புதன், 18 ஏப்ரல், 2012

விளிம்பற்றவை..

விளிம்பற்றவை:-
**********************
விளிம்பு மடிக்கப்படாதவை
பாதுகாப்பானவை அல்ல.
தம்ளர்களில் தட்டுக்களில்
கீறக்கூடிய அபாயமுடையவை

மலைப்பிரதேசங்களில்
பாதுகாப்பு விளிம்புகளைப் போல
திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.


பொருளாதார விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் ஏழைகளாகவும்
சமூக விளிம்புகளில் ஒதுக்கப்பட்டவர்கள்
பாலியல் தொழிலாளியாகவும்
பால் மதிப்பீடு விளிம்புகளில்
தள்ளப்பட்டவர்கள் பால் சுயம்புகளாகவும்
ஒடுக்குமுறை விளிம்புகளில்
ஒதுக்கப்பட்டவர்கள் சமூக விரோதிகளாகவும்

விளிம்புநிலை மனிதர்களை
விளிம்பு அற்ற வெளியில்
வீசிக் கொண்டிருக்கிறது சமூகம்.

தம்ளர் விளிம்புகளில் ஏடுகளையும்
தட்டு விளிம்புகளில்
கருவேப்பிலையும் இன்னபிறவும்..

விளிம்பு மடக்கப்பட்டவை
பலசமயம் பாதுகாப்பானவை
சில சமயம் மழுங்கடிப்பட்டவை.

டிஸ்கி :- இந்தக் கவிதை வல்லமை மின்னிதழில் 8.3.2012 மகளிர் தினத்தில் வெளியானது
 

12 கருத்துகள் :

மனசாட்சி™ சொன்னது…

வாவ்..... விளிம்பு....தெளிவாக சொல்லுது கவிதை.

படைப்பாளிக்கு பாராட்டுக்கள் பகிர்வுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//விளிம்பு மடக்கப்பட்டவை
பலசமயம் பாதுகாப்பானவை
சில சமயம் மழுங்கடிக்கப்பட்டவை.
//

சூப்பரான வரிகள்.
அருமையான கருத்துள்ள கவிதை.
பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மனசாட்சி

நன்றி கோபால் சார்

Thenammai Lakshmanan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கணேஷ் சொன்னது…

விளிம்புநிலை மனிதர்களை
விளிம்பு அற்ற வெளியில்
வீசிக் கொண்டிருக்கிறது சமூகம்
-யப்பா... என்ன வரிகள்! எப்போதும் போல் உங்கள் எழுத்தாளுமையை வியக்கிறேன் தேனக்கா. பிரமாதம்! (கொஞ்ச நாளா தலைமறைவாயிருந்ததுக்கு ஸாரி. நிறைய ப்ராப்ளம்ஸ்! இனி தம்பி உங்களுடன் வழமை போல்...)

வரலாற்று சுவடுகள் சொன்னது…

///திருமண விளிம்புக்குள் நிற்பது
உடலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது///

அருமையான வரிகள் அக்கா..,

திருமண பந்தத்திற்க்குள் நுழைந்த பிறகுதான் ஆண்களின் நெஞ்சில் அமைதிகுடிகொள்கிறது, தந்தை என்ற பட்டம் கிட்டிய பிறகு ஆண்களிடம் காணப்படும் பெரும்பாலான குறைகள் களைந்தெறியப்பட்டுவிடுகின்றன..!

சென்னை பித்தன் சொன்னது…

அரிய சிந்தனையோட்டம்!அருமையான கவிதை.

krishy சொன்னது…

அருமையான பதிவு

வாழ்த்துகள்..

உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் DailyLib

To get the Vote Button

தமிழ் DailyLib Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் DailyLib

பெயரில்லா சொன்னது…

NEW THINKING - DIFFERENT APPROACH

CONGRATS

KARUNAKARAN

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அற்புதம். வாழ்த்துக்கள் தேனக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி வரலாற்றுச் சுவடுகள்

நன்றி சென்னைப் பித்தன்

நன்றி கிருஷி

நன்றீ தமிழ் டெய்லி லைப்

நன்றி கருணாகரன்

நன்றி புவனா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...