எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 அக்டோபர், 2020

வூபர் நதியின் மேல் தொங்கு ரயிலில் ஒரு த்ரில்லிங் சவாரி.

 அன்றைக்குத் தொங்கும் ரயிலில் பாதியில் விட்டுட்டுப் போயிட்டேனே. வாங்க வூபர் நதியின் மேல் ஒரு சவாரி போவோம். 

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பேலியா மாகாணத்தில் ஓடும் ஒரு நதிதான் வூபர். இது ரைன் நதியின் கிளை நதிதான். 

எப்பிடி சலசலன்னு தண்ணீர் ஓடுது பாருங்க. 

இந்த ட்ரெயின் இன்னொரு ட்ரெயின் ட்ராக், ரோடு,வூபர் நதி என மாறி மாறி ஓடும். மகா த்ரில்லா இருக்கும். 

இந்த சஸ்பென்ஷன் ரயில் மட்டுமில்ல. மாங்க்ஸ்டன் ரயில்வே ப்ரிட்ஜும் ரைனின் கிளை நதியான வூபர் மேலதான் அமைக்கப்பட்டிருக்கு. !
நதியின் பக்கவாட்டு சுவர்களில் க்ளாம்ப் அடித்து இரும்புப் பாலம் கட்டி அதில் தொங்கும் ரயிலை அனுப்பும் ஜெர்மானியர்களின் திறமை வியக்கத்தக்கது.  

பக்கவாட்டு ரோடுகள், பாலங்கள், பாலங்களின் மேல் குறுக்குப் பாலங்கள். 


போகும் வேகத்தைப் பாருங்க. 

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பதினைந்து செகண்ட்தான் நிக்கும். ! 




இங்கே கீழே நதி அதன் குறுக்கே நடை பாதை மேலே தொங்கும் ரயில்.


பக்கவாட்டில் அடுத்த ட்ராக்கில் இன்னொரு ட்ரெயின் கடக்கிறது. ஒருபக்க வீலில் தொங்கிக் கொண்டுதான் இந்த ட்ரெயின் ஓடுது. அதை அடுத்த இடுகையில் போடுறேன். 



அறுபது கிலோமீட்டர் வேகத்துல இது ஆடி அசைஞ்சு போற அழகுல நமக்கு உக்காரவே திக் திக்குங்குது. கௌசி பின்பக்கம் போய் உக்காருங்க. ஊரோட அழகை நல்லாவே ரசிக்கலாம்னாங்க. நாம ட்ரெயின் ஆடுற ஆட்டத்துல பயந்துட்டு இருந்த இடத்தை விட்டு எழும்பவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 15 செகண்ட்தான் நின்னுச்சு வேற.! 


ஆக்ஸிடெண்ட் எல்லாம் ஆகாம இருக்குமா. ஓரிரு முறை ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கு. அப்பவெல்லாம் நிறுத்தி வைச்சிட்டு அதன் பிறகு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இயக்கி இருக்காங்க.
ஒரு முறை ரோட்டில் ஒரு ட்ரக் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கு. இது தரையில் இருந்து  39 அடி உயரத்தில் ஓடுது. வூபர் நதியின் மீதும் இதே உயர இடைவெளியில் ஓடுது.

 சில சமயம் கீழே பார்க்கும்போது வயித்தைக் கலக்குது. ஒருவேளை இது கீழே விழுந்தால் கூட நமக்கு நீச்சல் தெரியாதேன்னுதான். ! 
இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட சேதத்தினால் மூடப்பட்ட இது 1946 இல் பின்னர் திறக்கப்பட்டிருக்கு. 
1999 இல் ஒரு முறை ராபர்ட் டாம் ப்ளாட்ஸ் ஸ்டேஷன்ல நடந்த மோசமான விபத்துல இதுல பயணம் செய்த 5 இறந்து போயிட்டாங்க. 47 பேருக்குப் படுகாயம். முதல்நாள் வேலை செய்த வொர்க்கர்ஸ் தங்கள் வேலை முடிஞ்சவுடன இதுல உபயோகப்படுத்தின ஒரு மெட்டல் க்ளா ( இரும்பு க்ளிப் போல ) வை எடுக்க மறந்துட்டாங்க. 39கிலோ மீட்டர் வேகத்துல அதிகாலைல வந்த ட்ரெயின் இதுல மோதி விபத்துக்குள்ளாகியிருக்கு. தண்ணீருக்குள்ள 3 நாள் தேடி இதுல (இறந்தவங்களையும்) காயம் பட்டவங்களைக் கண்டுபிடிச்சு மீட்டிருக்காங்க. 

2008 இல் ஹேம்மர்ஸ்டெயின் ஸ்டேஷன்ல ஒரு க்ரேன் ட்ரெக் மோதி விபத்து. 

அப்பிடி இருந்தும் வாராவாரம் 80,000 பயணிகளைச் சுமக்குதாம் இந்த ட்ரெயின். டூ இன் ஒன், த்ரீ இன் ஒன் மாதிரி கீழே ஒரு ட்ரெயின், மேலே ஒரு தொங்கும் ட்ரெயின், பாலத்தில் மேல் ஒரு மோனோ ரயில் என்று அசத்த இவர்களால் மட்டுமே முடியும். 

இதுல நடந்த விபத்துக்களைப் பத்தி பயந்துக்காதீங்க. இவங்க அதை சீக்கிரமே சரி செய்து ரயிலை ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப இந்த த்ரில்லிங் & அட்வென்சரஸ் சவாரில உங்களைப் பாதிலேயே விட்டுட்டுப் போறேனேன்னு இருக்கு. அடுத்து வில்ஹெல்ம் ll பயணித்த பாதையில் கைஸர்வேகனில் கூட்டிட்டுப் போறேன். அதென்ன கைஸர்வேகன் ? அது பத்தி அடுத்த இடுகையில் சொல்வேன் :)

2 கருத்துகள்:

  1. நன்றி ஸ்ரீராம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...