எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜவஹர் பள்ளி குழந்தைகள் நடனப் போட்டியில் நடுவராக.

சென்னை ஜவஹர் வித்யாலயாவில் ஆகஸ்ட் 24  , 2011 அன்று குழந்தைகளுக்கான நடனப் போட்டி நடந்தது. அதில் என்னையும், டி சி எஸ்ஸில் பணிபுரியும் வைஷ்ணவியையும், டி நகர் பெங்கால் அசோஷியேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருக்கும் லலிதாவையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.மிக அருமையாக ஆடினார்கள் குழந்தைகள். மூன்று நடனப் போட்டிகள் 3 ஆம் வகுப்பு வரை, 8 ஆம் வகுப்பு வரை ப்ளஸ்டூ வரை ஒரே நாளில் வெவ்வேறு தளங்களில் இடங்களில் நடைபெற்றன. இதில் தொலைக்காட்சி நடிகர் கமலேஷும் வந்திருந்தார் இன்னொரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ( விஜய் டிவி நீயா நானாவில் சந்தித்திருக்கிறோம்.) நலம் விசாரித்தார். எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ..எங்கள் எதிர்டீமில் பேசியவர்களை மறக்க முடியுமா. என்றார். !
ஜட்ஜம்மாக்களே :)
நாட்டுப்புற நடனங்கள் தான் தலைப்பு . அருமையாக ஆடினார்கள் அனைத்துக்குழந்தைகளும். மதிப்பெண் வழங்குவதில் நாம்தான்
 தாராளமாச்சே.. சும்மா அள்ளி அள்ளி வழங்கினோம் . மற்ற இருவரும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஏன்னா ஒருத்தங்க அதுல ஹெட்மிஸ்ட்ரஸ்.. எனவே ரொம்ப கறாரா மதிப்பெண் போட்டாங்க. 

இதில் முதலாம் வகுப்பைச் சேர்ந்த
1. லெக்‌ஷி  - முதலிடம்
2. ஜானவி - இரண்டாமிடம்
3. நந்திதா - மூன்றாமிடம்

மற்றும்

இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த
1. தீபிகா- முதலிடம்
2. பூஜா - இரண்டாமிடம்
3. வார்ஷா - மூன்றாமிடம்

மற்றும்

மூன்றாம் வகுப்பைச்சேர்ந்த
. பாவனா - முதலிடம்
2. ஹ்ரித்திகா - இரண்டாமிடம்
உத்ரா - மூன்றாமிடம்

என அனைத்து இடங்களையும் பெண் குழந்தைகளே தட்டிச் சென்றார்கள். உடல் நளினம் மட்டுமல்ல. நல்ல நடனத்திறமையுடன் குட்டீஸ் ஆடிய காட்சி கண்கொள்ளாக் காட்சி. அதில் ஒரு குட்டிப் பையன்  பாங்க்ரா டான்ஸ் ஆடும்போது  எம் பி த்ரீ ப்ளேயர் ப்ளே ஆகாமல் நின்றுவிட அவரது அம்மா ஓடிச் சென்று காரிலிருந்து லாப்டாப்பை எடுத்துவந்தார். இருந்தும் குட்டிப் பையனால் சரியாக ஆட இயலவில்லை.

இதிலும்  BORN ARTIST  எனப்படும் பிறவிக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஆடிய ஆட்டமே வெற்றி பெற்றது. அன்று பூரா ஒரே குதூகலம்தான் நமக்கும்.  குட்டீஸோடு குட்டீஸாக ஒரே பரவசம்.  இதற்கான பரிசுகள் அனைத்தும் நவம்பர் 14 , 2011 குழந்தைகள் தினத்தில் வழங்கப்பட்டன. நடுவர்களுக்கும் பள்ளி சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கினார்கள்.

நல்ல நிகழ்வில் பங்குபெற அழைத்தமைக்காக நன்றி ரம்யா முரளி மற்றும் சித்ரா.

7 கருத்துகள்:

  1. நடுவராக இருந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தது சந்தோஷமாக உள்ளது.

    வாழ்த்துகள். பாராட்டுக்கள். தங்கள் கையால் பரிசு பெற்ற குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே! ;)))))

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் என்றாலே குதூகலம்தான், அதிலும் இந்த மாதிரி போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம்..!

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள் நடனம் நடுவர் - பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் - கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் - நடுவராக சிறப்பித்து....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளை ரசிப்பது தனி இன்பம். அவர்களின் நடனத்துக்குப் பரிசு கொடுத்து மகிழ்ந்த உங்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் உங்களுக்கும்,சிறுமிகளுக்கும்!! மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  6. நன்றி கோபால் சார்

    நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி மனசாட்சி

    நன்றி கணேஷ்

    நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...