எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

தனுஷ்கோடி & அரிச்சல் முனை.

 சில வருடங்களுக்கு முன் இராமேஸ்வரம் சென்றிருந்தோம். அப்போது அப்துல்கலாம் அவர்களின் நினைவகம் உருவாகி இருந்தது. ஆனாலும் கூட்டம் அதிகம் என்பதால் உள்ளே சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எனவே வெளியே ஒரு க்ளிக். 

1960 களில் புயலால் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கடல் கொண்ட தனுஷ்கோடியின் மிச்ச சொச்சத்தை அரிச்சல் முனை வரை சென்று பார்த்துவிட்டு வந்தோம். காரில் செல்லும்போது இடப்புறம் முழுவதும் மணலும் மணல் கலந்து ஆங்காங்கே சிறிது உப்புவிளைந்த நீரும். ஆனால் வலப்பக்கம் கொந்தளிக்கு கடல். ஆக்ரோஷிக்கும் அலைகள் என மிரட்சியாக இருந்தது. 

அரிச்சல் முனை வரை சென்றோம். பின் தனுஷ்கோடி சிவன் கோவிலையும் ,கோதண்டராமர் கோயிலையும் தரிசித்துவிட்டுத் திரும்பினோம். 





அரிச்சல் முனையில்  :)
தூரத்தே தெரியும் கலங்கரை விளக்கம். 
இது அரிச்சல் முனை நோக்கிய பாதை.
பெரிய மகனார். 
கடலுக்கென்ன தடுப்பு மூடி !
இராமேஸ்வரம் திரு ராமநாத சுவாமி கோயில் தெற்கு வாசல்.
கோவிலின் மேற்கு வாசலில் இருபுறமும் கோயில்கள் உள்ளன. 
ஒருபுறம் ஸ்ரீ முருகன் கோவில். இன்னொரு புறம் ஸ்ரீ விநாயகர் கோவில் என நினைக்கிறேன். 




புகைப்படங்கள் முன் பின்னாக அப்லோட் ஆகின்றன. !


அரிச்சல் முனை. 
தூரத்தில் தெரியுது பாருங்க. அதுதான் அரிச்சல் முனை. இருக்கும் ட்ராஃபிக்கில் அங்கே போவதற்குள் இருட்டி விடும் எனப் போகவில்லை. 
இங்கேயே சில பல க்ளிக்குகளைக் க்ளிக்கிக் கொண்டோம். 



கல்லணையைத் தாண்டி அடிக்கிற அலையில், காற்றில் நாங்களே பறந்தோம். 
இது மாலை நேரத்து மயக்கம் :)




மறுநாள் இராமேஸ்வரம் இராமநாதரைத் தரிசித்துவிட்டு ஊர் திரும்பினோம். 

2 கருத்துகள்:

  1. படங்களும் விவரங்களும் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...