16.பிரசவம் என்பது மறுபிறப்பு
பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாகும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அந்தத் தாயும் புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். தன் வாழ்விற்கானா ஒரு புதிய ஜீவனை வெளிக்கொணரப் போகும் மகிழ்வோடு அவள் தாங்கும் பிரசவ வலி என்பது மனோதைரியத்துடன் கூடியது.
பொதுவாகப் பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது
