க வேண்டும்.

✍️ இப்போட்டிக்கு வயதுக் கட்டுப்பாடு கிடையாது.

✍️ நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

✍️ சிறுகதைகளை அஞ்சல் வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியர் அனுப்ப கூடாது.

✍️ சிறுகதை ஆசிரியர் தமது பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

✍️ போட்டியாளர் தம் சுய விவரக் குறிப்புடன் , தம் ஒளிப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

✍️ கதைகளுடன், 
கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே, 
அவை தழுவலோ,  மொழிபெயர்ப்போ,    பிறிதொன்றின் நகலோ அல்ல என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும்.

✍️ *முதல் பரிசு: ரூ.2500/-*

*இரண்டாம் பரிசு: ரூ.2200/-*

*மூன்றாம் பரிசு: ரூ.2000/-*

✍️ தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும்.

✍️ தங்கள் சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 
*05-08-2021*

✍️ விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: *7373452769*

✍️ அனுப்ப வேண்டிய முகவரி:

*சண்.மணிபாரதி*
வழக்கறிஞர்
சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்
656, பசுத் தொழு வீதி, 
விராமதி-630212,
சிவகங்கை மாவட்டம்.

2909. பற பற
இறக்கை தட்டி அழைக்கிறது
அப்பறவை.
நித்ய கம்பீரம் சூடிய 
தலைவர்கள்
நிலத்தில் காலூன்றி இருக்கிறார்கள்.
சேர்ந்தும் பறப்பதில்லை.
இறக்கை கோர்த்தும்
அலகு கோதுவதில்லை.
தனித்தே காற்றிலலைகிறது
பெண்ணுருப் படைத்த
அவ்வானம்பாடி.
மனிதர்களுக்கும்
பறவைகளுக்கும் 
தனித்தனி வாழ்க்கை
தனித்தனி எல்லை..
அவரவர் வானம்
அவரவர் உலகம்..

2910. எல்லாமே ப்லாக், தினமலர் சிறுவர்மலர், நமது மண்வாசத்தில் வெளிவந்தவையே.

போட்டி என்றால் புதுசாத்தான் எழுதணும். பொறுமையா ப்லாகிலும் போடாம வைச்சிருக்கணும்

லாக்டவுனில் எல்லோரும் வீட்டில். கனவு கற்பனை எழுத்து எல்லாம் வரண்டு போய் நிற்கின்றது. முளைக்கும் ஒன்றிரண்டு கருவும் எழுத்துருவம் பெறுவதற்கு நேரம் கிடைக்காமல் மாயச் சூலில் முடங்கிக் கிடக்கின்றன

2911. ஃபாத்திமா காலேஜ் அலுமினி மீட்.



2912. நிறைய subjectகளில் பல வகை எழுத்து ரசிக்கும்படி உள்ளது. 👍👍

#ஒரு பாராட்டு :) 

2913. பன்னிரெண்டுக்கு எட்டு நூல்பார்வை எழுதியாச்சு. கண் ரிப்பேர் ஆகுறதுக்குள்ள எல்லாத்தையும் படிச்சிறணும். :) 



2914.சேர்தாங்க. போத்தீஸ்னு நினைக்கிறேன் :)



2915.லேடீஸ் ஸ்பெஷல் விருது. 



2916.தர்மபுரி அதியமான் ஹோட்டல் ரூம். வெகு அழகு.



2917.வேறொண்ணுமில்லை.. விளம்பரம் பண்ணிட்டு வீட்டை சுத்தம் பண்ணப் போறேன். :) 


2918. மாடர்ன் கார்த்திகை தீபங்கள் :) 


2919. அகல்கள் :)



2920. மிக அருமையான நூல் மதிப்பீடு! நேர்த்தியான சொல்லாடல்! சிறப்பான புது வகை மையக் கருவுக்கு மேலும் செறிவு சேர்த்துள்ளது உங்கள் திறனாய்வு! மூல ஆசிரியர்.. மொழியாக்கப் படைப்பாளர் ஆகியோருடன் உங்களுக்கு என் தனிப்பட்ட  பாராட்டுகள்
தேனம்மை🎉🙂🌹

#வம்சியின் நிலம் பூத்து மலர்ந்த நாள் ( தமிழில் ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பு, மலையாள மூலம் மனோஜ் குரூர் )  என்ற என்னுடைய யூ ட்யூப் நூல் பார்வை பற்றி தெலுங்கானா தமிழ் எழுத்தாளர்,தமிழ்ச் சங்கச் செயலாளர் திருமதி சாந்தா தத் அவர்களின் பாராட்டு .  


டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.

1 கருத்து:

  1. வியக்க வைக்கும் உங்களின் எழுத்து...மனம் நிறைந்த வாழ்த்துகள்...சாதனைகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...