எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஏப்ரல், 2015

சாட்டர்டே போஸ்ட் - அழகைத் தக்கவைக்க அக்குபஞ்சர் - ஆரண்யம் - ஈஸ்வரி ரகு.

அக்குபஞ்சர் - ஒரு அறிமுகம்
ஈஸ்வரி ரகு.

சென்னையில் ஒரு முறை வலைப்பதிவர் சந்திப்பு மிகக் கோலாகலமாக அடையார் ழ கஃபேயில் நடைபெற்றது. அதை இங்கே காணலாம்.

ழ வில் வலைப்பூ வடை...

அப்போது ஈஸ்வரியை சந்தித்தேன். மிக அருமையான தோழி. அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவோம். அவர் அக்குபஞ்சர் பற்றி எழுதி நக்கீரனில்  “ அக்குபஞ்சர் - உடற்கூறுகளும் உணவு முறைகளும் “ என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. அக்குபஞ்சர் அறிவோம் என்ற தலைப்பிலும் பத்திகள் எழுதி வருகிறார்.



நானும் அவரிடம் கடந்த 6 மாதங்களாக சாட்டர்டே போஸ்டுக்காக அக்குபஞ்சர் வைத்திய முறைகள் பற்றிக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதோ அதோ என்றவர் இப்போது வூடு கட்டிக் கொண்டிருக்கிறார். அட மெய்யாலுமேதாங்க அதுனால அம்மிணி பிசி. முகநூலில் வெர்டிகோ பற்றி ஒரு பதிவு போனவாரம் போட்டுவிட உடனே போய் பிடித்துக்கொண்டேன். எப்ப அனுப்பப் போறீங்க அனுப்புறீங்களா இல்லையா என்ற ரேஞ்சுக்கு மிரட்டவும் உடன் அனுப்பி விட்டார். 

இவர் ஆரண்யம் என்ற நேச்சுரல் ஹெல்த் கேர் செண்டர் நடத்தி வருகிறார் ( ஃபேஷியல் அக்குப்ரஷர் ட்ரீட்மெண்ட் ஒன்லி ஃபார் லேடீஸ் - வயதான தோற்றம், முதுமை,தோல் சுருக்கம்,தோல் மென்மையை இழத்தல், தழும்புகள், வயதாவதால் ஏற்படும் முகச்சுருக்கம், வாய் ஓரம் கண் ஓரம் ஏற்படும் - சிரிப்பினால் உண்டாகும் காக்காய்கால் கோடுகள்,மூக்கு முகவாய் ஓரம் ஏற்படும் கோடுகளை இந்த சிகிச்சை மூலம் நீக்கலாமாம். இதனால் என்றும் இளமையோடு திகழலாம்.  )

அக்குபஞ்சர் மருத்துவம் பின்விளைவுகள் இல்லாதது. ஒரு முறை நண்பர் ஒருவரின் தந்தைக்கு கேன்சர் எனக் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் மற்ற மருத்துவ முறைகளுடன் அக்குபஞ்சர் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். ( மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்தார்கள் ) அதனால் அந்தப் பெரியவர் நோயின் சுவடு வெளியே தெரியாமலே பல வருடங்களை வரை வாழ்ந்து அதன் பின் இயற்கை எய்தினார். அதிலிருந்தே எனக்கு அக்குபஞ்சர் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம். எனவே அக்குபஞ்சர் தெரஃபிஸ்டான ஈஸ்வரியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன். 

ஊசிகளால் முகத்தில் பவர்பாயிண்ட் எனப்படும் புள்ளிகளில் தொடுதல் மூலம் சிகிச்சையளிப்பது என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் என் போன்றோருக்கு 

///அக்குபஞ்சம் மருத்துவம் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள் ஈஸ்வரி ///

///அக்குபஞ்சர் மருத்துவமானது மிக சிறப்பான  மருத்துவம். பக்க விளைவுகள் கிடையாது . எந்தவொரு நோயையும் குணமாக்கிக் கொள்ளும் சக்தி நம்முடைய உடலுக்கு இயற்கையாகவே உண்டு. தடை எங்கு இருக்கிறது என்பதையும், அதற்கு என்ன காரணம் என்பதையும் அறிந்து அதற்குரிய தூண்டலை மிகத்துல்லியமாகச் செய்வதுதான் அக்குபஞ்சர் மருத்துவம். இம்மருத்துவ முறையால்  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப்பட்டு  உடலிற்கு சக்தி கிடைக்கிறது

எந்த ஒரு நோயிற்கும் அடிப்படையான காரணம், பஞ்ச பூத புள்ளிகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட பிராணசக்தியின் சக்தி குறைபாட்டின் வெளிப்பாடேயாகும்.
அக்குபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலைப் படுத்துவதே.
அதே போல நம் உடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவைகளால் ஆனது. அறுசுவைகளில் ஒரு சுவை குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ மேற்கூறிய உறுப்புகளுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு குறைந்தோ அல்லது கூடியோ பெறப்படும்போது தான் உடலில் பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்
சிலர் அக்குபஞ்சரை சரியாக விளங்கி கொள்ளாமல், அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் சிகிச்சை செய்வதால், அக்குபஞ்சர் சரியாக செயல்படாது என்ற ஒரு எண்ணத்தை  மக்கள் மத்தியில் உண்டாக்கி விட்டனர். அக்குபஞ்சர் மருத்துவத்தை சரியான முறையில் கற்று அறியாமலும், அதன் உண்மையான தத்துவங்களை புரிந்துகொள்ளமலும், உடற்கூறு, தொற்று பற்றிய தவறான புரிதலும் உள்ள சிலரால் மக்களிடையே சரியான முறையில்  சென்று சேரவில்லை என்பதே வலி மிகுந்த  உண்மையும் கூட. அக்குபஞ்சர் வளர்ச்சியில் சிறு சிறு தடைகள் வருமே தவிர முழுமை பெரும் காலம் வெகு அருகில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது
அனைத்து வலிகளுக்கும், நோய்களுக்கும் மூலகாரணம் 12 உள்ளுறுப்புகளின் சமநிலை மாறுபாடே. இந்த மூலக்காரணத்தை சமன்படுத்தாமல் எந்த வலிகளும் தீராது. அக்குபஞ்சரில் தேர்ந்தெடுக்கப்படும் புள்ளிகளுக்கு சரியான காரணங்கள், விளக்கங்களை  தெரிந்தும் புரிந்தும் இருத்தல் மிக முக்கியம்நோயின் மூல காரணத்தை கண்டறிவது மட்டுமில்லாமல் அதோடு தொடர்புடைய உறுப்புகளின் பாதிப்பையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன். ஒவ்வருவருக்கும் வரும் நோயிற்கான காரணமும் வேறுபடும். அந்த நேரத்தில் நமக்கு தெரிந்த அல்லது நம் மனதில் தோன்றும் புள்ளிகளை   பயன்படுத்துவதால் முழுமையான குணம் கிடைக்காது. முழுமையான தேடல் மற்றும் ஆர்வமும் இல்லாமல் அளிக்கப்படும் சிகிச்சையில் பூரண குணம் கிடைக்காமல் போகும். முறையான தொடர் பயிற்சியின் மூலமே  நாடி பரிசோதனை  மற்றும் நோயிற்கான காரணம் தெளிவாக அறிய முடியும்.
அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரே ஒரு ஊசியை கொண்டு, ஒரு நோயாளியின் உடலில் தோன்றியுள்ள  நோயின் அறிகுறிகளை கண்டறிந்து அந்நோயை  நீக்கி விட முடியும். அக்கு பஞ்சரில் மிக முக்கியமாகும். அக்குபஞ்சரில் நம் அணுகுமுறை மற்றும் நுணுக்கமான வகையில் தேர்வு செய்யும் புள்ளிகள் இவற்றில் தெளிவு இருத்தல் வேண்டும்.
எந்த உறுப்பாக இருந்தா லும் அதிகமாக வேலை செய்வதும் தவறு... குறைவாக வேலை செய்வதும் தவறு. இதை சமநிலைப்படுத்த, அதற்குரிய முக்கியமான புள்ளிகளைத் தொட்டுத் தூண்டிவிட்டால் போதுமானது.

எந்தப் புள்ளி, எந்த உறுப்புடன் தொடர்புடையது என்ற அடிப்படை அறிவே நோயிற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய ஏதுவாகும். எதை தொட்டாலும் சரியாகும் என்ற நிலையிலும், சந்தேகமாக எதையாவது தொட்டு சரி செய்து விடலாம் என்றும் தான்  இன்று பெரும்பாலும் அக்கு பஞ்சர் மருத்துவர்களின் கோட்பாடு உள்ளது.
ஒவ்வொருவருக்கும் நாடி பரிசோதனை செய்து நாம் சுயமாக புள்ளிகளை தேர்வு செய்யும் அளவிற்கு அறிவை வளர்த்துக் கொள்வது அக்குபஞ்சர் மருத்துவரின் கடமையாகும். இயற்கையின் விதியின் மீதும்  சிகிச்சையின் மீதும் நம்பிக்கை வைத்து நல்ல மனநிலையில் நாம் கொடுக்கும் சிகிச்சை மிகுந்த பலன் அளிப்பதோடு மட்டுமில்லாமல், அதனால் அக்குபஞ்சர் மருத்துவமும் வளரும்.
முறையான  நாடி பரிசோதனை, கேட்டறிதல் , தொட்டறிதல்  மூலமாக நோயின் மூல காரணத்தை கண்டறிய வேண்டும். சிலருக்கு குணமாவது போல் இருந்தாலும் ஒரு சில நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நோய் திரும்ப வந்து விடும். ஏன் என்றால் நோய் என்பது ஒன்றுதான் . அது பல்வேறு அறிகுறிகளை காண்பிக்கும். நாம் அறிகுறிகளை நீக்க வேண்டும் என்று எவ்வளவுதான் போராடினாலும் அது நீங்காது. சில நேரங்களில் குணமாவது போல் இருந்தாலும் பூரண குணம் கிடைக்காது. உடலில் தோன்றி உள்ள அடிப்படையான நோயின் தேக்கம் இன்னும் உள்ளது என்பதே காரணம். தடைபட்ட இயக்கம் சீராகாமல் இருந்தால் அது எத்தனை காலம் ஆனாலும் அறிகுறிகளை திரும்ப திரும்ப தோற்றுவிதுக் கொண்டே தான் இருக்கும்.
முதலில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது, தடைபட்டுள்ளது, அதனால் அதோடு தொடர்புடைய உறுப்பின் இயக்கம் மற்றும் பாதிப்பு போன்றவற்றை முதலில்  கண்டறியவேண்டும். அந்த பாதிப்பை சரி செய்யும் சரியான புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம், அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு, நோயை எவ்வாறு சரி செய்கிறது, அப்புள்ளி அந்நோயை பூரணமாக குணமாக்கும் என்பதில் நமக்கு அதிதீவிரமான உறுதி என்ற தெளிவு இருத்தல் வேண்டும். நாள்பட்ட தீவிரமான நோய்களுக்கும் பக்கவிளைவுகள் அற்ற அக்குபஞ்சர் மூலம் குணமளிக்கலாம்.
அக்குபஞ்சரில் வெற்றிகரமாக குணமாக்க பார்வையோ, அல்லது போன் வழி தொடர்போ, மந்திரத்தால் மாங்காய் விளையும் என்பது போன்ற வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.
அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலை படுத்துவது ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது 
அவ்வாறு பயன்படுத்தும் போது நோய் முழுமையாக குணமாகாமல் வேறு உறுப்பிற்கு நோயின் தாக்கமானது திசை திருப்ப படுகிறது . இது பின்னால் வேறு ஒரு பிரச்சினையாக வளர்ச்சி பெறுகிறது.  இவ்வாறு பயன்படுத்துவது சரி என்றால், நாடி பரிசோதனை என்ற ஒன்றே தேவை இல்லை என்று ஆகி விடுகிறது .ஆனால் அகுபஞ்சரின் சிறப்பம்சமே நாடி பரிசோதனைதான்.  எனவே நாடி பரிசோதனை செய்து அதற்கேற்ப புள்ளிகளை தேர்வு செய்வதே மிக சிறப்பான பலனை தரும். //


டிஸ்கி :- அக்குபஞ்சர் என்றால் ஏதோ ஊசியால் சில இடங்களில்/புள்ளிகளில் குத்தி அல்லது தொட்டு குணப்படுத்துவார்கள் என்று மட்டும் நினைத்திருந்தேன். இது நாடி பார்த்து பஞ்ச பூத சக்திகளையும் சமநிலைப்படுத்துவது என்று அறிந்துகொண்டேன். 

நோய்நாடி நொய் முதல் நாடி என்பார்கள் அது அக்குபஞ்சரில் மிகப் பொருத்தமாயிருக்கும்போல் தோன்றுகிறது. மிக்க நன்றி ஈஸ்வரி. மிக நுண்ணிய விஷயம் ஒன்றை சாட்டர்டே ஜாலிகார்னருக்காகப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

14 கருத்துகள்:

  1. சிறு வயதில் எதிர் வீட்டில் உள்ளவரை நினைத்தேன்... அவர் நாடி பரிசோதனை மூலமே எல்லாவற்றையும் சொல்லி விடுவார்...

    பதிலளிநீக்கு
  2. மருந்தில்லாத...பக்கவிளைவுகளில்லாத எளிய இம்மருத்துவ முறையை அனைவரும் பின்பற்றினால் வாழும் காலம் ஆரோக்கியமாக வாழலாம். நன்றி தேனு.

    பதிலளிநீக்கு
  3. தனபாலன் சகோ இதுவும் நாடி பார்த்து சொல்வதுதான்னு சொல்றாங்க ஈஸ்வரி. -- கருத்துக்கு நன்றி

    மிக அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி ஈஸ்வரி. :) பின்பற்ற முயற்சிப்போம். :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! // கண்டிப்பா ஆச்சி..... எப்படியாவது முதலமைச்சர் ஆயிடனும் நான்....

    பதிலளிநீக்கு
  6. இன்று சாடர்டே ஜாலி கார்னராக மட்டும் இல்லாமல், அக்கு பஞ்சர் சிகிச்சை முறை, அதன் மூலம் தீராத நோய்களை குணப்படுத்துதல், அழகிய பெண்களுக்கு மேலும் மேலும் அழகூட்டிடும் அழகியல் முறைகள் அவற்றால் என்றும் இளமையைத் தக்க வைத்துக்கொள்ளுதல் என ஏதேதோ பயனுள்ள பல விஷயங்களை வாசகர்களாகிய எங்களுக்கும் அக்கு பஞ்சர் செய்து அசத்தியுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பேட்டியும் நம்பிக்கையும் அளித்துள்ள தங்களின் தோழிக்கும் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. //இவர் ஆரண்யம் என்ற நேச்சுரல் ஹெல்த் கேர் செண்டர் நடத்தி வருகிறார் ( ஃபேஷியல் அக்குப்ரஷர் ட்ரீட்மெண்ட் ஒன்லி ஃபார் லேடீஸ் - வயதான தோற்றம், முதுமை,தோல் சுருக்கம்,தோல் மென்மையை இழத்தல், தழும்புகள், வயதாவதால் ஏற்படும் முகச்சுருக்கம், வாய் ஓரம் கண் ஓரம் ஏற்படும் - சிரிப்பினால் உண்டாகும் காக்காய்கால் கோடுகள்,மூக்கு முகவாய் ஓரம் ஏற்படும் கோடுகளை இந்த சிகிச்சை மூலம் நீக்கலாமாம். இதனால் என்றும் இளமையோடு திகழலாம். ) //

    இது ONLY FOR LADIES ..... OK ..... No problem at all. பெண்கள் அழகாகத் தோன்றினாலே அதைப்பார்க்கும் ஆண்கள் பேரெழுச்சியும் புத்துணர்ச்சியும் பெற்று ஆட்டோமேடிக் ஆக ஒளிர ஆரம்பித்து விடுவார்கள் ...... ஒத்துக்கொள்கிறேன்.

    அக்குபஞ்சர் சிகிச்சையாவது ஆண்கள் + பெண்கள் இருபாலருக்கும் அவர்களால் அளிக்கப்படுகிறதா என்பதையும், அவ்வாறு அளிக்கப்படுமானால் அவர்களின் சிகிச்சை தரும் விலாசம், தொலைபேசி எண், சிகிச்சைக்கான நேரம் முதலியவற்றை வாங்கி பிரசுரித்தால் பலரும் பயனடைவார்களே !

    பதிலளிநீக்கு
  8. மேடம் வணக்கம் அக்யுபங்சர் பற்றிய என் அனுபவத்தைப் பதிவு செய்கிறேன் இளவயது முதலே எனக்கு இடுப்பில் வலி( back pain ) இருந்து க்ரோனிக் ப்ராப்லெம் ஆக இருந்தது. நான் விஜயவாடாவில் பணியில் இருந்தபோது ஒரு நாள் நடக்கவே முடியாத வலி. Ortho விடம் காண்பித்தபோது ஸ்லிப் டிஸ்க் என்று மூன்று வாரம் படுக்கச் சொன்னார் எனக்கிருந்த பணிச்சுமையில் மூன்று நாள் கூடப் படுக்க முடியவில்லை. அந்நிலையில் உடன் பலன் கிடைக்க குண்டூரில் ஒரு அக்யுபங்சர் நிபுணரைக் காட்டினார்கள். நானும் என் மனைவியும் அங்கே போயிருந்தோம் டாக்டரைப் பார்த்தோம் அங்கு சிகிச்சையில் உடல் முழுதும் ஊசி குத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்த சில நோயாளிகளைப் பார்த்தோம். டாக்டர் என் பிரச்சனையை சரி செய்து விடலாம் என்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுபுரிந்து கொண்டது. உடலின் சில பாகங்களில் ஊசி குத்துகிறார்கள் நான் புரிந்து கொண்டபடி இம்மாதிரி ஊசி குத்துவதால் பாதிக்கப்பட்டபாகம் சில நேரத்துக்கு மரத்துப் போகிறது அதனால் வலி தெரியாது இதையே தொடர்ந்து செய்து வந்தால் வலியே இருக்காது என்றும் நாம் சிகிச்சையில் இருக்கும் போது அகலமாகக் கால் வைக்கக் கூடாது என்றும் கொஞ்சமும் தாண்டக் கூடாது என்றும் அறிவுறுத்தினார் அங்கு சிகிச்சைக்கு வந்திருந்தவர்களையும் அவர்கள் மேல் ஊசி குத்தப் பட்டிருப்பதையும் பார்த்த என் மனைவி இந்த சிகிச்சை வேண்டாம் என்று கூறவே வந்துவிட்டோம்
    அண்மையில் ஹீலர் பாஸ்கர் என்பவரது செவிவழி சிகிச்சை என்னும் புத்தகம் படித்தேன் அவர் எந்த நோயும் நம் உடம்பில் ஓடும் ரத்தத்தின் அளவு குறைவதாலும் ரத்தம் சரியான முறையில் இல்லாததாலுமே நோயின் காரணங்கள் என்று கூறி எந்த சிகிச்சையும் பாதிக்கப்பட்ட பாக்த்துக்கு சிகிச்சை செய்வதால் நோய் போகாது என்றும் குறைபாட்டுக்கான இரத்தம் சரியாக வேண்டும் என்றும் கூறுகிறார். மிக நீண்ட பின்னூட்டமாகி விட்டது .மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு சாடர்டே போஸ்ட். அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  10. செந்தில் கே நடேசன் நிச்சயமா எனது ஓட்டு உங்களுக்கே ! :) :) :)

    வாழ்த்துக்கு நன்றி கோபால் சார் விபரம் கேட்டு எழுதுறேன்.

    மிக நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி பாலா சார். ஈஸ்வரியும் சொல்லி இருக்காங்களே நோய் நாடி நோய் முதல் நாடி பார்த்து செய்யணும்னு. போலிகளை நம்பி ஏமாறாதீர். :) :) :) ஹீலர் பாஸ்கர் பற்றி என் தம்பியும் சொல்லி இருக்கான். ஆனா அடிபட்டோ மூட்டுப் பிசகியோ உள்ளபோது ரத்தம் மட்டும் காரணமாகாது என நினைக்கிறேன். அதுக்கு தனியா சிகிச்சை செய்துதானே ஆகணும். அதுபோலத்தான் அக்குபஞ்சர் சிகிச்சையும் இருக்கும்னு தோணுது. ஆங்கில மருந்துகள் போல பக்கவிளைவுகள் இல்லாததால தேவைப்பட்டா ட்ரை பண்ணிப்பார்க்கலாம்னு தோணுது.

    நன்றி துளசிதரன் சகோ :)

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...