எனது பதிநான்கு நூல்கள்

சனி, 3 ஜூலை, 2021

சங்கும் சீப்பாம்பட்டைக் கரண்டியும் அடுக்குச் சட்டிகளும்

 காரைக்குடியில் புழங்கும் சாமான்கள் பற்றி எழுத விரும்பினேன். அவற்றில் முதற்படியாக சில்வர் சாமான்கள் பற்றி எழுதி வருகிறேன். 

இவை உயர அடுக்குச் சட்டிகள். ஐந்து முதல் ஏழு, ஒன்பது என அடுக்குச் சட்டிகள் திருமணச் சீராகப் பெண் வீட்டில் இருந்து பெண்ணுக்குக் கொடுப்பார்கள். அதைப் பரப்பி அடுக்கி வைத்துக் கொடுப்பார்கள். மைசூர் அடுக்கு, உயர அடுக்கு, சப்பட்டை அடுக்கு, அடி உருண்ட சட்டிகள் என வகைப்படுத்துவார்கள். 

இது உயர அடுக்கு. 


ஒன்றுக்குள் ஒன்றாகக் கொள்ளும்படியான ஐந்து சட்டிகள் கொண்டது. 

சமைத்தவைகளை இதில் ஊற்றி வைப்பதால் ( குழம்பு, கூட்டு, பொரியல் போன்றவை ) இவற்றை ”அவிச்சு ஊத்தும் சட்டிகள்” என்றும் சொல்வார்கள். 
இதற்குக் குமிழ் மூடி போட்ட பேஸின் என்று பெயர். 
இது எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி. 

சிலர் இதில் மோரும் உறை ஊற்றி வைப்பார்கள். 

சீப்பு பிரஷ். இதன் கைப்பிடியை வெளியே இழுத்தால்  சீப்பில் பற்கள் உள்ளே போய்விடும். உள்ளே செருகினால் மீண்டும் பற்கள் முளைக்கும். நாம் தலை சீவிக் கொள்ளலாம். 
எல்லாருக்கும் தெரிந்ததுதான், சந்தனப் பேலா. 
இதற்குச்  சட்டி சொம்பு என்று பெயர்.

கேதத்தின் போது தலைக்கு எண்ணெய், சீயக்காய் தொட்டு வைக்க இந்தச் சட்டி சொம்பைப் பயன்படுத்துவார்கள். 
குழந்தைகளுக்குப் பால், மருந்து போன்றவற்றைப் புகட்டும் சங்கு. இதற்குப் பாலாடை என்றும் பெயர். காரைக்குடிப்பக்கம் இதைச் சங்கு என்று சொல்வார்கள். 

ஸ்பூன்கள். ஏந்தல் ஸ்பூன், தேன் ஸ்பூன், பாக்கு ஸ்பூன்கள் போன்றவை. 
குழி ஸ்பூன்கள், நெய் ஸ்பூன், எண்ணெய் ஸ்பூன். 

இதற்குச் சீப்பாம்பட்டைக் கரண்டி என்று பெயர். பட்டையாக இருப்பதால் அப்படிப் பெயர் வந்திருக்கலாம். துவையல், சிறிய அளவிலான தொட்டுக் கொள்ளும் வகைகளைப் பரிமாற உபயோகிப்பது. 
குழி ஸ்பூன்கள். தேன் ஸ்பூன், எண்ணெய் ஸ்பூன்கள் மற்றும் நெய் ஸ்பூன்கள்.

இது ஊறுகாய் செட். இந்தக் கிண்ணங்களில் பொடி எண்ணெயும் வைத்து ஊற்றுவார்கள். 

விளிம்பு இல்லாத டம்ளர், போகணி. 
குளுதாடி மூடி . மரத்தாலானது. 

கிண்ணங்கள் வகையறா, சூப்புக் கிண்ணம், வெஞ்சனக் கிண்ணம், துவையல் கிண்ணம், பாயாசக் கிண்ணம். டம்ளர்கள், சிறிய மூடி போட்ட டப்பா.

டம்ளர்கள் செட். 11 உள்ளன. 
குழந்தைகள் பீச்சில் மண் அள்ளி விளையாடப் பயன்படுத்தும் குட்டி பக்கெட், ப்ளாஸ்டிக்.
இரும்பு தோசைக்கரண்டி, சில்வர் ஊதாங்குழல் ( அடுப்பில் நெருப்பை ஊதப் பயன்படுவது - ஊதாங்குழை என்றும் பேச்சு வழக்கில் சொல்வார்கள் ) சில்வர் பன்னீர்ச் செம்பு , சில்வர் திரி/காடா விளக்கு 

தண்ணீர் ஜக்.

இவற்றில் பல பொருட்கள் பந்திக்குப் பரிமாற வைத்திருப்பார்கள். தண்ணீர் ஜக், ஊறுகாய் ஜாடி, அடுக்குச் சட்டி, கிண்ணங்கள், ஸ்பூன்கள் போன்றவை. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...