எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 நவம்பர், 2022

தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

 156.


3101. பாறைகள் சேர்ந்து போய்விடுகின்றன. சுமப்பதை விட வினோதமானது தான் ஒரு ஹெர்குலிஸ் என்றும் அதைச் சுமப்பது தன் கடமையென்றும் நினைத்துப் புளகாங்கிதமடைவது.


3102. இப்பிடி ஒவ்வொருத்தரா லெஃப்டு லெஃப்டுன்னு போயிக்கிட்டு இருந்தா இந்த குரூப்புத்தான் என்னத்துக்குங்குறேன். கடோசில நானும் அட்மினும்தான் அதுல லெஃப்ட்டு 😃 


3103. அருமை....ஏற்கனவே படித்தது என்றாலும் விகடன்  இதழில் அச்சில் படிப்பது இன்னும் மகிழ்ச்சியை ஊட்டுகிறது. சிறுவயது முதற்கொண்டே மொழிபெயர்ப்பு எழுத்துக்களோடு  எனக்கு ஒரு ஆத்மார்த்தமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. கதா பாத்திரங்களின் பெயர்கள் அன்னியமாக இருப்பதாலோ என்னமோ...

உங்கள் முயற்சியை நான் பாராட்டுவது என்பது சூரிய ஒளியைத் தெருவிளக்கு பாராட்டுவது போல.

https://www.vikatan.com/lifestyle/miscellaneous/my-vikatan-article-about-nilavarai-kuripugal-book


விகடனில் வெளியான என்னுடைய நிலவறைக் குறிப்புகள் விமர்சனத்தைப் படித்த நண்பர் ஒருவரின் கருத்து மேலே :) 


3104.பக்திப் பாடல்கள் பரிபாடல் போல அநேகம் பதிக முறையில் அமைந்தவை. ஒத்தாழிசைக் கலிப்பாவிலிருந்து உருவானது. தாழிசை, துறை, விருத்தம் ஆகியவற்றில் அமைந்தவை. எதுகை மோனை , சந்தம் கொண்டவை.  

#மகளிரும் பாடும்படி அமைந்தவை திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத்தோணோக்கம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல்.


3105. என் எழுத்து குறித்து எப்போதும் வெளி உலகுக்கு தன் பேச்சாலும் எழுத்தாலும் எடுத்துக்கூறி வரும் தோழியர் ஏராளமான நூல்களின் ஆசிரியர் வலைப்பதிவர் தேனம்மைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

-- நன்றி பாலா. 


3106. பட்டுவேட்டி ராமனாதன் செட்டியார் என்பவர்  எழுதிய பாரம்பரியம் பற்றிய நூலுக்குச் சில நாட்கள் முன்புதான் யூ ட்யூபில் நூல் பார்வை கொடுத்திருந்தேன். . சிறிது நாட்களில் அவரின் மறைவுச் செய்தி கேள்வியுற்றேன். இணையின் பெருமையையும் பிரிவாற்றாமையையும் கூறி இருந்தார் நூலில். இணையுடன் இனிது சேர பிரார்த்தனை.


3107.வீட்டில் இருக்கும் வித்யாசமான மனிதர்களை விட வெளியுலகம் ஒன்றும் வித்யாசமானதல்ல.


3108. நேற்று மதுரை மீனாக்ஷி தரிசனம். மதிய உணவை ட்ரைவரிடம் எடுத்து வர சொல்லிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தோம். கோயிலில் நடந்து நடந்து ரொம்ப களைப்பு. வாசலில் நின்றிருந்த  ட்ரைவரை அங்கே வேலை செய்த அம்மா உட்காரச் சொல்ல அவர் படியில் அமர்ந்திருக்கிறார்.  நாங்கள் சென்றபோது இருந்தவர் வேறு. அதன்பின் ஒருவர் வந்து ட்ரைவரை இங்கே எல்லாம் உட்காரக் கூடாது என்று சத்தம் போட அவர் மிகவும் வருந்திச் சென்று விட்டார்.நாங்கள் கிளம்ப ஃபோன் செய்தபோது எடுக்கவில்லை. ஒருவழியாக அவரே மனச்சமாதானம் செய்து கொண்டு வந்ததாகப் பின்னர் சொன்னார். யார் இங்கே உட்கார்ந்தாலும் நிர்வாகிகள் கேமிரா மூலம் பார்த்துக் கேள்வி கேட்பார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அவர் யாரையோ சொல்கிறார் என நினைத்து வெளியே வந்தோம். எங்கள் பின்னேயே வந்த அந்த அம்மா தான் தான் ட்ரைவரை உட்கார சொன்னதாகவும் அதனால் அவரிடம் தன் மன்னிப்பைத் தெரிவிக்கும்படியும் கூறினார்.

#காப்பாளர் கூறியது நியாயமே எனினும் சிறிது தன்மையாகக் கூறி இருக்கலாம்.


3109. தன் ஊழியர்கள் மேல் கருணை கொண்டு கொரோனா காலத்திலும் செயல்பட்ட மெய்யம்மையின் திறம் போற்றுதலுக்குரியது. 

#முதல்வரின கையால் பரிசுபெற்றது சிறப்பு. வாழ்த்துக்கள் ரேவதி மெய்யம்மைக்கும், பகிர்ந்த அண்ணன் அவர்களுக்கும், திரு முத்துராமன் அவர்களுக்கும் 👏👏👏💐💐💐



3110. இந்த சிறுவர் நூல்கள் விலை மொத்தமே 790/- ரூபாய்தான். இதில் 20 பர்சண்ட் கழிவு உண்டு. இதுபோல் இன்னும் பல நூல்களுண்டு. நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஈரோடு புக் ஃபேரிலிருந்து என் கணவர் எங்கள் ஒன்றரை வயசு குட்டிப் பேரனுக்காக வாங்கி வந்துள்ளார். ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்களும் வாங்கி உள்ளேன் . 

#புத்தகம் தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்பு கொள்க👇 9383982930 - பாரதி பதிப்பகம்



3111.என்னுடைய லாக்கரில் இருக்கும் ஒப்பற்ற சொத்து



3112.இந்த சுதந்திர தினத்தை "ஒப்பற்ற இந்தியப் பேரரசி"களுடன் மகிழ்வோடு கொண்டாடுவோம்.


3113. ஈரோடு புத்தக கண்காட்சியில் சகோதரி தேனம்மை எழுதிய ஒப்பற்ற இந்திய அரசிகள் நூல் பாரதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது.. விஸ்வம் டிவிஎஸ்  பெற்றுக் கொண்டார்..

---- நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் தாமோதர் சந்துரு அண்ணா. நன்றி விஸ்வம் சார் 🙂


3114.. Maa Thuje Salam. Janda Uncha Rahey Hamara


3115. தேசப்பற்று மிக்க என் தாய் தந்தை இன்று ஒரு சஷ்டியப்த பூர்த்தி நிகழ்வில் தேசியக் கொடியுடன் .


3116.அந்நிய வியாதிகளை பகிஷ்கரிப்பது எப்படி ?

இருமல், காய்ச்சல். எது வந்தாலும் கொரோனாவோ என்று சம்சயம்.

#மூக்குல மூச்சே வரலியாம். நல்லவேளை மாத்திரை கொடுத்து ஆக்ஸிஜன் அளவ அதிகப்படுத்தினாங்க. இதுல தமிழே வரலியேன்னு பெருங்கவலை சோழ வேங்கைக்கு.. 

3117.ரத்தத்தின் நிறம் சிவப்பு.

#டெஸ்டுக்காக ரத்தம் எடுக்கும்போதெல்லாம் மயக்கம் வருது :(

நன்றி மக்காஸ் நேற்று மாலை வீடு திரும்பினேன். இன்று ஓரளவு பரவாயில்லை.  உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி


3118. பூ மிதிக்க வேண்டாம். என்னோட ஒரு புஸ்தகமாவது படிச்சிட்டு கருத்து சொல்லுங்க. போதும்


3119. என்னம்மா.. எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அழகா இருக்குங்குறீங்க. பிடிச்சா கூட்டிட்டு வந்து வீட்ல வச்சுக்குங்க... என்ன ஏன் கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கடுப்பேத்துறீங்க.

அதுக்குன்னு சிம்ரன் மாதிரி பொண்ணை நான் செஞ்சுதான் கொண்டாரணும். சீக்கிரம் செட்டிலாவுங்கடா. பிறந்ததுலேர்ந்து சமைச்சிக்கிட்டே இருக்க மாதிரி இருக்கு.

என்னது.. சிம்ரனா.. பாத்தீங்களா.. ஒங்களுக்குப் பிடிச்சா எங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறீங்களே.. இதுதான் ஒங்க ப்ராப்ளம்.. 

#டேய்.. திருந்துங்கடே.. எங்களுக்கே சஷ்டியப்த பூர்த்தி வந்திரும்போல இருக்கு.


3120. நரியங்குடி கருங்குளம் ஸ்ரீ ஆதினமிளகி ஐயனார் காட்டுக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகத்தில் நாட்டார் கொண்டுவரும் சீர்

472.நரியங்குடி கருங்குளம் l  ஸ்ரீ ஆதினமிளகி ஐயனார் காட்டுக் கருப்பர் கோயில் l கும்பாபிஷேகம்

https://www.youtube.com/shorts/X9tims2_gB4




4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.






139. 

140. 

141. 

142.



1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...