எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 அக்டோபர், 2020

நடந்தாய் வாழி காவேரி - 2.

அதே காவிரிதான். அதே படித்துறைதான். 

இது கரூர்  திருச்சி செல்லும் வழியில் உள்ள காவிரிப் படித்துறை. 




தூரத்தே பாலம். அதன் பின்னே ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம். 



கண்ணெட்டிய வரை காவிரி. பின்னர் நெடுஞ்சாலை. 



நாம் கடந்து கொண்டிருப்பது காவிரிப் பாலத்தின் மேல். 



பக்கவாட்டில் செல்லும்போது நன்றாகத் தெரிவாள் காவிரி பாலத்தில் செல்லும்போது நன்றாகத் தெரிவதில்லை. 




முழுக்க முழுக்கப் பெரிய பாலமொன்றைக் கடந்து கொண்டிருக்கிறோம். 



அப்பாடா இப்பொழுது கொஞ்சம் கருணை மனத்தோடு காட்சி அளிக்கிறாள் காவிரி அன்னை. 


இந்த வருடம் காவிரி வந்துவிட்டாள் ஆனால் பூஜை செய்வோரெல்லாம் பூட்டிய வீட்டுக்குள். 



எல்லாத் தடுப்புக்களையும் தாண்டி வந்த காவேரியை வரவேற்க யாருமில்லை. 



எத்தனை காதோலைகள் , கருகமணிகள், மஞ்சள் பிள்ளையார்கள், பூமாலைகள், சித்ரான்னங்கள் என்று களேபரப்படும் காவிரிக்கரை. 



இப்போது அவள் மட்டும் தனியாய் ஆரவாரமில்லாமல். 




சில புதர்ச்செடிகளும் கொடிகளும் கரையோர விருட்சங்களும் மட்டுமே துணையாய் ஹாயாக நடந்துகொண்டிருக்கிறாள். 





எவ்வளவு வெய்யில் சுட்டெரித்தாலும் தூரத்துப் பசுமையும் காவிரியின் குளுமையும் நம்மைக் குளிர்விக்கவே செய்கின்றன. ஒரு முங்கு போட முடியாவிட்டால்தான் என்ன. அவள் தன் சுவாசத்தை அனுப்பிப் பார்வையைக் குளிர்விக்கிறாளே போதாதா. 

ஹாயாக ஓய்வாக நடந்தாய் வாழி காவேரி. மாசுபடாமல் இப்படியே நீ நீடித்து ஓடி நிலமெல்லாம் பயிராய் எழப் பிரார்த்தனைகள். 

 

4 கருத்துகள்:

  1. ஆற்றில் நீர் ஓடுவதே கண்கொள்ளாக் காட்சி

    பதிலளிநீக்கு
  2. அழகான காட்சிகள். ப்ரவாகமாக ஓடும் காவிரி ஆற்றைக் காண ஆவல்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    ஆம் பாலா சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...