எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

களங்கமில்லாமல்..

மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..

எப்போதாவது
நீயறியாமல்
உன்னை அறிய நேர்ந்தால்
அன்று தெப்பம்தான்
திருநாள்தான்
தேரோட்டம்தான்
எங்கே கண்டுபிடித்தாய்
என்னை..?
ஏன் இன்னும்
கண்ணாமூச்சியில்..?
என்னைத் தொலைக்காமல்
களங்கமில்லாமல்
உன்னைக் கண்டுபிடிப்பேனோ
என்ற கவலையிலும்
ஆர்வத்திலும் நான்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை மே 8, 2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

6 கருத்துகள்:

 1. ரசித்தேன்

  படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 2. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  திண்ணை வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பார்த்தேன்..படித்தேன்..ரசித்தேன்..சிறப்பான பகிர்வு சகோ..வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

  சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

  பதிலளிநீக்கு
 4. If it is taken a little more deeper - your poetry gives a feeling to me as if Paramathma is awaitng the Jeevatma to get back. Thanks

  Lakshmanan

  பதிலளிநீக்கு
 5. நன்றி மனசாட்சி

  நன்றி கோபால் சார்

  நன்றி குமரன்

  நன்றி லெக்ஷி

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...