திங்கள், 30 ஜனவரி, 2012

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

வலைப்பதிவ தோழமைகளுக்கு,

இன்று கலைமகள், தினமணி போட்டிகளுக்கு சிறுகதை அனுப்ப கடைசி நாள். 31. 1. 2012 உடன் முடிகிறது. இன்று உங்களிடம் கைவசமுள்ள கதைகளை தினமணி ( 3 பக்கத்துக்கு மிகாமல்) , கலைமகள் ( 6 பக்கத்துக்கு மிகாமல்) முடிந்தவரை இன்று கூரியர் சர்வீசிலாவது அனுப்பி விடுங்கள். பரிசுத் தொகை அதிகம். கலைமகள் 50,000/- மற்றும் தினமணி முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000.

இந்த நினைவுறுத்தலை ஜனவரி மத்தியில் ஒரு முறை செய்ய எண்ணி இருந்தேன். என் வேலைப் பளுக்களாலும், புத்தக வெளியீட்டிலும், ப்ரயாணங்களாலும் தகுந்த சமயத்தில் நினைவுறுத்த இயலாமல் போயிற்று.

கலைமகள் போட்டி விவரம்.:-
*******************************

கலைமகளில் சிறுகதைப் போட்டி ( ரூபாய் 50,000/-)


கலைமகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.நூற்றாண்டு விழாவை ஒட்டி சிறுகதைப் போட்டியை அவரது குடும்பத்தினர் நடத்த உள்ளனர். பரிசு பெற்ற சிறுகதைகள் ஜூன் ஜூலை 2012 ஆம் இதழ்களில் பிரசுரிக்கப்படுமாம். முதல் பரிசு ரூ. 50,000/-. இரண்டாம் பரிசு ரூ.25,000/-. பிரபலமானவர்கள், புதியவர்கள் கலந்து கொள்ளலாமாம். 6 பக்கங்கள் ., ஒரு பக்கம் மட்டுமே வரும்படி எழுதி அனுப்ப வேண்டுமாம். டைப் பண்ணி அனுப்பினால் நலம். ஆனா ஈ மெயில் ஐடி கொடுக்கலை. போஸ்டல் மூலமாதான் அனுப்பனும். கடைசி தேதி 31, ஜனவரி 2012.

அனுப்ப வேண்டிய முகவரி:-

கா. ஸ்ரீ. ஸ்ரீ. நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டி.
கலைமகள்,
1, சமஸ்கிருத கல்லூரி சாலை,
சென்னை - 600 004.
***********************************************************

தினமணி போட்டி விவரம்:-
*********************************

தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்தும்

சிறுகதைப் போட்டி - 2012


நம் நாட்டுப் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் முதலியவற்றுக்கு முரண்படாத
புதுமைக் கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி கதிரில் 3 பக்கங்களுக்கு மிகாத அளவில் படைப்புகள் இருக்க வேண்டும்.

முதல் பரிசு: ரூ.5000
இரண்டாம் பரிசு: ரூ.3000
மூன்றாம் பரிசு: ரூ.2000

கடைசி நாள்: 31-1-2012
பரிசு நாள்: 19-2-2012 (காரைக்குடி)

முகவரி:
தினமணி - காரைக்குடி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டி - 2012
29, இரண்டாவது முதன்மைச் சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600058


வலைப்பதிவர்கள் எப்படியும் சில கதைகளை ட்ராஃப்டில் போட்டு வைத்திருக்கலாம். எனவே முடிந்தவரை முயற்சி செய்து அனுப்ப பாருங்கள்.
வலைப்பதிவர்களில் யாராவது இந்தப் பரிசுகள் பெற்றால் மகிழ்ச்சியாய் இருக்கும். வாழ்த்துக்கள் மக்காஸ்..:)

7 கருத்துகள் :

சசிகுமார் சொன்னது…

போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

கடைசி தேதியை ஞாபக படுத்திய தேனக்கா உங்களுக்கும் மிக்க நன்றி... ஜெயிச்சுட்டு வாங்கப்பா...

ராமலக்ஷ்மி சொன்னது…

டிராஃப்டில் ஒன்றுமில்லை:(! சொல்லியிருக்கும் ஆலோசனை நன்று. இந்தப் பதிவு கடைசி நிமிடத்தில் பலரையும் எழுத வைக்கும், ஹி, என்னையும் சேர்த்து. முயன்றிடுகிறேன். நல்ல பகிர்வு. நன்றி தேனம்மை.

மாயன்:அகமும் புறமும் சொன்னது…

தினமணியும் மெயில் ஐடி கொடுக்கவில்லையா? நன்றி நினைவுபடுத்தியற்கு

கணேஷ் சொன்னது…

இந்தக் கலைமகள் போட்டிக்கு இரண்டு மூன்று சிறுகதைகளாவது அனுப்ப மிக விரும்பினேன். ஒன்றே ஒன்றுதான் அனுப்பியிருக்கிறேன். சொந்த சிக்கல்கள் காரணமாக மேலும் எழுத முடியாமல் போயிற்று. முன்பு சொன்னமைக்கும், இப்போது நினைவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றி தேனக்கா!

ஜிஜி சொன்னது…

ஞாபகப்படுத்தியதற்கு நன்றிக்கா.
கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சசி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி மாயன்

நன்றி கணேஷ்

நன்றி ஜிஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...