எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

கடல் அடையும் விளையாட்டு...

அலங்காரத்தோடும்
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..

வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..


வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது..
பல மணி நேரம் ..வீடே
அனல் கோப்பையாய்..

துணிகள்., பாத்திரங்கள்.,
குப்பைகள் போல் சோர்ந்து...
சுவற்றோரம் முடங்கி..,

ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடுவந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் .. வாழ்வும்...

டிஸ்கி :- இது 24 . 10 . 2010 ., திண்ணையில் வெளிவந்துள்ளது..

12 கருத்துகள்:

  1. தாம்பத்யம் கவிதையை போட்டு இருக்கலாம்,

    பதிலளிநீக்கு
  2. நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கடல் அடையும் விளையாட்டு.. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. //வீடெங்கும் இறைந்து
    கிடந்தன வார்த்தைகள்...,
    வலித்த தோளோடும்
    துடைத்தும் தீராமல்..//
    கவிதை அருமை. வலியை அப்படியே உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  5. கடல் அடையும் விளையாட்டு அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. / வீடெங்கும் இறைந்து
    கிடந்தன வார்த்தைகள்...,
    வலித்த தோளோடும்
    துடைத்தும் தீராமல்.. /

    :(

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  7. வீடெங்கும் இறைந்து
    கிடந்தன வார்த்தைகள்...,
    வலித்த தோளோடும்
    துடைத்தும் தீராமல்..

    ......அருமையான வரிகள், அக்கா..... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஜோதிஜி., ராம்ஜி., யாதவன்., ராமலெக்ஷ்மி., வெறும் பய., சசி., ஜெயந்தி., கோமதி., டி வி ஆர்., வினோ., சித்ரா

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...