எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 மார்ச், 2025

இப்படியும் சாதிக்கலாம் நூல் பற்றி திரு. சித்தார்த்தன் சுந்தரம்

 *நகரத்தார் பெண் சாதனையாளர்கள்*



சமீபத்தில் வாசித்த *`இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்”* மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும். 

`விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில் சாதனை’ நிகழ்த்திய இராமகிரி சுப்பையா வரை 17 ஆச்சிமார்களின் வெற்றிக் கதை இந்நூலில் கட்டுரை வடிவில் இடம் பெற்றிருக்கிறது. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஆச்சிகள் பல துறைகளிலும் – கார்பொரேட், மருத்துவம், மசாலா பொருள்கள் விற்பனை, கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பு, பொட்டீக், இசையுரை, நடனம், நகரத்தார்களின் பெயர் சொல்லும் பாரம்பரிய கட்டிடக்கலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கல்வி நிறுவனம் மேலாண்மை, ஆக்ஸிஜன் தொழிற்சாலை, பதிப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பல துறைகளிலும் கோலோட்சி வருவதைப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது. 

இதில் நேர்காணல் கண்ட அனைவரும் தங்களது குடும்பத்தினர் ஆதரவு இல்லையெனில் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது என்பது மிகவும் போற்றத்தக்க விஷயமாகும். 
இதை வாசிக்கும் போது என்னை வியப்பில் ஆழ்த்தியவர் திருமதி கனகலட்சுமி ஆச்சி, வயது 89. இவர் தன் க்ரோஷா வேலைப்பாட்டுக்காக கின்னஸ் சான்றிதழ் பெற்றிருக்கிறார். அதோடு தஞ்சாவூர் பாரம்பரிய ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார்.  இவர் மறைந்த இராம. சுப்பையா அவர்கள் மகள் என்பதும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், திராவிட கழகத்தைச் சேர்ந்த  சுப. வீ. அவர்களின் சகோதரி என்பதும் கூடுதல் தகவல். 

இவர் இளைய தலைமுறையினருக்கு சொல்லும் ஆலோசனை / அறிவுரை : `முடியும் என்றால் எதையும் சாதிக்க முடியும். வெற்றி வந்தாலும் பணிவுடன் தான், தோல்வி வந்தாலும் பொறுமையுடன் தான், எதிர்ப்பு வந்தாலும் துணிவுடன் தான், எது வந்தாலும் நம்பிக்கையுடன் தான். இது தான், இப்படித்தான் என்று எதுவும் இல்லை. எது எப்படியோ, அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும்” என்கிறார் இந்த அனுபவசாலி. 

இது போல ”ராமு ட்ராவல்ஸ்” இராமகிரி சுப்பையா, `இளைய தலைமுறையினருக்கு நான் சொல்வதெல்லாம் தன்னம்பிக்கையுடன் முடிவெடுங்கள். சோம்பேறித் தனம் இல்லாமல் உழையுங்கள். தொடர் உழைப்பு உங்களை நிச்சயம் உயர்த்தும்” என்கிறார். 

தமிழ் படித்ததால் உயர்ந்ததாகச் சொல்லும் அலமேலுவும், பல சிரமங்களுக்கு இடையில் பிரெஞ்ச் மொழி கற்றுக் கொண்டு இன்றைக்கு கோவையில் பிரெஞ்ச் மொழி கற்றுக் கொடுக்க ஒரு இன்ஸ்டிடியூட்டை நடத்தி வரும் மாலதி சுப்புவும், பெங்களூருவில் சினேகா பொட்டீக் நடத்தி வரும் அன்னபூரணி நாராயணனும், பிரிட்டனின் எரித் நகரிலிருந்து மசாலாப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வரும் சீதா தேனப்பனும் இன்னும் மற்றவர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதோடு இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். 

அன்றைக்குக் கடல்கடந்தும் வணிகம் செய்து வந்த சமூகம் நகரத்தார் சமூகம் ஆகும்.  ஆனால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் அதிலிருந்து விலகி அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். மீண்டும் நம் பாரம்பரியமான வணிகத் தொழிலில் இன்றைய தலைமுறையினரை ஈடுபடுத்த பல நகரத்தார் அமைப்புகள் (Nagarathar Chamber of Commerce _NCC, International Business Conference for Nagarathars – IBCN, Nagarathar Business Connections – NBC போன்ற இன்னும் பல) முனைப்புடன் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க விஷயமாகும்.

எளிய தமிழில் எண்பது பக்கங்களில் 17 ஆச்சிமார்களின் வெற்றிக் கதையை தேனம்மை லட்சுமணன் எழுதியிருக்கிறார்.  நீங்களும் வாசித்துப் பாருங்கள், கண்டிப்பாக ஓர் உத்வேகம் ஏற்பட்டு நாளைக்கு நீங்களும் ஒரு தொழில்முனைவோராக பரிணமிக்கலாம். 

இந்நூலில் உள்ள சிறு குறைபாடு என்னவெனில், ஆங்காங்கே சில சொற்பிழைகளும், ஆங்கிலப் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டிய இடங்களில் அர்த்தம் எதுவும் இல்லாத ஏதோ ஒரு சில தமிழ் சொற்களும் இருப்பதாகும். அடுத்தப் பதிப்பில் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன். அது போல, பெண் சாதனையாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

*நூலின் பெயர்: இப்படியும் சாதிக்கலாம்*
*ஆசிரி(யை)யர்: தேனம்மை லெட்சுமணன்*
*பதிப்பாளர்: நூல் குடில் பதிப்பகம்*
*விலை: ரூ 70.*
 
*(பதிவு: சித்தார்த்தன் சுந்தரம்)*

டிஸ்கி:- **அழகான விமர்சனம் தந்த திரு. சித்தார்த்தன் சுந்தரம் சாருக்கும், நூலை வெளியிட்ட நூல் குடில் பதிப்பகம் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும் நன்றி!!


இந்த நூல் பற்றிய சித்தார்த்தன் சாரின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள். 

**அருமை.


**👌👌👏👏👏மிகவும் சிறப்பு ஆச்சி


**arumai thenu


**I want 2 books ...


**இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்”  &  "செட்டிநாட்டுப் பெண்கள்" சிறுகதைத் தொகுப்பு - 2 புத்தங்களும் எனக்கு வேண்டும்.  அனுப்ப வேண்டிய தொகை, Google Pay எண் கொடுத்தால் பணம் அனுப்பி முகவரி விபரம் கொடுக்கிறேன்.  மிக்க நன்றி.  


**இவர் இளைய தலைமுறையினருக்கு சொல்லும் ஆலோசனை / அறிவுரை : *`முடியும் என்றால் எதையும் சாதிக்க முடியும். வெற்றி வந்தாலும் பணிவுடன் தான், தோல்வி வந்தாலும் பொறுமையுடன் தான், எதிர்ப்பு வந்தாலும் துணிவுடன் தான், எது வந்தாலும் நம்பிக்கையுடன் தான். இது தான், இப்படித்தான் என்று எதுவும் இல்லை. எது எப்படியோ, அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும்”* என்கிறார் இந்த அனுபவசாலி.

**மிக அருமையான என்னை மிகவும் கவர்ந்த சொற்டொடர். பாராட்டுக்கள். உங்கள் தமிழுக்கு என் வணக்கம்.*👏👏👏👏\


**Good effort congratulations


**Akka I need this book


**சிறந்தசாதனையாளர்மருமகளுக்குவாழ்த்துக்கள்👌👌👍


**தங்கள் புத்தகம் அருமையாக உள்ளது.
வாழ்த்துகள்.


**Great.proud of you dear mam. I will come soon and get the books.God bless you abundantly👍🙏😍😍😍💐💐💐💐💐


**எனக்கு மணிமேகலை  போன்பண்ணி இப்பொழுது சொன்னாள். மிக்கமகிழ்ச்சியாக உள்ளது நம்மில் யாரும் மேலேதூக்கிவிட வி.ரும்புவதில்லை நீங்கள் உங்களைமாதிரி அனைவரும் மேலே வரவேண்டும் என்று நினைக்கிற நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.


**பாராட்டுகள்.


**வாழ்த்துகள் பா


**Congratulations Thenu.
👏👏👌👌👍👍


**I hope to read the book


**வாழ்த்துக்கள் அயித்தியாண்டி


**Antha Sathanaiyararkalil Neengalum Miga Mukkiyamanavargal Aithiyandi...(Yaen Endraal Ezhuthu Ulagil Saathippathu Miga Arithu...)
Kudos Aithiyandi...🌹🌹❤️❤️😍😍👍👍😃


**இப்பொழுது மங்கையர் சோலை குரூப்பில் உங்களது "இப்படியும் சாதிக்கலாம் " என்ற தலைப்பில் உள்ள நூலை பற்றி பார்த்தேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நானும் நகரத்தாரை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள மிக்க மகிழ்ச்சி


** கீழே இருப்பவர்களை மேலே தூக்கிவிடவேண்டும் என்ற நல்ல உள்ளத்திற்கு என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும்.நன்றி.


** Vanakkam 🙏🏿


**அட்டைப் படமே பேர் சொல்லுது தேனு


** 🌹🌹😍😍👍👍😃


**இந்த  நூல்கள் எனக்கு Vppல் Or gpayல் கிடைக்க செய முடியுமா?


**மகிழ்ச்சி


**A Nice review 


** எவ்வளவுதான், நாம் மீண்டும் மீண்டும் பார்த்தாலும், நம்மையும் மீறி எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள் வந்துவிடும். ஆங்கிலப் பெயர் எழுதிக் கொடுத்த இடத்தில், அர்த்தம் இல்லா வார்த்தைகள் தட்டச்சுப் பிழைகளாக வந்து விடும். என் நூலிலும் நிறைய அப்படி இருக்கின்றன



** நகரத்தார் பெண் சாதனையாளர்கள் -- அருமையான content.


**செட்டிநாட்டு தமிழறிஞர்கள் பற்றி ஒரு நூல் எழுதலாமே.
தமிழ்க் கடல் ராய சொ,
பண்டிதமணி, டாக்டர் வ சுப மாணிக்கம்..
இப்படி


**Super athai...



** Romba periya msg ah irukae😂


**வாவ்! நன்றி! நன்றி!!

** நூலை வெளியிட்ட நூல் குடில் பதிப்பகம் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும் நன்றி!!

** சார் சிலர் புக் கேக்குறாங்க. ஜி பே & போன் நம்பர் , அமௌண்ட் எவ்வளவு என்று கொடுக்க வேண்டுகிறேன். அவர்களுக்கு அனுப்புகிறேன். போஸ்டில் அனுப்ப இயலும்தானே

** I want 2 copies delivered to my daughter and daughter in law
 Address shared in personal window


**வணக்கம் 
விரிவான, பாராட்டும் விதமான நூல் மதிப்புரை.
சித்தார்த்தன் சுந்தரம் அண்ணன் அவர்களுக்கு நன்றி 

சிறு விளக்கம் 
பொதுவாக புத்தகம் முழுமை அடையாமல் வெளியிடுவதில்லை.
எழுத்தாளரும், நூலில் இடம் பெற்ற தொழில் முனைவோரும், அம்பத்தூர் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வெளியிடப்பட்டது. இது டம்மி புத்தகம் தான்.

புகைப்படங்களுடன் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டு புத்தகம் விற்பனைக்கு வரும்.

அதுவரை நண்பர்கள் காத்திருக்குமாறு‌ கேட்டுக் கொள்கிறோம்.

 ஜனவரி புத்தகக் கண்காட்சிக்கு பிறகு இந்நூல் கிடைக்கும்.

 டம்மி புத்தகம் என்னிடம் பத்து பிரதிகள் இருக்கின்றன. இருப்பினும் தற்போது அதை கொடுப்பது முறையாக இருக்காது. எனவே ஒரு மாதம் காத்திருக்கவும். நன்றி

 **ஆச்சி த‌தேனம்மை  அவர்களின் சிறுகதைத்
தொகுப்பின் விமரிசனம் முகநூலில்.
ஆச்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

**நல்லது மேடம்.   உங்களது படைப்புகள் ஏதேனும் புதிதாக இருந்தால் எனக்கு அனுப்புங்கள். நான் இணையதளம் அல்லது நான் மின்னிதழில் பிரசுரிக்கலாம்.🌹🌹🌹🌹🌹


பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அன்பும் நன்றியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...