எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 மார்ச், 2010

உபரி

பூட்டின பக்கத்து வீட்டின்
தென்னை முதிர்ந்து காய் உதறியது
எல்லைசுவர் தாண்டி...
எடுக்கவா .,உபயோகிக்கவா.,
தூக்கித் திரும்ப எறியவா.,
மண்ணிலேயே கிடந்தழியட்டுமா.,

யாருக்கும் கொடுக்கலாமா ..
குழப்பத்தில்... கோபம் கூட ...
தென்னையிடம்..
எங்கோ ஈசல் பொறித்து
இலையில் பொறுக்கித்
தின்னும் குழந்தை
தொலைக்காட்சியில்....

38 கருத்துகள்:

  1. பாவம் குழந்தை, பதிவு செய்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. //கோபம் கூட ...
    தென்னையிடம்..//

    //இலையில் பொறுக்கித்
    தின்னும் குழந்தை
    தொலைக்காட்சியில்....//


    கோபம் அதன் அன்னையிடம்ம்..,

    பதிலளிநீக்கு
  3. பசிக்குக் கிடைக்காமல், பறிக்காமல் உதிர்கிறது.இதுதான் விதியோ?

    வலிக்கிற நிஜம்.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  4. அன்றாடம் நடக்கும் நிகழ்வை வைத்தே ஒரு கவிதை பிரமாதம்,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கவிதையில் மாற்றம் தெரிகின்றது.

    பிடிபட இரண்டு தடவை படிக்க வேண்டியுள்ளது.

    அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றீர்கள்.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வாசித்து முடித்து வலியுடன் நிமிருகையில் இன்னும் முகத்தில் அறைகிறது தலைப்பு.வெகு நன்று தேனம்மை.

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பனே

    வோட்டும் போட்டாசு

    பதிலளிநீக்கு
  8. கவிதையில் அவலத்தை பதிந்த விதம் அருமை !

    பதிலளிநீக்கு
  9. தலைப்பு, கவிதை இரண்டும் அருமை..:)

    பதிலளிநீக்கு
  10. பக்கத்து வீடு எத்தனை நாளா பூட்டிக் கிடக்குது? தீர்ப்பு அதற்க்கேற்று சொல்லப்படும்.

    பதிலளிநீக்கு
  11. இப்படி பலப்பல

    டென்மார்க்கில் அதிகப்படியாக கறக்கப்பட்டு விற்பனையாகாத பசும்பாலை கடலில் ஊற்றி விடுவார்கள் எனக் கேள்விப்பட்டேன்.. கவலைதான்..

    இந்தியாவிலேயே எத்தனையோ சேமிப்பறைகளில் அரிசியும் கோதுமையும் அழுகுவதுண்டு என்று கூறப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  12. இரு வேறு நிகழ்வுகள்... இணைத்த விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  13. இந்த கவிதை தலைப்பும், கவிதையின் கருவும், உங்கள் சிந்தனை கருத்தும் ...... யோசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. உபரி தேங்காய் மட்டுமல்ல சிலர் உண்ணும் உணவை கூட வீண் செய்கின்றனர் பணத்திமிரில்...

    கவிதை கனலாய்....!

    பதிலளிநீக்கு
  15. நச்சுனு சொன்னீங்க...அந்த வறுமையை...

    பதிலளிநீக்கு
  16. வீணாப்போறதுக்கு உபயோகப்படுத்திக்கணும்.இங்க நாங்க அப்படித்தான். தென்னங்காய்க்கு பதிலா அவங்க இருக்கும் போது ஒரு மாங்காய் கொடுத்துட்டாப்போச்சு. தென்னங்காயால ஒரு அழகான கவிதை கிடச்சிடுச்சு.

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமை...! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  18. வறுமையும், அதன் இயலாமையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் தேனம்மை...

    ரொம்ப நல்லா இருக்கு...

    வாழ்த்துக்கள்.........

    பதிலளிநீக்கு
  19. தென்னை என்ன தப்பு செய்தது தேனம்மை.
    மரம்போலும் மக்கட் பண்பில்லாத நாம் தான் தப்பு செய்கிறோம்.

    விழா விருந்துகளிலும் ஹோட்டலிலும் வீணாகும் உணவை நினைத்து நாம் தான் வருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. நம் வீட்டிலேயே வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.. நாம் அறியாமலே..

    பதிலளிநீக்கு
  21. நன்றி
    @நேசன்
    @சை கொ ப
    @சிவாஜி சங்கர்
    @பாலா சார்
    @ சுரேஷ்

    பதிலளிநீக்கு
  22. நன்றி சுந்தரா உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    பதிலளிநீக்கு
  23. நன்றி
    @சசி
    @அண்ணாமலையான்
    @ராகவன் நைஜிரீயா

    பதிலளிநீக்கு
  24. நன்றி
    @சிவசங்கர்
    @பலா பட்டறை சங்கர்
    @வெற்றி

    பதிலளிநீக்கு
  25. நன்றி
    @நாய்க்குட்டி மனசு
    @பட்டியன்
    @தமிழ் உதயம்

    பதிலளிநீக்கு
  26. நன்றி
    @ராம்
    @ அன்புடன் மணிகண்டன்
    @ ஸாதிகா
    @ சித்ரா
    @ஹென்றி

    பதிலளிநீக்கு
  27. நன்றி
    @ BONIFACE
    @ வசந்த்
    @ அரும்பாவூர்
    @ புலவன் புலிகேசி
    @ ஷாந்தி லெக்ஷ்மணன்

    பதிலளிநீக்கு
  28. நன்றி
    @ அறிவுஜிவி
    @கோபி
    @ கண்மணி
    @ரிஷபன்

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...